இந்த புகைப்படத்தில் இருப்பது சுஜித் இல்லை…

உண்மை அறிந்து தகவல்களைப் பரப்பும் பொறுப்பை நாம் அனைவரும் ஒன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டிய தருணம் இது. 

Sujith Wilson fake photos videos went viral
Sujith Wilson fake photos videos went viral

Sujith Wilson fake photos videos went viral : சுஜித் 80 மணி நேர மீட்புப் பணி தோல்வியால் உயிரிழந்துவிட்டான். அனைவரும் அவன் உயிருடன் மீண்டு வருவான் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இன்றைய நாளே தமிழகத்தை சோகத்தில் மூழ்கடித்துவிட்டான் சுஜித். அவனுக்கு இரங்கல்கள் தெரிவிக்கின்றோம் என்ற பெயரில் சுஜித் வில்சனின் பழைய வீடியோக்கள் என்று பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் வருத்தம் இருக்கின்ற நிலையில் இது சகஜமான ஒன்றாக இருந்தாலும் நீங்கள் பகிரும் புகைப்படங்கள் வீடியோக்கள் சம்பந்தப்பட்ட நபரினுடையதா என்பதை யோசித்து பின்பு சமூகவலைதளங்களில் ஷேர் செய்யுங்கள்.

Sujith Wilson fake photos videos went viral

வேறு ஒரு சிறுவனின் டிக்டாக் வீடியோக்களும் அவனின் புகைப்படங்களுமே சுஜித் என்ற பெயரில் பரப்பப்பட்டு வருகிறது. இந்த விசயம் அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு தெரிந்தால் அவர்கள் மேலும் வருத்தம் கொள்வார்கள். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தில் இருக்கும் குழந்தை சுஜித் கிடையாது. ஒரு வேளை உங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் பதிவிற்காக நீங்கள் இந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் பயன்படுத்தியிருந்தால் தயவு செய்து நீக்கிவிடுங்கள். உண்மை அறிந்து தகவல்களைப் பரப்பும் பொறுப்பை நாம் அனைவரும் ஒன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டிய தருணம் இது.

மேலும் படிக்க : Sujith news live updates : சுஜித் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி மனவேதனை அளிக்கிறது – முதல்வர்

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sujith wilson fake photos videos went viral in social media platforms

Next Story
சென்னையை பதற வைத்த தீபாவளி , அடுத்தடுத்து மூன்று கொலைகள்29-year-old man killed for protest against auctioning of rural local body elections
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com