/tamil-ie/media/media_files/uploads/2022/12/SV-sekar.jpg)
புதிய கட்சி தொடங்கப்போவதாக எஸ்வி சேகர் அறிவிப்பு
ஆயில் மசாஜ் எடுத்துக் கொண்டதால், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக எஸ்.வி சேகர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து, தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் எஸ்.வி சேகர். நடிப்பதோடு அரசியலும் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது லைம்லைட்டில் இருக்கும் எஸ்.வி சேகர் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: கன்னியாகுமரி- நாகர்கோவில் 21 கி.மீ. மாரத்தான்.. அமைச்சர்கள் மா.சு., மனோ பங்கேற்பு
அதாவது உடல் சூடு மற்றும் வலிகளை குறைக்க அனைவரும் ஆயில் மசாஜ் எடுத்து கொள்வது வழக்கம். ஆனால், எஸ்.வி சேகருக்கு அது பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஆயில் மசாஜ் செய்துக் கொண்ட எஸ்.வி சேகர், உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். தற்போது குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்.வி சேகர், கடுமையான வாந்தியுடன் கூடிய கடுமையான தலைச்சுற்றல் காரணமாக திடீரென மெட்ராஸ் ENT மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். கடவுள் அருள் & டாக்டர் மோகன் காமேஸ்வரன் சிகிச்சையால் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். இப்போது முழு ஓய்வு எடுத்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த முறை எந்த கட்டணமும் இல்லாத இலவச பாடம் ஆயில் மசாஜ் எடுத்து கொள்ளக் கூடாது என்பது தான். உங்கள் பிரார்த்தனைக்கு அனைவருக்கும் நன்றி, எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Suddenly admitted in MADRAS ENT HOSPITAL for acute Vertigo with severe vomiting. With grace of God & Dr. Mohan Kameswaran recovering & discharged. Now taking complete Rest.Each day we are learning a lesson. This time at no cost No OIL MASSAGE🙏🦜Thank you all for your prayers 🙏 pic.twitter.com/sB2PPBqGPG
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) December 22, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.