Tamil Nadu news today updates : உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Petrol Diesel Price Today : பெட்ரோல் விலை லிட்டர் ரூ.76.03, டீசல் விலை ரூ.69.96 காசுகளாகவும் சென்னையில் விற்பனை.

Tamil Nadu news today updates : தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக இருந்த காமராஜரின் 117வது பிறந்த தினம் இன்று. கல்விக் கண் திறந்தவர், கருப்பு காந்தி என்று பலராலும் நேசத்துடன் அழைக்கப்பட்ட அன்னார், பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழி வகுத்துக் கொடுத்து, அவர்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

World Cup Cricket 2019 : முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி. 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 241 ரன்கள் எடுத்து மேட்ச்சும் டையானது. பின்பு சூப்பர் ஓவர் வைக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 15 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணியும் 15 ரன்கள் எடுக்க சூப்பர் ஓவரும் டையானது. இதனைத் தொடர்ந்து அதிக பௌண்ட்ரிகள் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  மேலும் படிக்க : உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து! கடைசி வரை உயிரை விட்டு போராடிய நியூசிலாந்து!

சந்திராயன் – 2 : விண்ணில் செலுத்தும் பணி தற்காலிக நிறுத்தம்.

இன்று அதிகாலை 2 மணி 51 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்படுவதாக இருந்த சந்திராயன்-2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டதாக இஸ்ரோ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க : 

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services, world cup final, chandrayan 2 - தமிழகத்தில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள

21:16 (IST)15 Jul 2019
மாநிலத் தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும் - ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்கும் மாநிலத் தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் வரை அவகாசம் கேட்ட ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

21:15 (IST)15 Jul 2019
சென்னையில் பல இடங்களில் மழை

சென்னை வானகரம், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், சேத்துப்பட்டு, போரூர், பூந்தமல்லி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தியாகராய நகர், வேளச்சேரி, தரமணி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

20:32 (IST)15 Jul 2019
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாமக்கல், சிதம்பரம், அவிநாசி, செஞ்சி, திருச்சி மருதாண்ட குறிச்சி, கோவை சரவணம்பட்டி, அரியலூர் கீழப்பழுவூர் மற்றும் தூத்துக்குடியில் உள்ள புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

20:27 (IST)15 Jul 2019
கராத்தே தியாகராஜன் மீது காவல்துறையில் புகார்

காங்கிரஸில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் மீது காவல்துறையில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. அடையாறு காவல் துணை ஆணையரிடம் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் அருள் பெத்தையா புகார் மனு அளித்திருக்கிறார். அம்மனுவில், 'காங்கிரஸ் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில், செயல் வீரர்கள் கூட்டத்தை தியாகராஜன் நடத்த முயற்சிக்கிறார். கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டவர்கள், கட்சியின் பெயரை எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது. சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் செயல்படும் கராத்தே தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

20:06 (IST)15 Jul 2019
உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி

ஜெர்மனியில் நடைபெற்ற இளையோருக்கான உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டி, 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனைகள் இளவேனில் வளரிவான் தங்கமும், மெகுலி கோஷ் வெள்ளி பதக்கமும் வென்றனர்.

19:45 (IST)15 Jul 2019
ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் ஒரு கொடியில் பிறந்த இரு மலர்கள் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

ஒட்டிப்பிறந்த சகோதரர்கள் ஓபிஎஸ்-ஈபிஎஸ்; இருவரும் ஒரு கொடியில் பிறந்த இரு மலர்கள். இரட்டைக்குழல் துப்பாக்கியாக ஆட்சிக்கும் கட்சிக்கும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருக்கிறார்கள் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

19:16 (IST)15 Jul 2019
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.

19:01 (IST)15 Jul 2019
'நேர்கொண்ட பார்வை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார், வித்யாபாலன், ரங்கராஜ் பாண்டே, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'நேர்கொண்ட பார்வை' படம் ஆகஸ்ட்.8ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். 

18:40 (IST)15 Jul 2019
14 பேருக்கு ஜூலை 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

’அன்சருல்லா’ என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேருக்கு ஜூலை 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து நிதிதிரட்டி இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக என்ஐஏ தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

18:06 (IST)15 Jul 2019
பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

17:27 (IST)15 Jul 2019
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . வெப்பச்சலனம் காரணமாக வேலூர், திருவண்ணாமலை , காஞ்சிபுரம்,வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக முட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மாலை இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17:17 (IST)15 Jul 2019
பெருங்களத்துாரில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் வரை எட்டு வழிச்சாலை - முதல்வர் பழனிசாமி

சென்னை பெருங்களத்தூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பன்னடுக்கு மேம்பாலம் விரைவில் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  சட்டப்பேரவையில் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளச்சேரி, கீழ்க்கட்டளை, வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்றார். மேலும் பெருங்களத்துாரில் இருந்து, சிங்கப்பெருமாள் கோவில் வரை தற்போதுள்ள 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படும் என்றார். 

17:14 (IST)15 Jul 2019
தமிழகத்தில் மீத்தேன், ஷேல் வாயு திட்டம் செயல்படுத்தப்படவில்லை - அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மீத்தேன், ஷேல் வாயு உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு மக்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.மேலும், கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம், உற்பத்தி மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் இதுவரை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதகமான விளைவு எதுவும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்திக்கு இடங்கள் கண்டறியப்பட்டு அதில் 2 இடங்களில் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

15:53 (IST)15 Jul 2019
சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும்?. இந்த விவகாரத்தில், அரைவேக்காட்டுத்தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூறமுடியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

15:18 (IST)15 Jul 2019
தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்பேன் ; மன்னிப்பு கேட்க மாட்டேன் – வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் மீது, 2009 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தேசத் துரோக வழக்கில், கீழ்நிலை நீதிமன்றம் ஒன்று சமீபத்தில் தீர்ப்பளித்தது. நீதிமன்றம், தனது உத்தரவில் வைகோ குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக வைகோ, தற்போது உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது, அவதூறு வழக்கில் மேல்முறையீடு செய்வேன். எனக்கு ஆயுள் தண்டனை கொடுத்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்பேன், மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

14:47 (IST)15 Jul 2019
ஆங்கிலம், இந்தியில் தபால்துறை தேர்வு : டி.ஆர் பாலு மக்களவையில் எதிர்ப்பு

காங். ஆட்சி காலத்தில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமல்லாது மாநில மொழிகளிலும், அகில இந்திய தேர்வுகளை எழுதலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் தபால்துறை தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்வு ரத்து : தபால் துறை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், திமுக எம்.பி திருச்சி சிவா உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

14:45 (IST)15 Jul 2019
ஹெச்.ஐ.வி. பாதித்த மாணவருக்கு சேர்க்கை மறுத்த விவகாரம் : மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

ஹெச்.ஐ.வி. பாதித்த மாணவருக்கு சேர்க்கை மறுத்த விவகாரம் * "பள்ளிக்கல்வி இயக்குனர், பெரம்பலூர் ஆட்சியர், முதன்மை கல்வி அதிகாரி 4 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

14:03 (IST)15 Jul 2019
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயத்திற்கோ, சுற்றுச்சூழலுக்கோ  எவ்வித பாதிப்பும் இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

கனிமொழி, திருநாவுக்கரசரின் கேள்விகளுக்கு, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2 இடங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயத்திற்கோ, சுற்றுச்சூழலுக்கோ இதுவரை  எவ்வித பாதிப்பும் இல்லை என்று அவர் கூறினார்.

13:20 (IST)15 Jul 2019
டில்லியில் கைதான 14 பேர் சென்னை வருகை

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் டெல்லியில் கைதான 14பேரும் சென்னை கொண்டு வரப்பட்டனர். பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 14 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் ஆஜர் படுத்த உள்ளனர்

12:40 (IST)15 Jul 2019
எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரி்ந்துகொண்டு அடுத்தகட்ட முடிவை எடுக்கலாம் என முதல்வர் கூறியிருக்கிறார், தீர்மானம் நிறைவேற்ற முடியாது என எந்த இடத்திலும் முதல்வர் கூறவில்லை. 24 மணி நேரம் பொறுத்துக்கொள்ள முடியாதா? எதை எடுத்தாலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறுகிறார்கள். மத்திய - தமிழக அரசுக்கும் ஏதாவது சிக்கலை ஏற்படுத்தி, அதில் குளிர்காய முடியாதா என பார்க்கிறார்கள், ஆனால் எதுவும் பலிக்காது என்று சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

12:31 (IST)15 Jul 2019
அமமுக அமைப்புச் செயலாளர் திமுகவில் இணைந்தார்
12:04 (IST)15 Jul 2019
சட்டப்பேரவையில் இருந்து திமுக & காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு

நேற்று நடைபெற்ற தபால்துறை தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வினாத்தாள்கள் இருந்த காரணத்தால், தபால் துறை தேர்வை தமிழில் நடத்த சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதன் மீதான விவாதம் இரு பக்கமும் தீவிரமாக இன்று சட்டப்பேரவையில் பேசப்பட்டது. இது குறித்து மக்களவையில் திமுகவினர் குரல் கொடுங்கள். மாநிலங்களவையில் நாங்கள் குரல் கொடுக்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூற அவரின் பதிலில் திருப்தி இல்லை என்று திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தீர்மானம் நிறைவேற்றமாட்டார்கள் என்று தெரிந்ததால் காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது.

