Advertisment

மத்திய அரசு, பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழர்களுக்கு வாய்ப்பு - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

2021-22 ஆம் ஆண்டில் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 4.5% பேர் மட்டுமே தென்மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் – பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிகாட்டிய முதல்வர் ஸ்டாலின்

author-image
WebDesk
New Update
மத்திய அரசு, பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழர்களுக்கு வாய்ப்பு - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

அந்தக் கடிதத்தில், நாட்டின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் மட்டுமே சிறந்த சேவை வழங்குவதை உறுதி செய்ய முடியும். நல்ல நிர்வாகத்திற்கு பொதுமக்களுடன் இணக்கமாக பழகுதல், உள்ளூர் மொழி தெரிந்திருத்தல், கலாச்சாரத்தில் பரிச்சயம் போன்றவை முக்கியமானவை.

இதையும் படியுங்கள்: ஓ.பி.எஸ் vs உதயகுமார்: யார் எதிர்க்கட்சித் துணைத் தலைவர்? சபாநாயகர் அப்பாவு முக்கிய முடிவு

மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

2021-22 ஆம் ஆண்டில் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 4.5% பேர் மட்டுமே தென்மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். தென் மண்டலத்தில் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் இது பெரும் ஏமாற்றத்தையும், சமூக, அரசியல் வட்டாரத்தில் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சமச்சீரற்ற பணித் தேர்வு முறை தவிர்க்கப்பட வேண்டிய தாக்கங்களைக் கொண்டிருக்கிறது.

எனவே, தமிழர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரித்திடும் வகையில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும் .ரயில்வே நிறுவனங்களில் பயிற்சி பெறுவதற்கு 20% இடஒதுக்கீட்டின் கீழ் நேரடி நியமனம், பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திடும் வகையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Stalin Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment