Advertisment

Surjith Rescue Operation : மீட்புப் பணியை பாதியில் விட்டுவிட மாட்டோம் - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

Baby Surjith Borewell Rescue Updates : அதனால் துளை போடுவதில் சிரமம் இருக்காது என நம்புகிறோம். தொடர்ந்து மீட்பு நடக்க உள்ளது. 40 அடிக்குதான் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 98 அடி வரை குழி தோண்ட வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Surjith Resuce Operation sujith wilson rescue borewell trichy nadukattupatti manaparai - மீட்புப் பணியை பாதியில் விட்டுவிட மாட்டோம் - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

Surjith Resuce Operation sujith wilson rescue borewell trichy nadukattupatti manaparai - மீட்புப் பணியை பாதியில் விட்டுவிட மாட்டோம் - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

Surjith Trichy Rescue Operation : குழந்தை சுஜித் தவறி விழுந்த நடுக்காட்டுப்பட்டியில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "தீப்பிடிக்கும் அபாயம் குழி தோண்டுதில் திருப்தி தரும் வகையில் முன்னேற்றம் இல்லை. ஆனால், சுஜித் மீட்புப் பணிகள் வெளிப்படையாக நடைபெறுகின்றன. பாறையில் வேகமாக துளையிட்டால் ஆழ்துளை கிணற்றில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. புதிய பள்ளம் ஓன்ஜிசி நிபுணர்கள் ஆலோசனைபடிதான் துளையிடும் பணி நடக்கிறது. பக்கவாட்டில் குழி தோண்ட மண்ணியல் நிபுணர்களும் தயார் நிலையில் உள்ளனர். புதிய பள்ளத்தின் அதிர்வினால் குழந்தை மீது மண் விழ வாய்ப்பு உள்ளது.

Advertisment

குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். குழந்தை அதே இடத்தில்தான் இருக்கிறது. நேற்று முன்தினம் இரவுதான் குழந்தையிடம் அசைவு இருந்தது. 88 அடியிலேயே குழந்தை தொடர்ந்து இருக்கிறது. ஏர்லாக், பிரஷர் மூலம் குழந்தையை பிடித்து வைத்துள்ளோம் கடினமான பாறைகள் குழந்தையின் நிலைை கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம். குழந்தையின் நிலை குறித்து பெற்றோருக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படுகிறது. பாறைகள் கடினமாக இருப்பதால் வேகமாக துளையிட முடியாத நிலை உள்ளது.

சுர்ஜித் மீட்பு குறித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தின் பிரத்தேக லைவ் அப்டேட்ஸ் தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்வும்

இதற்கு கீழே கரிசல்மண் தென்பட வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். அதனால் துளை போடுவதில் சிரமம் இருக்காது என நம்புகிறோம். தொடர்ந்து மீட்பு நடக்க உள்ளது. 40 அடிக்குதான் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 98 அடி வரை குழி தோண்ட வேண்டும்.

பலூன் முறை தொழில்நுட்பக்குழு குழந்தை இருக்கும் தூரம் வரை கடைசி வரை செல்லும். ஒரு மணி நேரத்தில் 500 செ.மீ ஆழம் போடப்படுகிறது. இந்த வேகத்தில் சென்றால் எப்படியும் முழுமையாக பள்ளம் தோண்ட 12 மணி நேரம் ஆகும். பலூன் தொழில்நுட்பத்திலும் மீட்பதில் சிரமம் உள்ளது.

தமிழக அரசு மீட்பு பணிக்கு என்ன செலவாகுமோ அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும். அதேபோல, குழந்தையை மீட்க யார் வந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்கிறோம். பஞ்சாப் நிபுணர் ஒருவரும் மீட்புப் பணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். குழந்தையை மீட்பதை பாதியில் விட்டுவிட மாட்டோம். மழை பெய்தாலும் சரி, மீட்பு பணி தொடரும்." என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment