Sujith Wilson death leaders and cinema celebrities pay tributes : தீபாவளிக்கு முதல் நாள் துவங்கி நேற்று நள்ளிரவு வரை அனைவரின் பிரார்த்தனையும் எப்படியாவது சுஜித் வில்சன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பது தான். வருவாய்த்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று இரவு 10:30 மணிக்கு பின்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைவரின் நெஞ்சையும் உலுக்கிய ஒன்றாக அமைந்தது. அந்த சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தை செய்வதறியாமல் அதே ஆழ்துளைக் கிணற்றில் தன்னுடைய இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டது. அதன் பின்பு அழுகிய நிலையில், சிதலமடைந்த சடலமாக இன்று காலை வெளியே கொண்டு வரப்பட்டான் சுஜித். சுஜித்தின் உடலுக்கு ஏற்கனவே அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். களத்தில் நின்று மீட்புப்பணிகளை மேற்கொண்ட அமைச்சர்கள் இன்று காலை சுஜித்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இது தொடர்பான முழுமையான தகவல்களை லைவ் செய்தியில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின், அமமுக தலைவர் டிடிவி தினகரன், நடிகர் விவேக் உள்ளிட்டோர் தங்களின் இரங்கல் செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அது குறித்த அப்டேட்களை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளுங்கள்.
ராகுல் காந்தி இரங்கல்
தேசிய அளவில் இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது ராகுல் காந்தி இந்த குழந்தை காப்பாற்றப்பட வேண்டும் என்று செய்த பதிவினால் தான். தற்போது இந்த குழந்தை இறந்ததிற்காக இரங்கல்கள் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் ராகுல்.
I’m sorry to hear about the passing of baby Sujith. My condolences to his grieving parents and his family.
— Rahul Gandhi (@RahulGandhi) October 29, 2019
திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல்
ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி! #RIPSujith
— M.K.Stalin (@mkstalin) October 29, 2019
சுஜித் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது மனதை உலுக்குகிறது - அமமுக தலைவர் தினகரன்
எப்படியாவது நலமுடன் வந்துவிடுவான் என்று அனைவரும் எதிர்பார்த்த குழந்தை சுஜித் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது மனதை உலுக்குகிறது.
குழந்தையை இழந்திருக்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூற வார்த்தைகளால் முடியாது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) October 29, 2019
மிகப்பெரிய பாடத்தை கற்றுத்தந்துள்ளது - திருநாவுக்கரசர்
சுஜித்தின் மரணம் நமக்கெல்லாம் மிகப்பெரிய பாடத்தை கற்றுத்தந்துள்ளது என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பேட்டி. ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தையை மீட்க புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும், எவ்வளவு செலவானாலும் வெளிநாடுகளில் இருந்து மீட்பு கருவிகளை அரசுகள் இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.
தயாநிதி மாறன்
Deepest condolences to the family of #SujithWilson. It is imperative that we take preventive action first & figure out solutions to help expedite such difficult rescue operations if we want this to be the last such incident. #RIPSujith we should've done better. pic.twitter.com/2PFvVtXLqs
— தயாநிதி மாறன் Dayanidhi Maran (@Dayanidhi_Maran) October 29, 2019
சுஜித்தின் உலகில் நாம் அனைவருமே குற்றவாளிகள் - உதயநிதி ஸ்டாலின்
சிறுவன் சுஜித்தின் உலகில் நாம் அனைவருமே குற்றவாளிகள். 'இனி இப்படியொரு சம்பவம் நிகழக்கூடாது' என்பதற்கான அடையாளமாக சுஜித்தின் மரணத்தை மனதில் ஏந்தி, அரசு தன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். நீ எங்கள் மனதில் வாழ்வாய் சுஜித், போய் வா. என் அஞ்சலிகள்.
— Udhay (@Udhaystalin) October 29, 2019
துயரக்குழியில் நாங்கள் விழுந்துவிட்டோம் - நடிகர் விவேக்
கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு!???????? சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது?????
