Tamil Nadu weather report: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாகவும் அதன் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய தென் மேற்கு வங்க கடலில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதாகவும், இதன் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu weather report : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மேலும், தென் தமிழக பகுதகளில் ஒர் இரு இடங்களில் கனமழையும், வட தமிழகத்தில் ஒர் இரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இன்று குமரிக்கடல், மத்திய இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்த வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படடுள்ளது.
தென் தமிழகத்தில் நேற்று கனமழை: வானிலை எச்சரிக்கை
இதனிடையே, வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.
இதனால் இரண்டாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.