ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசு கேவியட் மனுத் தாக்கல்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசு கேவியட் மனுத் தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலை: தமிழக அரசு கேவியட் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Advertisment

மேலும் படிக்க - தூத்துக்குடி துப்பாக்கி சூடு : உடல்களை ஒப்படைக்க கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, தூத்துக்குடி மக்கள் நடத்திய 100வது நாள் போராட்டத்தின் போது மர்ம நபர்கள் சிலர், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். கலவரத்திலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதையடுத்து, அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.

Advertisment
Advertisements

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தால் தங்கள் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: