/tamil-ie/media/media_files/uploads/2018/11/rameswaram_fishermen_0.jpg)
Tamil Nadu weather, Chennai weather, Northeast Monsoon Forecast
கச்சத்தீவு விவகாரம் : தமிழகத்தை சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று 3,000 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை மீனவர்கள் அங்கு வந்துள்ளனர். மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். அப்போது அங்கே பெரிய குழப்பமும் கூச்சலும் நீடித்தது,
அதன் பின்னர் அப்பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து வருவதை அறிந்து, இலங்கை மீனவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
கச்சத்தீவு விவகாரம் : தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
இலங்கை கடற்படையினர் தங்களின் பங்கிற்கு, 50ற்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்திவிட்டு, தமிழக மீனவர்களை எச்சரிக்கை செய்து விரட்டி அடித்துள்ளனர்.
பெட்ரோல் குண்டுகள் வீசியது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. மேலும் மீன்களைப் பிடிக்காமல் கரை திரும்பியுள்ளனர் தமிழக மீனவர்கள். கச்சத்தீவு பகுதிகளில் ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் அதிக தொல்லைகளை சந்தித்து வந்தனர் தமிழக மீனவர்கள். இந்நிலையில் இலங்கை மீனவர்களும் இலங்கை கடற்படையினருக்கு ஆதரவாக வன்முறையில் இறங்கியது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.