சரவணா ஸ்டோர்ஸ், லலிதா ஜூவல்லரி உள்ளிட்ட கடைகளை மூட உத்தரவு: கொரோனா முன்னெச்சரிக்கை

சென்னை தி.நகரில் செயல்படும் அனைத்து பெரிய கடைகளும் இந்த மாத இறுதிவரை மூடப்படும் என்று சென்னை பெருநகர மாநகாராட்சி ஆணையாளர் கோ.பிராகாஷ் அறிவித்தார்

மத்திய அரசு, கொரோனா வைரஸ் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்ததை அடுத்து, ‘வருமுன் காப்போம்’ என்ற ரீதியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கடந்த 16ம்  தேதி தமிழக அரசு பிறபித்த உத்தரவில்,  மாநிலத்தில் செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிருவனங்களும் 31.3.202 வரை மூட உத்தரவிட்டது.

மேலும், மாநிலத்தில் செயல்படும் அணைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாங்கள் (Malls), கேளிக்கை அரங்குகள் (Amusement Parks), நீச்சல் குளங்கள் (Swimming Pools), உடற்பயற்சி மையங்கள் (Gymnasium), உயிரியல் பூங்காக்கள் (Zoos), மற்றும் அருங்காட்சிகளையும் (Museums) வரும் 31.3.2020 வரை மூடப்படுவதாகவும் அறிவித்தது.

அனல் வெயிலுக்கு அஞ்சுமா கொரோனா? நிபுணர் விளக்கம்

வணிக வளாங்கள் மூடப்படும் என்று அறிவித்திருந்தாலும், சென்னை தி.நகர் ரங்கராஜன் சாலையில் உள்ள பெரிய கடைகள் நேற்று வழக்கம் போல் இயங்கி வந்தன. ஏனெனில், “வணிக வளாங்கள் என்ற பொதுவான அர்த்தத்தில் இந்த பெரிய கடைகள் அடங்காது” என்ற காரணமும் கூறப்பட்டது.

 

ஆணையாளர் கோ.பிராகாஷ் முக்கிய  அறிவிப்பு:   இந்நிலையில், சென்னை பெருநகர மாநகாராட்சி ஆணையாளர் கோ.பிராகாஷ் இன்று செய்தியாளர்கலை சந்தித்தார். அதில்,” கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சென்னை திநகர் செயல்படும் கடைகளில் சிலவற்றில் 1000க்கும் அதிகமான மக்கள் வேலை செய்கின்றனர், கூடுதலாக ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். அதன் பொருட்டு,சென்னை திநகரில் செயல்படும் அனைத்து பெரிய கடைகளையும், சிறிய கடைகளையும் இந்த மாத இறுதிவரை மூடப்படும்”என்று அறிவித்தார்.

டி.நகரை நேரில் ஆய்வு செய்தார் ராதாகிருஷ்ணன்  : கொரோனா வைரஸ் தொற்று சமூக அளவில் பரவாமல் தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுவருகிறது. அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். மக்களுக்கு தேவையற்ற அச்சம் தேவையில்லை.

மக்கள் அதிகளவில் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கவே, சென்னை தி.நகரில் இயங்கும் பெரிய கடைகள் அனைத்தும்  மூடப்படுவதாகவும் கூறினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு: கோழி கறி சாப்பிடுவது பாதுகாப்பானதா?

போதிஸ், சென்னை சில்க்ஸ்,குமரன் சில்க்ஸ், நல்லி சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் உட்பட இப்பகுதியில் செயல்படும் பிற ஆடை மற்றும் நகைக் கடைகளும் மூடப்படுகின்றன.

மேலும், சென்னை மாநகராட்சியால் இயக்கப்படும் 525 பொது மக்கள் பூங்காக்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிறிய மளிகை கடைகள், பால் கடைகள், அத்தியாவசிய மருத்துவ கடைகள் மற்றும் ஹோட்டல்கள் திறந்திருக்கும் என்று ஆணையாளர் தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close