Tamil Nadu Assembly: ரூ 495 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை – முதல்வர்

சட்ட மன்ற விவாதங்களையும் அறிவிப்புகளையும் ஐ.இ.தமிழில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள். 

Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

Tamil Nadu Assembly Today: தமிழக சட்டப்பேரவை கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கி சனி, ஞாயிறு தவிர மற்ற தினங்களில்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பதுடன், தமிழகத்துக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஜூலை 13 மற்றும் 14 ஆகிய இரு தினங்கள் வார இறுதி என்பதால், சட்டப்பேரவை கூடவில்லை. இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கம் போல் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. அங்கு நடக்கும் விவாதங்களையும் அறிவிப்புகளையும் ஐ.இ.தமிழில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Live Blog

Tamil Nadu Assembly News Today தமிழ்நாடு சட்ட மன்ற லைவ் அப்டேட்ஸ்

15:57 (IST)15 Jul 2019
முதல்வர் அறிவிப்பு

நெல்லை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ 137 கோடியில் புதிதாக நீர்த்தேக்கம் கட்டப்படும் என்றும் ஏரி கசிவுநீர் குட்டைகள் அமைக்கப்படும் எனவும், கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் ரூ 495 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு 

13:46 (IST)15 Jul 2019
முதல்வர் எடப்பாடி

திட்டப்பணிகள் வெளிப்படையாக நடக்கின்றன, தவறுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில அதிகாரிகளை சஸ்பெண்டும் செய்திருக்கிறோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் பேச்சு

13:10 (IST)15 Jul 2019
தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும் 

Tamil Nadu news today live updates : எதிர்க்கட்சிகள் சிக்கலை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கின்றன – அமைச்சர் சி.வி.சண்முகம்

12:43 (IST)15 Jul 2019
எதுவும் பலிக்காது

24 மணி நேரம் பொறுத்துக்கொள்ள முடியாதா? எதை எடுத்தாலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறுகிறார்கள். மத்திய மற்றும் தமிழக அரசுக்கு ஏதாவது சிக்கலை ஏற்படுத்தி, அதில் குளிர்காய முடியாதா என பார்க்கிறார்கள் திமுக-வினர், ஆனால் எதுவும் பலிக்காது என்று திமுக-வின் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சி.வி.சண்முகம் பேச்சு

11:56 (IST)15 Jul 2019
துரைமுருகன் விளக்கம்

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை முருகன், “ உணர்வுகளை கொச்சைப்படுத்துவதால் வெளிநடப்பு செய்தோம். இந்தியை திணிப்பது தான், தனது கடமை என மத்திய அரசு எண்ணுகிறது. ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே மதம் என்பதை செயல்படுத்த நினைக்கிறது மத்திய அரசு” என்றார்

11:53 (IST)15 Jul 2019
ஜெயக்குமாரின் பதில் திருப்தியாக இல்லை

திமுக தபால் துறை தேர்வைப் பற்றி பேசியதற்கு, இருமொழி கொள்கையை பின்பற்றும் அதிமுக அரசு இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளாது எனவும் இது குறித்து மக்களவையில் நீங்கள் குரல் கொடுங்கள், மாநிலங்களவையில் நாங்கள் குரல் கொடுக்கிறோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஜெயக்குமாரின் இந்த பதில் திருப்தியாக இல்லை எனக்கூறி பேரவையில் திமுகவினர் கூச்சலிட்டனர். 

11:47 (IST)15 Jul 2019
திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடத்தப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில்  திமுக கவன ஈர்ப்பு தீர்மானத்தை  கொண்டு வந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு தபால் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தங்கம் தென்னரசு கூறினார். 

11:25 (IST)15 Jul 2019
திமுக-வின் பிச்சாண்டிக்கு விஜயபாஸ்கர் பதில்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரியில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களை 100-ல் இருந்து 150-ஆக உயர்த்த வேண்டும் என திமுக உறுப்பினர் பிச்சாண்டி சட்டப் பேரவையில் கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜய பாஸ்கர், ஒரு மருத்துவக் கல்லுாரி துவங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்தால் தான் கூடுதல் இடங்களை கேட்டுப்பெற முடியும், என்றார். 

11:21 (IST)15 Jul 2019
TN Aeembly: அதிக மேம்பாலங்கள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில்தான் அதிக மேம்பாலங்கள் தமிழகத்தில் திறக்கப்பட்டது என சட்டப் பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 

Tamil Nadu Assembly Live: முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விருதுநகர் அருகே உள்ள கள்ளிக்குடியில் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சமக தலைவர் சரத்குமார் கட்டிய இந்த மணிமண்டபத்தை சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்வர் திறந்தார்.

சென்னையில் நடைபெற்ற விழாவில் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களுடன் ராதிகா சரத்குமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும்  பங்கேற்றனர்.

Web Title:

Tamil nadu assembly live dmk aiadmk mk stalin edappadi palaniswami

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close