Advertisment

திருமண மண்டபங்களில் ஒருபோதும் மது பயன்பாட்டிற்கு வராது; செந்தில் பாலாஜி உறுதி

அரசு குறித்து தவறாக பதிவிடுபவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்; கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

author-image
WebDesk
New Update
Senthil Balaji

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி

ஒருபோதும் திருமண மண்டபங்களில் மது பயன்பாட்டிற்கு வராது என கெஜட்டில் திருமண மண்டபங்களில் மது பயன்பாடு இருப்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார்.

Advertisment

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படியுங்கள்: திருமண மண்டபம் , விளையாட்டு மைதானங்களில் மது அருந்த சிறப்பு அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

அந்த சந்திப்பில் அவர் கூறியதாவது, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அது போன்ற அனுமதி வழங்கப்படாது. எந்த நிகழ்ச்சிகளிலும் மதுபானங்கள் பயன்படுத்த அனுமதி அரசு வழங்காது. முதலீட்டாளர்கள் மாநாடு, ஐ.பி.எல் போன்ற சர்வதேச நிகழ்வுகளில் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் எல்லா மாநிலங்களும் உள்ளது. சர்வதேச போட்டிகள் நடைபெற வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள சிறப்பு அனுமதி தேவை உள்ளது. சென்னையில் மற்ற மாநிலங்களைப் போல ஐ.பி.எல்.,க்கு அனுமதி வாங்கியுள்ளனர்.

டெண்டர் மூலம் ரூ.1312 கோடி சேமிப்பாகியுள்ளது. மின் பயன்பாட்டின் உச்சபட்ச தேவை இருந்தாலும், இன்னும் கூடுதலாக மின் தேவை ஏற்பட்டாலும் சமாளிக்க மின்வாரியம் தயாராக உள்ளது. சில பேர் அரசின் மீது அவதூறு பரப்ப பொதுவான கருத்தை பரப்புகின்றனர். ஒருவர் ட்விட்டரில் புகார் போடும் பொழுது மின் இணைப்பு எண்ணுடன் பதிவிட வேண்டும். மின் இணைப்புடன் பதிவிட்டால் இரண்டு நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மின் தேவையில் எந்த பாதிப்பும் இல்லை சீரான மின் வினியோகம் வழங்கப்படுகிறது.

ஊழல் பட்டியலை வெளியிடுவதற்கும் சொத்து பட்டியலை வெளியிடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. குறைந்தபட்ச அறிவு கூட மண்டையில் இல்லாமல் வெளியீடு செய்துள்ளார். சொத்துக்கள் கணக்கில் உள்ளது. சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது தானே வார்த்தை வித்தியாசத்தை படித்து தெரிந்து கொள்ள சொல்லுங்கள்.

சில பேர் களத்தில் நின்று இயக்கத்தை வளர்க்க முயற்சி செய்கின்றனர். சில பேர் ஊடகம் மூலம் விளம்பரத்தை தேட முயற்சிக்கின்றனர். ஊடகத்தின் நேரலைகளை கட் பண்ணி எடிட் பண்ணி காட்டுகின்றனர். செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உண்மைத்தன்மை அறிந்து வெளியிட வேண்டும். அரசு குறித்து தவறாக பதிவிடுபவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று மாலை அரசின் சார்பில் 12 மணி நேர வேலை தொடர்பாக பேச்சுவார்த்தை உள்ளது.

மெட்ரோ, செம்மொழிப் பூங்கா போன்ற பல திட்டங்களை சென்னைக்கு இணையாக கோவை வளர்ச்சிக்கு முதலமைச்சர் கவனம் செலுத்துகிறார்.

ரபேல் வாட்ச் பில் கேட்டேன் துண்டு சீட்டை கேட்கவில்லை. அவர் காண்பித்தது பில் தானா?. முதலிலேயே சேரலாதன் மூலம் வந்தது என தெரிவித்திருக்க வேண்டும். 3.5 லட்சம் வாட்சை ஏன் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். ஒரு பொய்யை மறைக்க பல பொய்.

திருமண மண்டபங்களில் மது பயன்பாடு தொடர்பாக கெஜட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, எந்த இடங்களிலும் அதுபோன்ற அனுமதி வழங்கப்படாது அதில் தெளிவாக இருக்கலாம். அந்தத் துறையை முதலமைச்சர் என்னிடம் கொடுத்துள்ளார். ஒருபோதும் அதற்கான அனுமதி வழங்கப்படாது. முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Tamilnadu V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment