பிழியும் சோகம் ஒருபுறம்; தளராத நம்பிக்கை மறுபுறம்: சுர்ஜித் மீட்பு ஹைலைட்ஸ்

தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்களை விட இந்த குழந்தை மீண்டு வர வேண்டும் என்ற பிரார்த்தனையே அதிகமாக இருக்கிறது.

Surjith Rescue live updates : திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான். அந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக 24 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

அவனை காப்பாற்ற ராட்சத கருவிகள் மூலம் மண்ணை தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அந்த பகுதி மக்கள் என அனைவரும் நேற்று நள்ளிரவு முதல் அக்குழந்தையை வெளியே கொண்டுவருவதை மட்டுமே முக்கிய நோக்கமாக கருதி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகைகளும், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : தீபாவளி உனக்காக காத்திருக்கிறது; எழுந்து வா சுர்ஜித்! – 100 அடி ஆழத்தில் மௌனம் ஏன்?

Live Blog

சுர்ஜித் மீட்புப் பணிகள் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்


00:58 (IST)28 Oct 2019

குழந்தை சுர்ஜித்தின் பெற்றோருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுதல் தெரிவித்தார்.

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தின் குடும்பத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுதல் தெரிவித்தார். அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

00:53 (IST)28 Oct 2019

குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கு புதிய ரிக் இயந்திரத்தின் பணி தொடங்கியது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க அதிக திறன்கொண்ட 2வது ரிக் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது.

22:58 (IST)27 Oct 2019

குழந்தை சுர்ஜித் மீட்பு பணியைக் கண்காணித்துவரும் அமைச்சர்கள்

நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெறும் பகுதியில் அமைச்சர்கள் தொடர்ந்து கண்காணிப்பு. மீட்பு பணிகளை அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

22:58 (IST)27 Oct 2019

முதல் ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சீர் செய்யப்பட்டு மீண்டும் துளையிடும் பணி தொடக்கம்

நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித்தை மீட்க துளையிடும் பணியின் போது ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால், துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரிக் இயந்திரம் சீர் செய்யப்பட்டு, சிறிய தாமதத்துக்கு பின் மீண்டும் துளையிடும் பணி தொடங்கியது. புதிதாக தோண்டப்பட்டு வரும் குழியில் கடுமையான பாறை இருப்பதால் மீட்புப்பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

21:38 (IST)27 Oct 2019

சுர்ஜித் மீட்பு பணியில் துளையிட்டுவந்த முதல் ரிக் இயந்திரத்தில் பழுது சீர் செய்யும் பணி தீவிரம்

நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீகும் பணியில் துளையிட்டு வந்த முதல் ரிக் இயந்திரம் திடீரென பழுதடைந்தது. இதையடுத்து, அந்த ரிக் இயந்திரத்தை சீர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதே நேரத்தில் இரண்டாவதாக கொண்டுவரப்பட்ட அதிக சக்திவாய்ந்த ரிக் இயந்திரம் இன்னும் சிறிது நேரத்தில் இயக்கத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

21:31 (IST)27 Oct 2019

சுர்ஜித் மீட்பு பணியில் துளையிட்டுவந்த முதல் ரிக் இயந்திரத்தில் பழுது சீர் செய்யும் பணி தீவிரம்

நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீகும் பணியில் துளையிட்டு வந்த முதல் ரிக் இயந்திரம் திடீரென பழுதடைந்தது. இதையடுத்து, அந்த ரிக் இயந்திரத்தை சீர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதே நேரத்தில் இரண்டாவதாக கொண்டுவரப்பட்ட அதிக சக்திவாய்ந்த ரிக் இயந்திரம் இன்னும் சிறிது நேரத்தில் இயக்கத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

21:25 (IST)27 Oct 2019

சுர்ஜித் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை – சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன்

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெறும் இடத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

20:46 (IST)27 Oct 2019

குழந்தை நிச்சயம் மீட்கப்படும் – நடிகர் சத்யராஜ் நம்பிக்கை

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் நேற்று முன்தினம் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுர்ஜித் தவறிவிழுந்துவிட்டான். குழந்தையை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நடிகர் சத்யராஜ், குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது மிகுந்த வேதனை தருகிறது; குழந்தை நிச்சயம் மீட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

20:04 (IST)27 Oct 2019

குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடும் என்எல்சி தொழிலாளர்கள்

நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கு சுரங்கம் தோண்டும் பணியில் என்.எல்.சி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 35 அடி ஆழம் வரை குழித் தோண்டப்பட்டுள்ளது. அதிக திறன்கொண்ட 2வது ரிக் இயந்திரம் விரைவில் குழித்தோண்டும் பணியை தொடங்க உள்ளது.

