சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அழகாகவுண்டனூரைச் சேர்ந்தவர் தங்கவேலு. மனைவி மாது. இவர்களின் மகன் சக்திவேல் தற்போது ராஜஸ்தானில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.
திமுக தொண்டரின் கைதுக்கு முன்னாள் அமைச்சர் காரணமா? மனைவி புகார்
இந்நிலையில், சக்திவேலின் தாய் மாது, உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். தாய் இறந்த செய்தி கிடைத்தவுடன் ஊர் திரும்ப சக்திவேல் முயன்றார். ஆனால், நாடு முழுவதும் கடும் ஊரடங்கு அமலில் இருப்பதனால், அவரால் தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.
இதனால், உறவினர் ஒருவர் வீடியோ கால் மூலம் இறுதிச் சடங்கை நேரலை செய்ய,தாயின் உடலைப் பார்த்து, சக்திவேல் கதறி அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”