Advertisment

அதிமுக முதல்வர் வேட்பாளர் : எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பின்னணி என்ன?

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததும், கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

author-image
WebDesk
New Update
அதிமுக முதல்வர் வேட்பாளர் : எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பின்னணி என்ன?

2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வின் முதல்வர் வேட்பாளாராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisment

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததும், கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். பட்டாசு வெடித்து இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடினர்.

எடப்பாடி பழனிசாமி வாழ்க்கை குறிப்பு:   

சேலம் மாவட்டம், எடப்பாடிவட்டம், நெடுங்குளம் கிராமம் அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் எடப்பாடி பழனிசாமி. கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் இவர், 1974ம் ஆண்டு அதிமுக கட்சியில் இணைந்தார்.

1987-ல் எம். ஜி. ஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் எம்.ஜி.இராமசந்திரன் மனைவி ஜானகி இராமச்சந்திரன் தலைமையில் ஓர் அணியாகவும், பிறர் ஜெ. ஜெயலலிதாவின் தலைமையில் மற்றோர் அணியாகவும் பிரிந்தனர். அந்த சமயத்தில் தான், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக எடப்பாடி விளங்கினார். எடப்பாடி ஒன்றியத்தில் அம்மா பேரவையை சிறப்பாக வழிநடத்தினார்.

 

ஆட்சியிலிருந்துகொண்டு 2016 சட்டமன்றத்  தேர்தலை ஜெயலலிதா சந்தித்தார்.  இதனால், அதன் வாக்கு வீதத்தில் சரிவு (anti incumbency) ஏற்பட்டது. இருப்பினும், மேற்கு தமிழக பகுதியில் கவுண்டர் சமூகம் அளித்த வலுவான  ஆதரவு  காரணமாக ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றார்.

அதிமுக கட்சியில் தேவர் சமூகமும், கவுண்டர் சமூகமும் அதிக செல்வாக்கு கொண்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமி அரசியல் வரலாறு:  

1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அ.திமு.க. ஜெயலலிதா   அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த, சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி தலைமையிலான அதிமுக அணி ஒரேயோர் இடத்தில் மட்டுமே வென்றது. இதனால் ஜானகி அரசியல் களத்திலிருந்து விலகினார். ஜெயலலிதா அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.

1990 ல் சேலம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1991 இல் மீண்டும் எடப்பாடி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1993- 96 காலங்களில் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டர்.

இவர் 1998 ஆம் ஆண்டு நடந்த, இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். அதன் காரணமாக, 2001 இல் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி  போட்டியிடவில்லை

2006 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் வி.காவேரியிடம் தோல்வியைச் சந்தித்தார்.

2011 ஆண்டு எடப்பாடி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

2016 ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இடம்பெற்றார்.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா உட்பட்ட நால்வருக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்புக்கூறிய நிலையில், தமிழகத்தின் முதல்வர் வேட்பாளாராக பதவியேற்றார். பின்பு,    அஇஅதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து 2011 - 2016 இடையிலான காலக்கட்டத்தில் 116 சதவீதம் உயர்ந்ததாக ஜனநாயக சீரமைப்பு சங்கம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் குமார். பொறியாளரான இவர் நேரடி அரசியலில் இல்லை என்றாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இப்போதைய சமூக வலைதள ‘மூவ்’களுக்கு மூளையாக இயங்குகிறவர் மிதுன்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment