Pongal Special Trains From Chennai: சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள், பொதுவாகவே பண்டிகைகளை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் தமிழர்களின் முக்கிய பண்டியான பொங்கல் திருநாள் வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பொங்கலை சொந்த ஊர்களில் கொண்டாடும் பொருட்டு ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து கிளம்பி செல்வர். இதனால் சென்னை பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சமாளிக்க ஆண்டு தோறும் அரசு சார்பில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Pongal Special Trains with Fully Unreserved Coaches : பொங்கல் சிறப்பு ரயில்கள்!
அந்தவகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிக்கையொட்டி தொடர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றன. அவர்களின் பயணத்தை மேலும் சுலபமாக்க முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கபடுகின்றன.
கொச்சுவெளி - சென்னை சென்ட்ரல் இடையே #கோயம்புத்தூர், #சேலம், #காட்பாடி வழியாக ஜன 14ம் தேதி (தமிழகம் வழியாக 15ம் தேதி) முன்பதிவில்லா சிறப்பு ரயில்.#Coimbatore #Tiruppur #Erode #Salem #Jolarpettai #Katpadi #Arakkonam #Perambur #Chennai pic.twitter.com/NiHygyk5y7
— தமிழக ரயில் செய்திகள் | Tamil Nadu Rail News (@TN_RailNews) 10 January 2019
வரும் ஜனவரி 13 ஆம் தேதி தாம்பரம் - கொச்சுவெளி இடையே விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், ஜனவரி 14 ஆம் தேதி கொச்சுவெளி - சென்னை சென்ட்ரல் இடையே கோயம்புத்தூர், சேலம், காட்பாடி வழியாகவும் ஜன 14ம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தாம்பரம் - கொச்சுவெளி இடையே #விழுப்புரம், #திருச்சி, #மதுரை, #நெல்லை வழியாக ஜன 13ம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில்.#Tambaram #Chengalpattu #Villupuram #Virudhachchalam #Trichy #Dindigul #Madurai #Virudhunagar #Kovilpatti #Sattur #Tirunelveli #Nagercoil pic.twitter.com/ZNThSfEaiE
— தமிழக ரயில் செய்திகள் | Tamil Nadu Rail News (@TN_RailNews) 10 January 2019
பேருந்து முன்பதிவு தொடக்கம்! புக்கிங் மையங்கள் குறித்த முழு விவரம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.