19:39 (IST)27 Oct 2019

சுர்ஜித் மீட்புப்பணி பகுதியில் வானிலை முன்னெச்சரிக்கை செய்துவருகிறோம் – சென்னை வானிலை ஆய்வுமையம்

நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித்தின் மீட்புப்பணி நடைபெற்று வரும் பகுதியில் வானிலை மாற்றங்கள் குறித்து முன்னெச்சரிக்கை செய்துவருகிறோம். மீட்புப் பணி நடைபெறும் பகுதியில் மேகங்கள் ஒன்றுகூடாமல், நகராமல் இருந்தால் மழைக்கு வாய்ப்பு குறைவு – சென்னை வானிலை ஆய்வு மையம்.

18:54 (IST)27 Oct 2019

நடுக்காட்டுப்பட்டியில் மழைபொழிவதால் குழிகளை சுற்றி அடுக்கப்படும் மணல் மூட்டைகள்

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க பல இடையூறுகளையும் கடந்து மீட்புப்பணிகள் தொடர்கின்றன. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெறுகிற இடத்தில் மழை பெய்து வருவதால் மீட்பு பணிக்காக தோண்டப்பட்ட குழிகளை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர். மழை பெய்தாலும் மீட்புப்பணி பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

18:26 (IST)27 Oct 2019

நடுக்காட்டுப்பட்டியில் இடி மின்னலுடன் மழை பொழிவு; மீட்பு பணி தொய்வின்றி தீவிரம்

நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க தீவிரமான பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நடுக்காட்டுப்பட்டியில் இடி மின்னலுடன் மழை பெய்துவருகிறது. இருப்பினும் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

17:57 (IST)27 Oct 2019

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க 48 மணி நேரத்தை கடந்து நடைபெறும் மீட்பு பணி

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் நேற்று முன்தினம் 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க முடுக்கிவிடப்பட்ட மீட்பு பணி 48 மணி நேரங்களைக் கடந்து நடைபெற்றுவருகிறது.

17:40 (IST)27 Oct 2019

குழிக்குள் இறங்க தீயணைப்பு வீரர்கள் தயார்.. மீட்பு பணி வீரர்களுக்கு பயிற்சி ஆலோசனை

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. குழிக்குள் இறங்கி குழந்தையை மீட்க 2 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மீட்பு பணி வீரர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

17:33 (IST)27 Oct 2019

குழந்தையை மீட்க அதிக சக்திவாய்ந்த ரிக் இயந்திரத்தை பொருத்தும் பணி தீவிரம்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்பதற்கு, ஆழ்துளை ராமநாதபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அதிக சக்தி வாய்ந்த ரிக் இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. குழதையை மீட்கும் பணியில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

17:00 (IST)27 Oct 2019

அதிக சக்திவாய்ந்த ரிக் இயந்திரம் கொண்டுவரப்பட்டு மீட்பு பணி தீவிரம்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு புதிய ரிக் இயந்திரம் வந்தடைந்தது. இந்த இயந்திரம் தற்போது உள்ள இயந்திரத்தை விட 3 மடங்கு வேகத்தில் இந்த இயந்திரம் பள்ளம் தோண்டும்.