11:44 (IST)15 Jul 2019
உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் தான் கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த்

உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அறிவித்துள்ளார். மேலும் வேலூரில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் உட்பட தேமுதிக நிர்வாகிகள் பிரச்சாரம் செய்ய உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

11:31 (IST)15 Jul 2019
உள்ளாட்சி தேர்தல் நடத்த அக்டோபர் 31 வரை அவகாசம் தேவை

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அக்டோபர் 31 வரை அவகாசம் தேவை என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

11:10 (IST)15 Jul 2019
இனப்படுகொலை செய்தவர்கள் யாரும் தப்பமுடியாது - வைகோ

அவதூறு வழக்கில் நான் மேல் முறையீடு செய்வேன் என்றும், எனக்கு அதில் ஆயுள் தண்டனை கிடைத்தாலும் மகிழ்வோடு ஏற்பேன் என்று வைகோ அறிவித்துள்ளார். மேலும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சென்னை நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ பேட்டியளித்துள்ளார். சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்று கூறிய அவர், விடுதலை புலிகளுக்காக நான் வி.பி.சிங்கிடமே வாதடியவன். இனப்படுகொலை செய்தவர்கள் யாரும் தப்பமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.

10:57 (IST)15 Jul 2019
வல்லபாய் படேலின் சிலையை போன்று தமிழகத்தில் காமராஜரின் சிலை

குஜராத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வல்லபாய் படேலின் சிலையை போன்று தமிழகத்தில் காமராஜரின் சிலை உருவாக்கப்பட உள்ளது, இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார். மேலும் காமராஜருக்கு புகழ் சேர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதை சரத்குமார் நிரூபித்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

10:53 (IST)15 Jul 2019
திமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் அமமுகவில் இருந்து விலகிய வேலூரை சேர்ந்த நிர்வாகி ஞானசேகரன் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தனர்.  

10:09 (IST)15 Jul 2019
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் பேட்டி

இன்று காலை தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் செலுத்தப்படாமல் போனது சந்திராயன் 2. இதனை தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தங்களின் கருத்தினை பதிவு செய்து வருகையில் ” ஏவப்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்புதான் பிரச்சனை பற்றியே தெரிந்தது வந்தது. தொழில்நுட்ப பிரச்சனை என்ன என்று தெரியாததால் எப்போது சரி செய்யப்படும் என்பதை கணிக்க முடியாது என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.

10:04 (IST)15 Jul 2019
காமராஜருக்கு மரியாதை செலுத்தும் அமைச்சர்கள்

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

09:33 (IST)15 Jul 2019
விடுமுறைக்குப் பிறகு மீண்டும் கூடிய சட்டசபை

சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. இன்றைய சட்டசபையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு துறை, இந்து சமய அறநிலையத் துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது.

09:32 (IST)15 Jul 2019
அத்திவரதரை தரிசிக்கும் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா காஞ்சியில் உள்ள  வரதராஜ பெருமாள் கோவிலின் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றுள்ளார்.   அத்திவரதர் விழாவில் கடந்த 14 நாட்களில் மட்டும் 17 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

09:25 (IST)15 Jul 2019
ரஜினி அரசியலுக்கு வராதது குறித்து ரஜினி தான் கூற வேண்டும்

மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு நிச்சயம் செயல்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். ரஜினி காந்தின் அரசியல் வருகை குறித்து எழுப்பிய கேள்விக்கு ரஜினி அரசியலுக்கு வராதது குறித்து ரஜினி தான் விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

09:23 (IST)15 Jul 2019
Kamarajar 117th birth anniversary

கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் அவருக்கு எழுப்பிய மணி மண்டபத்தை இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Tamil Nadu news today updates : அத்திவரதர் அர்ச்சனை நேரம் மாற்றம் : காஞ்சிபுரத்தில் காட்சி தரும் அத்திவரத பெருமாள் கோவிலில் சஹஸ்ர நாம அர்ச்சனை  காலை 11 முதல் 12 மணி வரை நடைபெற்று வந்தது. தற்போது காலை 6.30 முதல் 7.30 வரையாக அது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Wimbledon Tennis Finale :

அரையிறுதில் ரபேல் நடாலை வீழ்த்தி விம்பிள்டன் இறுதிக்கு தகுதி பெற்றார் ரோஜர் ஃபெடரர். அவரை எதிர்த்து செர்பியாவின் ஜோகோவிச் நேற்று போட்டியிட்டார். சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இப்போட்டியில், 7-6, 1-6, 7-6, 4-6, 13-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தினை தக்க வைத்துக் கொண்டார் ஜோகோவிச்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸை வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்றார் ரோமானியாவை சேர்ந்த சைமோனா ஹலேப் வெற்றி பெற்றார். இந்த விளையாட்டினை காண இங்கிலாந்து நாட்டின் இளவரசிகள் இருவரும் வருகை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close