scorecardresearch

தமிழ்நாட்டில் 500 மதுபான கடைகள் மூடப்படும்; அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு 1,100 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாய், உதவியாளர்களுக்கு 840 ரூபாய் மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

Wine shop
Tasmac

தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், 500 மதுபான சில்லரை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: சட்டசபை ஹைலைட்ஸ்: நான் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை – இ.பி.எஸ் புகார்; சபாநாயகர் பதில்

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (ஏப்ரல் 12) மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியான 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும். இந்த ஆண்டு 500 டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார்.

மேலும், டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு 1,100 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாய், உதவியாளர்களுக்கு 840 ரூபாய் மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Senthil balaji says 500 tasmac shops will be closed in tamilnadu

Best of Express