Annual solar eclipse : வருடத்திற்கு ஒருமுறை வரும் சூரிய கிரகணம் இந்த முறை ரொம்பவும் ஸ்பெஷலானதாக வருகிறது. ஆம், 75 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று தான் ( டிசம்பர் 26ம் தேதி) தென்னிந்தியாவில் இந்த அரியவகை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதற்கு பிறகு, இந்த மாதிரியான சூரிய கிரகணம், 2031ம் ஆண்டு தான் நிகழும் எனக் கூறப்படுகிறது.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா??
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதே சூரிய கிரகணம் ஆகும். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டிற்கும் நடுவில் வரும் சந்திரன், பூமியில் இருந்து சூரியனை பார்க்க முடியாதபடி மறைத்துக் கொள்ளும். நாளை ( 26ம் தேதி) ஏற்படவுள்ள சூரிய கிரகணம் ”வளைவு சூரிய கிரகணம்” என்று அழைக்கப்படுகிறது. அதாவது சூரியனை முழுமையாக மறைத்துக் கொள்ளாமல் நடுப்பகுதியை மட்டுமே மறைத்துக் கொள்ளும்.
சூரிய கிரகணம் ஏற்படக் கூடிய நாள் மற்றும் நேரம்:
2019 ம் ஆண்டின் கடைசி கிரகணமாக இந்த சூரிய கிரகணம் டிசம்பர் 26ம் தேதி நடக்க உள்ளது.
இந்திய நேரப்படி
டிசம்பர் 26, காலை 7.59.53 மணிக்கு சூரிய கிரகணம் துவங்குகிறது
காலை 09:04:33 முழு கிரகணம் தென்படும்
காலை 10:47:46 சூரிய கிரகணம் உச்சம் பெறும்
நண்பகல் 12:30:55 மணியளவில் முழு கிரகணம் முடிவு பெறும்
பிற்பகல் 13:35:40 மணியவளில் பகுதி கிரகணமும் முடிவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் பற்றிய உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதில்
இந்த அரிய வகை சூரிய கிரகணம், சவுதி அரேபியாவில் துவங்கி கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தியாவின் தென்பகுதிக்குள் நுழைந்து, இலங்கையின் வடக்கு பகுதி, இந்தியப்பெருங்கடல் வழியாக இந்தோனேஷியாவில் நுழைந்து பின் பசிபிக் கடலில் முடிவடைகிறது.
முழு சூரிய கிரகணம் காண ரெடியா? பார்ப்பதற்கு முன் கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
பகுதி சூரிய கிரகணம், ஆசியாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில் தெரியும்.
இந்த வருடத்தின் இறுதி சூரிய கிரகணம்… எப்போது துவங்கி எப்போது நிறைவடைகிறது?
தமிழகத்தில்,ஊட்டி, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தெரியும்.இதில் அதிகபட்சமாக ஊட்டியில் 3 நிமிடம் 13 வினாடிகள் தெரியும்.காலை 08:06 மணிக்கு ஆரம்பிக்கத் துவங்கும். கிரகணம் 9:27 லிருந்து 9:30 வரை முழு வளை கிரகணம் தெரியும் பின் 11:10 மணியளவில் முடிந்து சூரியன் பழைய நிலைக்கு திரும்பும்.
சென்னையில், பகுதி சூரியகிரகணம் மட்டுமே தெரிய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சவுந்தரபெருமாள் தெரிவித்துள்ளார். சூரிய கிரகணத்தை காண, பிர்லா கோளரங்கத்தில் போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த வளைவு சூரியகிரகணம், 2010ம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்தது, அடுத்த வளைவு சூரிய கிரகணம், 2020 ஜூன் 21ம் தேதி நிகழும், இந்த கிரகணம் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களில் மட்டுமே தெரியும். நாளை தெரிய உள்ளதை தவிர்த்து தமிழக மக்கள், இந்த வளைவு சூரிய கிரகணத்தை காண 2031ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.
கிரகணம் தென்படும் நேரம் ( ஊர்கள் வாரியாக)
எப்படி பார்க்கலாம்
சோலார் ஃபில்டர் அல்லது சூரிய வடிகட்டி எனும் சூரிய கிரகணத்தைப் பார்க்க கூடிய கண்ணாடியைப் பயன்படுத்தி சூரிய கிரகணத்தை கண்டு ரசிக்கலாம். இந்த கண்ணாடி சூரிய ஒளியில் ஒரு லட்சத்தில் ஒரு பதியை மட்டும் தான் அனுப்பும். அதில் சாதாரணமாக பார்த்தால் எதுவும் தெரியாது. ஆனால் சூரியனைப் பார்த்தால் சூரிய கிரகண நிகழ்வு நன்றாக தெரியும்.
சூரிய பிம்பத்தைத் திரையில் ஏற்படுத்துவது: ஒரு பந்து போன்ற அமைப்பை உருவாக்கி அதில் ஒரு கண்ணாடி மூலம் சூரியனின் பிம்பத்தை திரையில் அல்லது சுவரில் விழ வைத்து அதில் கண்டு ரசிக்கலாம்.
சூரிய கிரகணம் ஒரு அற்புதமான நிகழ்வு. அதை கண்டு களிப்பது நல்லது. இருப்பினும் எக்காரணம் கொண்டும் வெறும் கண்ணால் சூரிய கிரகணத்தைப் பார்ப்து தவறு. அதனால் கண்களுக்கு ஆபத்தை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.