Sujith Borewell Rescue Operation : 'ஜெயலலிதா இருந்திருந்தால்; முதல்வர் பழனிசாமி என்ன செய்கிறார்?' - மீரா மிதுன் (வீடியோ)
sujith trichy borewell rescue process : அவர்கள் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்திருந்தால், இந்நேரம் அப்படி செய்திருப்பார்கள். முதல்வர் ஏன் நேரடியாக இவ்விவகாரத்தில் இதுவரை களமிறங்கவில்லை?
sujith trichy borewell rescue process : அவர்கள் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்திருந்தால், இந்நேரம் அப்படி செய்திருப்பார்கள். முதல்வர் ஏன் நேரடியாக இவ்விவகாரத்தில் இதுவரை களமிறங்கவில்லை?
surjith recscue operation meera mithun charged cm palaniswamy - 'ஜெயலலிதா இருந்திருந்தால்; முதல்வர் பழனிசாமி என்ன செய்கிறார்?' - சுர்ஜித் மீட்பு குறித்து மீரா மிதுன் (வீடியோ)
Sujith Trichy Borewell Rescue Operation : மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள பிரிட்டோ என்பவரின் குழந்தை சுர்ஜித் விட்டு தோட்டத்தில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர், மீட்புக் குழுவினகளின் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
Advertisment
குழந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தது குறித்து தகவல் அறிந்தவுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்று குழந்தையை மீட்கும் பணிகளை முடுக்கிவிட்டார். இவரையடுத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி ஆகியோர் அங்கே சென்று மீட்பு பணிகளைப் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் குழந்தையை மீட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் நாளில் இருந்தே மீட்புப் பணி நடைபெறும் நடுக்காட்டுப்பட்டியிலேயே இருந்தார். தீயணைப்புப் படை வீரர்கள், மீட்புக் குழுவினரும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணி முயற்சிகள் எதுவுமே பலனளிக்காததால், ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கியதும், பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டது. ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. ஆனால், கடினமாக பாறைப்பகுதியாக இருப்பதால், குழி தோண்டுவது சவாலாக உள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும், சக ஆண் போட்டியாளர்கள் மீது வெவ்வேறு விதமான புகார்களை கூறியும், சர்ச்சை ஆடியோக்களை வெளியிட்டும் வந்த மீரா மிதுன், குழந்தை மீட்புக் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
An educated Chief minister lack in the state does cause chaos, lack of preventive measures &creation of innovative departments in the state.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "குழந்தையை மீட்க தேவையான கருவியை முதல்வர் அண்டை மாநிலங்களிடமிருந்தாவது வாங்கியிருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்திருந்தால், இந்நேரம் அப்படி செய்திருப்பார்கள். முதல்வர் ஏன் நேரடியாக இவ்விவகாரத்தில் இதுவரை களமிறங்கவில்லை?" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news