Advertisment

குமரியில் எஸ்.ஐ. சுட்டுக் கொலை: வீடியோ மூலமாக குற்றவாளிகள் கண்டுபிடிப்பு

விபத்து காரணமாக இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.ஐ. வில்சன், நான்கு நாட்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்திருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
police officer Wilson murder

police officer Wilson murder

தமிழ்நாடு-கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நேற்று இரவு பதற்றம் நிலவியது. 57 வயதாகும் எஸ்.எஸ்.ஐ வில்சன், வாகனங்களை பரிசோதனை செய்யும் போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.

Advertisment

Darbar Movie Release, Review Live: வெறித்தனமான கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

இரவு 10 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த எஸ்யூவி (மஹிந்திரா ஸ்கார்பியோ டி.என் -57-ஏ.டபிள்யூ -1559) ஐ நிறுத்த வில்சன் மற்றும் சில போலீஸ்காரர்கள் முயன்றபோது அங்கு ஒருவித பதற்றம் நிலவியுள்ளது. வாகனத்திலிருந்து இறங்கிய ஒரு நபர் வில்சனை நோக்கி நெஞ்சு, அடிவயிறு உள்ளிட்ட மூன்று இடங்களில் சுட்டிருக்கிறார்.

பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் காரில் கேரள எல்லையை நோக்கி வேகமாக ஓடியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து வில்சன் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். வில்சனுக்கு ஏஞ்சல் மேரி என்ற மனைவியும், அன்ட்ரிஸ் ரிமிஜா, 27, என்ற மகளும் (எம்.இ பட்டதாரி), கற்றல் குறைபாடுள்ள வினிதா, 26 இன்னொரு மகளும் உள்ளனர்.

வில்சன் ஓய்வுபெறுவதற்கு ஐந்து மாதங்களே உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். விபத்து காரணமாக இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.ஐ. வில்சன், நான்கு நாட்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்திருக்கிறார். அதற்குள் இப்படியான அசம்பாவிதம் நடந்திருக்கிறது.

“ஈரானுக்கு எதிராக ராணுவம், ஏவுகணை பயன்படுத்த விரும்பவில்லை” – அமெரிக்க அதிபர் டிரம்ப்

குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய மூன்று சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி ரேஞ்ச் டி.ஐ.ஜி., பிரவீன் குமார் அபினாபு தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி எஸ்.பி. என்.ஸ்ரீநாத் விசாரணை நடத்தி வருகிறார். இரண்டு கொலை வழக்குகளில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ராஜ்குமார் இந்த கொலையிலும் சம்மந்தப்பட்டிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்தக் கொலையில் கேரளாவை சேர்ந்த முகமது சமி, ஹெளசிக் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இஅவர்களுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment