திருச்சி செல்வே வழியாக திருநெல்வேலி, செங்கோட்டை, மதுரை, ராமேஸ்வரம், காரைக்கல் மற்றும் கொல்லம் ஆகிய இடங்களுக்கு ஆறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கும். திருச்சி பயணிகள், திருச்சி-சென்னை ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸை மீண்டும் தொடங்க வேண்டும் என, ரயில்வே அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
‘ஸ்ட்ரெஸ்’ இருக்குதா உங்களுக்கு? Mi பேண்ட் 5 எப்படி உதவுதுன்னு பாருங்க!
அறிவிப்பின்படி, தெற்கு ரயில்வே அக்டோபர் 2-ம் தேதி முதல் சென்னை-திருநெல்வேலிக்கு இடையில் சென்னை சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு தினசரி ரயிலை (02631/02632) இயக்கும். இந்த ரயில் சென்னையிலிருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு திருநெல்வேலியை அடையும். பதில் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 6.05 மணிக்கு சென்னையை அடையும்.
சென்னை-செங்கோட்டைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சென்னை சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு தினசரி (ரயில் எண் 02661/02662) இரவு 8.40 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு செங்கோட்டையை அடைகிறது. மறுமுனையில், மாலை 6.10 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சென்னை அடையும். இந்த ரயில் அக்டோபர் 3 ஆம் தேதி தனது இயக்கத்தைத் தொடங்குகிறது.
சென்னை-மதுரைக்கு இடையில் சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 02613/02614) வாராந்திர ஆறு நாட்கள் (வியாழக்கிழமைகளைத் தவிர) இயக்கப்படும். இந்த ரயில் அக்டோபர் 2-ஆம் தேதி தனது இயக்கத்தைத் தொடங்கும். சென்னை-ராமேஸ்வரம்-சென்னை சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு தினசரி (ரயில் எண் 02205/02206) மாலை 5.45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு ராமேஸ்வரத்தை அடைகிறது. பதிலாக இரவு 8.25 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னையை அடையும். இந்த ரயில் அக்டோபர் 2 ஆம் தேதி சேவையைத் தொடங்குகிறது.
சென்னை-கொல்லம் சிறப்பு தினசரி ரயில் (ரயில் எண் 06723/06724) இரவு 8.10 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 1.15 மணிக்கு கொல்லம் சென்றடையும். பதில் ரயில் மாலை 3 மணிக்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.10 மணிக்கு சென்னையை அடையும். இந்த சிறப்பு ரயில் அக்டோபர் 3-ஆம் தேதி தனது இயக்கத்தைத் தொடங்குகிறது.
காரைக்கல்-எர்ணாகுளத்துக்கு இடையே இயக்கப்படும் காரைக்கல் சிறப்பு தினசரி ரயில்கள் (ரயில் எண் 06187/06188) அக்டோபர் 4 முதல் திருச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை காலை 8 மணியிலிருந்து தொடங்கும் எனவும் திருச்சி ரயில்வே பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் 5ஆம் கட்ட தளர்வுகள்: அக். 15க்குப் பிறகு பள்ளிகள் செயல்பட அனுமதி
திருச்சி வழியாக பல ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அதோடு இரண்டாம் கட்ட ரயில்களும் இயங்கத் தொடங்கியுள்ளன. ஆனால் திருச்சி-சென்னை ராக்ஃபோர்ட் ரயில் இயக்கத்தை மட்டும் ரயில்வே அதிகாரிகள், அறிவிக்கவில்லை என்று திருச்சி உள்-நகர மேம்பாட்டு முயற்சிகளின் உறுப்பினர் வி பி ஜெகநாத் தெரிவித்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.