16:29 (IST)27 Oct 2019

திருமாவளவன் எம்.பி. நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித்தின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல்

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் 2வயது குழந்தை சுர்ஜித் நேற்று முன்தினம் தவறி விழுந்தான். மீட்பு பணிகள் இரண்டு நாட்களாக தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி நடுக்காட்டுப்பட்டிக்கு நேரில் சென்று குழந்தை சுர்ஜித்தின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

15:54 (IST)27 Oct 2019

சுர்ஜித் மீண்டு வர வேண்டும் – ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி: நாடே தீபாவளியை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழ்நாடு சுர்ஜித்தை மீட்க போராடி வருகிறது. சுர்ஜித் விரைவில் மீட்கப்பட்டு பெற்றோருடன் சேர்க்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

15:41 (IST)27 Oct 2019

நடுக்காடுப்பட்டியில் மழையிலும் மீட்பு பணி தீவிரம்

ராமநாதபுரத்தில் இருந்து சக்தி வாய்ந்த ரிக் இயந்திரம் நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டுவரப்பட்டு பக்கவாட்டில் துளையிடும் பணி நடைபெறுகிறது. தற்போது அங்கே மழை பெய்துவருகிறது. இருப்பினும், மீட்பு பணியில் தொய்வு ஏற்படாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

15:31 (IST)27 Oct 2019

சிறுவன் சுர்ஜித் மீட்கப்பட வேண்டும் – சென்னை சாந்தோம் தேவாலயத்தில் பிரார்த்தனை

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக இதுவரை 35 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ரிக் இயந்திரம் பழுதானதால் ராமநாதபுரத்தில் இருந்து சக்தி வாய்ந்த ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக சென்னை சாந்தோமில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது.

14:56 (IST)27 Oct 2019

சக்தி வாய்ந்த இயந்திரம் கொண்டு வரப்படுகிறது.

ராமநாதபுரத்திலிருந்து அதிக சக்தி வாய்ந்த ரிக் வாகனம் கொண்டு வரப்படுகிறது. இரண்டு முறைக்கும் மேலாக ரிக் இயந்திரம் பழுதானதால் புதிய வாகனம் கொண்டு வரப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் இயந்திரத்தை விட மூன்று மடங்கு அதிக சக்தி கொண்டதாக இருக்கும் இயந்திரம் மூலம் மீட்புப் பணிகள் தொடரும்.

14:02 (IST)27 Oct 2019

சிறுவன் கீழே செல்லாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – ராதாகிருஷ்ணன்

இரவு பகல் பாராமல் மூன்றாவது நாளாக சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 88 ஆழத்தில் சுர்ஜித் மாட்டியிருப்பதாக அறிவித்துள்ளார் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன். பக்கவாட்டில் காலையில் இருந்து வெறும் 30 அடி ஆழம் வரை மட்டுமே பள்ளம் தோண்டப்பட்டிருப்பதாக அறிவிப்பு.

13:59 (IST)27 Oct 2019

ஹர்பஜன் மீண்டும் ட்வீட்

நிலவில் நீர், செவ்வாயில்குடியிருப்பு என எதற்கு இத்தனை கண்டுபிடிப்புகள். நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகிறது என்று அவர் ட்வீட்.

13:22 (IST)27 Oct 2019

குழந்தையின் கை தெரிகிறது ஆனால் அசைவு இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ”குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். குழந்தையின் கை தெரிகிறது. ஆனால் அசைவு இல்லை. பாதுகாப்புடன் குழந்தையை மீட்க வேண்டும் என்ற கவனத்துடன் அனைவரும் செயல்பட்டுவருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

11:56 (IST)27 Oct 2019

குழந்தையின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டறிந்து வருகிறார்

குழந்தையை மீட்கும் போது இதயத்துடிப்பு 20-ஆக இருந்தாலும் குழந்தையை காப்பாற்றிவிடலாம் என மருத்துவ குழு அறிவித்திருப்பதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். குழந்தையின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டறிந்து வருகிறார்.

11:25 (IST)27 Oct 2019

காலை 07:10 மணிக்கு துவங்கி இது வரை 23 அடி

காலை 07:10 மணிக்கு துவங்கி இதுவரையில் 23 அடி தான் தோண்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாறைகள் இடையே தட்டுப்படுவதால் சுரங்கம் தோண்டும் பணி மிகவும் தொய்வு. இன்னும் 5 மணி நேரமாவது ஆகும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

11:11 (IST)27 Oct 2019

41 மணி நேரங்களுக்கும் மேலாக தொடரும் மீட்புப் பணி

குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 41 மணி நேரத்திற்கும் மேலாகிறது.

