scorecardresearch

மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் நடைபாதை திறப்பு; உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து மகிழ்கிறேன் – ஸ்டாலின் ட்வீட்

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை திறப்பு; உங்களின் உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து நானும் மகிழ்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்

மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் நடைபாதை திறப்பு; உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து மகிழ்கிறேன் – ஸ்டாலின் ட்வீட்

சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகள் அருகே இருந்து பார்க்கும் வகையில், தமிழக அரசால் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை, உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாக இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்தக் கடற்கரைக்கு வந்து அதன் அழகை ரசித்து வருகின்றனர். ஆனால், மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு வந்து செல்வதில் சிரமம் இருந்தது. கடந்த ஆண்டில், மாற்றுதிறனாளிகள் ஒருநாள் கடற்கரை வந்துச் செல்லும் வகையில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டு, அவர்கள் கடற்கரையை ரசித்தனர். இதனையடுத்து, அப்போது நிரந்தர பாதை அமைக்கப்படும் என தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: இ.பி- ஆதார் இணைக்க ரெடி ஆகிட்டீங்களா? இன்று முதல் சிறப்பு முகாம்

அதன்படி, சென்னை மெரினா கடற்கரையின் அழகை அருகே சென்று மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகள் சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது.

மாற்றுத்திறனாளிகள் மரத்தால் முதியோர் சிரமம் இன்றி நடக்க நடைபாதையின் இருபுறங்களிலும் கைப்பிடிகள் போலவே மரத்தால் அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது.

மணற்பரப்பில் இருந்து சற்று உயரம் கூட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதையில் எந்த சிரமமும் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம். மேலும் சக்கர நாற்காலிகளை பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம். இதற்கேற்ப சர்வீஸ் சாலையில் இருந்து நடைபாதைக்கு இருபுறத்திலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இந்த நிரந்தர நடைபாதை விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நேற்று (நவம்பர் 27) திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று மெரினா வந்த தங்கை வைஷ்ணவி “Dream Come True” என்கிறார். ஆம்! பலரின் கனவு மெய்ப்பட்டுள்ளது. சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம். உங்களின் உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து நானும் மகிழ்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Stalin resilient tweet after footpath open for differently abled in marina