— Vivekh actor (@Actor_Vivek) October 29, 2019
மீளமுடியா துயரம் - ஹர்பஜன் சிங்
மீள முடியா துயரம்!
என்னால எதும் செய்ய முடியல அப்பிடின்னு நெனச்சு அழுக வருது.போனது ஒரு உயிர் மட்டுமில்ல நம்ம ஒட்டுமொத்தப் பேரோட தன்னம்பிக்கை.இனியொரு உயிர் இந்த மாதிரி போகக் கூடாது.அவங்க அம்மா அப்பாக்கு யார் ஆறுதல் சொல்லுவாங்க.என் மனதில் என்றும் நீ நிற்பாய் மகனே #Sujith #RIPSujith pic.twitter.com/pC341a72qK
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 29, 2019
தீவிர முயற்சிகள் மேற்கொண்டும் சுஜித்தை காப்பற்றாமல் போனது வருத்தமளிக்கிறது - எச்.ராஜா
சிறுவன் சுஜித்தை காப்பாற்ற அரசு தீவிர முயற்சி மேற் கொண்டும் காப்பாற்ற இயலாதது வருத்தமளிக்கிறது. சுஜித்தின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— H Raja (@HRajaBJP) October 29, 2019
விடை கொடுக்க கூட எங்களுக்கு அருகதை இல்லை - இயக்குநர் சேரன்
விழிப்புணர்வுக்கு
விதையானாய்..
விடைகொடுக்கக்கூட
எங்களுக்கு
அருகதை இல்லை
முடிந்தால்
மன்னித்துவிடு
இம்மண்ணில்
மகனாய் பிறப்பித்த
கடவுளை.. pic.twitter.com/5YhnBrDUmd
— Cheran (@directorcheran) October 29, 2019
பேரிழப்புகளை நியாயப்படுத்துகிறோம் - ஜி.வி. பிரகாஷ்
ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நமது பொறுப்பற்ற செயலால் ஏற்படும் “பேரிழப்புகளை” நியாயப்படுத்துகிறோம்,தப்பித்துக்கொள்கிறோம் .
உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளை மூட போர்கால அடிப்படையில் அரசும், தனி மனிதர்களும் முயற்சி எடுக்க வேண்டும் #SorrySujith #RIPSujith pic.twitter.com/UyIRGBqHwu
— G.V.Prakash Kumar (@gvprakash) October 29, 2019
நடிகை கஸ்தூரி
இனி ஒரு சுஜித்தினை இழக்க மாட்டோம். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கின்றோம் என நடிகை கஸ்தூரி ட்வீட்
????. #RIPSujith
May we never again lose another surjith wilson . Awareness campaign most urgent need . Safety precautions MUST be adhered to #BoreWells must be licensed and policed. pic.twitter.com/HsOtYtsVOa
— Kasturi Shankar (@KasthuriShankar) October 29, 2019
சௌந்தர்யா ரஜினிகாந்த்
Dear little one ... we are sorry ???? !!! #RIPSujith
— soundarya rajnikanth (@soundaryaarajni) October 29, 2019
இது ஒரு தோல்வி தான் என்று கூற ஒரு சிஸ்டமும் இல்லை - விக்ரம் பிரபு
IF only that borewell was shut
IF only there was a faster response
IF only there was better technology
So many IF’s for just this one incident that took an innocent child.
There’s no system to say it was a failure. HOPE we learn from what has happened. #SorrySujith
— Vikram Prabhu (@iamVikramPrabhu) October 29, 2019
வைரமுத்துவின் கவிதை அஞ்சலி
அதோ ஒருத்தியின் கண்ணில் உலகத்தின் கண்ணீர் என்று கவிதை அஞ்சலி செலுத்தினார் வைரமுத்து.
— வைரமுத்து (@vairamuthu) October 29, 2019
வ்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.