சென்னை -மதுரை தேஜஸ் விரைவு ரயிலை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
தேஜஸ் விரைவு ரயில்:
சர்வேதேச தரத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட தேஜஸ் ரயில் பெட்டிகள், சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப்-ல் கடந்த ஆண்டு நவம்பரில் தயாரிக்கப்பட்டன. பிரதமர் நரேந்திரமோடி பல நலத்திட்டங்களை தொடங்கி வைக்க மற்றும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்று (1.3.18) கன்னியாகுமரி வருகிறார்.
அப்போது இந்த தேஜஸ் ரயில் சேவையினையும் தொடங்கி வைக்கிறார். தேஜஸ் விரைவு ரயிலை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் பெட்டிகளில் பைபர் மற்றும் பிளாஸ்டிக் தகடுகளால் ஆன அழகிய உட்புற தோற்றம் ,சொகுசாக அமர்ந்து பயணம் செய்யும் வசதியான இருக்கைகள், ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் சிறிய வீடியோ எல்ஈடி திரைகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வியாழனை தவிர்த்து வாரம் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த தேஜஸ் விரைவு ரயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு இடையே மட்டும் நின்று செல்லும். ஒரு எக்சிகியூட்டிவ் ஏசி சேர் கார் கோச், 12 ஏசி சேர் கார் கோச், 2 லக்கேஜ் கம் பர்த் கோச் என மொத்தம் இந்த ரயிலில் மொத்தம் 15 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. முன்பதிவு இல்லாத பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்படவில்லை.
பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் கன்னியாகுமரி வருகை!
மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில் மூலம் சென்னையிலிருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்திற்குள் செல்லலாம். சென்னை - திருச்சி இடையே அமரும் வசதி கொண்ட ஏசி பெட்டிகளில் பயணிக்க 690 ரூபாயும், முதல் வகுப்பு சொகுசு பெட்டியில் பயணிக்க ஆயிரத்து 485 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை - மதுரை இடையே அமரும் வசதி கொண்ட ஏசி பெட்டிகளில் பயணிக்க 895 ரூபாயும், முதல் வகுப்பு கொண்ட சொகுசு பெட்டியில் பயணிக்க ஆயிரத்து 940 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது தவிர உணவுடன் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்தால் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.