பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வி தேர்வுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் பிளஸ்2 மாணவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்களுடன் கூடிய முழு விவரங்களும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் விவரங்கள் மிகவும் ரகசியமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளால் பாதுகாத்தும், அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட்டும் வருகிறது.
இந்த ஆண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்த மாணவ, மாணவிகளின் பெயர், பள்ளியின் பெயர், முகவரி, தொடர்பு எண்கள் அடங்கிய முழு விவரங்கள் அனைத்தும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக தமிழக பள்ளி கல்வி தேர்வுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. சுமார் 7 லட்சம் மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். வழக்கு பதிவு செய்து சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/3-2.png)
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் நேற்று முன்தினம் மாணவர்களின் சுய விவரங்களை வர்த்தக ரீதியாக விற்பனை செய்த பிரவின் சவுத்ரி, சுதாகர், வெங்கடராவ் ஆகிய மூன்று பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மாணவர்களின் சுய விவரங்கள் அடங்கிய டேட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கீழ் நிலை அதிகாரிகள் பலர் மோசடியில் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
நீட் தேர்வர்களின் பெயர், முகவரி, மெயில் ஐடி அனைத்தும் விற்பனைக்கு
கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.