உணவு டெலிவரி ஆப்பான, ஸ்விக்கியில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் அவரது தந்தை (புதன்கிழமை) நேற்று காலமானார். COVID-19 க்கு பாஸிட்டிவ் ரிசல்ட் கண்டறிந்த பின்னர், அவரது தந்தை புற்றுநோய் மருத்துவமனையிலிருந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு (RGGGH) மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
வீடியோவில் பேசிய ஸ்டாலின், கரன்சியுடன் ஆஜரான அதிமுக: கோவையில் ‘இட்லி பாட்டி’ அரசியல்
தற்போது அந்த டெலிவரி எக்ஸிகியூட்டிவ் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், அதே நேரத்தில் அவரது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. ஸ்விக்கி கருத்துப்படி, குடும்ப உறுப்பினர்களில் 6 பேருக்கு நெகட்டிவ் முடிவுகள் வந்துள்ளன.
“சென்னையில் எங்கள் டெலிவரி பார்ட்னர்களில் ஒருவருக்கு கொரோனா பாஸிட்டிவ் இருப்பது துரதிர்ஷ்டவசமான சம்பவம். அவரது சகோதரர் மற்றும் 5 குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது. தற்போது அவர்கள் பாதுகாப்பிற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதில் நாங்கள் நிம்மதி அடைகிறோம். எங்கள் முன் வரையறுக்கப்பட்ட நெறிமுறையைப் பின்பற்றி, சம்பவம் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே டெலிவரி பார்ட்னர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார், அவர் தற்போது சுகாதார அதிகாரிகளின் நல்ல பராமரிப்பில் இருக்கிறார்” என ஸ்விக்கி தரப்பில் கூறப்பட்டது.
ஸ்விக்கி தனது டெலிவரி பார்ட்னருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நிர்வாகி மூலம் தங்கள் சேவைகளைப் பெற்ற தொடர்புகள், மற்றும் வாடிக்கையாளர்களைக் கண்டறிய உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தது.
"இந்த காலகட்டத்தில் டெலிவரி பார்ட்னரை ஆதரிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உள்ளூர் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து எந்த வகையிலும் அவர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என ஸ்விக்கி தரப்பில் கூறப்பட்டது.
டெலிவரி பார்ட்னருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான தொடர்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் உணவு விநியோக செயலியான ஸ்விக்கி ஏற்கனவே பணம் செலுத்துவதை முடக்கியுள்ளது. சென்னையில் தற்போது 768 நோயாளிகள் உள்ளனர். மாநிலத்தில் மொத்தமாக 2162 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இருப்பினும், ஒரு டெலிவரி பார்ட்னருக்கு கொரோனா வைரஸ் வந்தது, இது முதல் முறையல்ல. ஏப்ரல் 16 அன்று, டெல்லியில் பீஸ்ஸா டெலிவரி செயினில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் 72 வாடிக்கையாளர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இருப்பினும், சோதனையின் முடிவில் அவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது.
உஷாரா இருங்க மக்களே… உங்க சேமிப்புப் பணத்தை குறி வைக்கும் கும்பல்: ஸ்டேட் வங்கி 6 டிப்ஸ்
பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படும் பொருட்களைக் கையாளும் போது கவனமாக இருப்பதோடு, டெலிவரி நபருடன் சமூக விலகலை கடைப்பிடிப்பது மிக முக்கியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”