11:01 (IST)27 Oct 2019

குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்கள் – வைரமுத்து ட்வீட்

குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலத்தில் இறங்கும் வீரர்களை வாழ்த்தி கண்ணீரோடு கைத்தட்டுகிறேன் என வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் வெளியிட்டுள்ளார்.

10:58 (IST)27 Oct 2019

சுர்ஜித் நலமுடன் திரும்ப வேண்டும் – துரைமுருகன்

ஆழ்துணை கிணறு இத்தனை ஆண்டுகளாக மூடப்படாமல் இருந்தது தவறு. பயனில்லை என்றால் மூடியிருக்க வேண்டும் தான். சுர்ஜித் நலமுடன் திரும்ப வேண்டும். இதற்காக பாடுபடும் அனைவருக்கும் நன்றி என திமுக பொருளாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார் .

10:45 (IST)27 Oct 2019

எழுந்து வா தங்கமே – ஹர்பஜன் சிங் ட்வீட்

நானும் ஒரு குழந்தையோட தகப்பன். அந்த வகைல என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர்ந்து கொள்ள முடியும் என ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார். வேதனையோடு ஒரு தீபாவளி எனவும் பதிவு

10:26 (IST)27 Oct 2019

இந்த விவகாரத்தில் அரசை குறை கூற கூடாது – ரஜினி காந்த்

பணிகள் நிறைவுற்றவுடன் ஆழ்துணை கிணற்றை மூடியிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசை குறை கூறக்கூடாது. மீட்புப் பணிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என ரஜினிகாந்த் கருத்து 

10:20 (IST)27 Oct 2019

பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி தொய்வு

ஆழ்துணை கிணற்றுக்கு அருகே 2 மீட்டர் தொலைவில் ஒரு மீட்டர் அகலம் கொண்ட குழி ஒன்று தோண்டப்பட்டு வருகிறது. சிறுவன் ஆழ்துணை கிணற்றுக்குள் விழுந்து 38 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டட நிலையில் பள்ளம் தோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுவரை 20 அடி தோண்டப்பட்டுள்ள நிலையில், பூமியில் பாறைகள் இருப்பதால் பள்ளம் தோண்டும் பணி தொய்வு அடைந்துள்ளது. பள்ளம் தோண்ட மேலும் 2 அல்லது மூன்று நேரம் பிடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

10:06 (IST)27 Oct 2019

பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

ஆழ்துணை கிணற்றின் அருகே பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஓ.என்.ஜி.சியின் ரிக் வாகனம் மூலமாக சுரங்கம் அமைக்கப்பட்டு சுர்ஜித்தை மீட்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.

10:01 (IST)27 Oct 2019

ரஜினிகாந்த் பிரார்த்தனை

ஆழ்துணை கிணற்றில் சிக்கித் தவிக்கும் சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

09:54 (IST)27 Oct 2019

கமல் ஹாசன் ட்வீட்… மீட்பு பணி வெற்றி பெற வேண்டும் என கருத்து

குழந்தை சுர்ஜித் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். 

சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த நொடி முதல் தமிழகம் முழுவதும் பதற்றம் தொற்றியுள்ளது. எப்போதும் ஒரு அசம்பாவிதம் நடைபெற்ற பின்னர் தான் தண்டனைகள் குறித்தும், இது போன்ற விவகாரங்களில் முன் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்ற கோபங்களும் வருமா என மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். நடுகாட்டுப்பட்டியில் ஒருவரும் தீபாவளி கொண்டாடாமல் சுர்ஜித் வருகைக்காக காத்திருக்கின்றனர். சுரங்கம் வழியே உள்ளே சென்று சுர்ஜித்தை காப்பாற்ற வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். நேற்று 70 அடி வரை இருந்த குழந்தை மண் சரிவால் 100 அடி ஆழம் வரை சென்றுவிட, தொடர் மண் சரிவில் இருந்து குழந்தையை மீட்க, மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

மேலும் படிக்க : 100 அடி ஆழத்தில் சுர்ஜித்: ராட்சத எந்திரங்களுடன் இரவு பகலாக மீட்புப்பணி

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Surjith rescue live updates trichy 2 years old boy slipped into borewell

Next Story
இன்றைய வானிலை : மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.எம்.டி… வலுவடைகிறது பருவமழைChennai Today Weather NEM latest updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com