Nellai Deputy Commissioner of Police Arjun Saravanan : நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலை தடுக்க காவல்துறை சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத் துறை ஊழியர்கள் மாபெரும் போரை நிகழ்த்தி வருகின்றனர். காவல்துறையினர் பல்வேறு இடங்களில் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றார்கள்.
மேலும் நோய் தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு நாடகங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலமாகவும் புரிய வைத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறை மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறது? மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவை எவ்வாறு பின்பற்றுகிறார்கள்? மேலும் எந்தெந்த முறைகளில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கலாம்? என்பது குறித்து இன்று மாலை 6 மணிக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் உரையாட வருகிறார் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன். எப்போதும் மற்றவர்களின் வாய்வழிக் கதைகளை உண்மை என்று நம்பி வதந்திகளை பரப்புவதற்கு பதிலாக, கள நிலவரம் என்ன என்பதை அரசாங்க ஊழியர்கள் வாயிலாக கேட்டு அறிந்து கொள்வது அனைவருக்கும் நல்லது தானே!
நீங்கள் அவரிடம் ஏதாவது கேள்வியை கேட்க விரும்பினால் இந்த செய்தியின் கீழ்வரும் கமெண்ட் பகுதியில் பதிவிடலாம். உங்களின் கேள்விக்கும் அவர் இன்று நிச்சயமாக பதிலளிப்பார். கைகளை சோப்பினால் கழுவுங்கள். வெளியில் நடமாடுவதை தவிருங்கள். கொரோனா வைரஸுக்கான இந்த போரில் அரசுடன் இணைந்து ஒத்துழைப்புத் தாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”