Tamil Nadu assembly updates : 07/01/2020 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து நாம் இங்கே அறிந்து கொள்வோம். 6ம் தேதி துவங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டம் 9ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. 6ம் தேதி, கேரள அரசு போன்றே தமிழகத்திலும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய திமுகவினர், பிறகு அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நேற்று 2வது நாளாக மீண்டும் சட்டப்பேரவை துவங்கியது.
07/01/2020 – சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
கேரள மாநிலத்தில் கடந்த வாரம், பா.ஜ.க எம்.எல்.ஏ. ஓ ராஜகோபால் நீங்களாக அனைவரும், அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சி.ஏ.ஏவுக்கு எதிரான தீர்ப்பினை வரவேற்றனர். தமிழக அரசு இது போன்று தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கூறினார். நேற்று மீண்டும் சட்டப்பேரவையில் முக ஸ்டாலின், இந்த விவகாரத்தைப் பற்றி பேசிய போது, ஏற்கனவே பரிசீலினையில் இந்த தீர்மானம் இருப்பதால் இது குறித்து தற்போது விவாதிக்க வேண்டாம் என்றும், விதிமுறைகளை சரிபார்த்து சரியான முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் காத்திருக்க வேண்டும் என்றும் தனபால் அறிவித்தார்.
தமிழகத்தில் தொழில் துவங்கும் தொழிற்சாலைகளில் 60% வேலைகள் தமிழர்களுக்குத் தான் என்று ஒப்பந்தம் செய்திருப்பதாக அமைச்சர் எம்.சி. சம்பத் நேற்று சட்டப்பேரவையில் கூறினார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கும் இளைஞர்கள், வேலை வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தவித்து வருவதாகவும், வேலையை ஏற்பாடு செய்வது தமிழக அரசின் கடமை என்றும் திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி கூறியது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu assembly today live updates : 06ம் தேதி துவங்கி தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. பிறகு துரைமுருகன் எழுந்து சட்டப்பேரவையில் குடிக்க நல்ல காஃபி கூட கிடைப்பதில்லை. மாறாக சுடுதண்ணீர் தான் தருகிறார்கள் என்று வேதனை தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த சட்டப்பேரவைத் தலைவர் இனி காஃபியுடன் ஸ்நாக்ஸ் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கடுமையான வாதங்களுக்கு மத்தியில் ஆங்காங்கே நடைபெறும் இது போன்ற உரையாடல்கள் அரசியல் சூழ்நிலையில் ஆரோக்கியமான போக்கினை காட்டுகிறது என்று பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர்.
Web Title:Tamil nadu assembly live updates dmk admk edappaadi palanisamy mk stalin
அஞ்சும் அரசு அதிமுக அரசு இல்லை என்றும், திமுக உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கு உத்தரவிட வேண்டாம் என்றும், உள்ளாட்சி தேர்தல் எங்களுக்கு வளர்பிறையாக அமைந்துள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.
கூட்டணிக் கட்சிகளின் அனைத்து கருத்துகளையும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ள இயலாது. கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
மத்திய அரசும், இலங்கை அரசும் ஒப்பந்தம் மூலமாக ஒரு முடிவினை எட்டினால் இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை சாத்தியப்படுமென்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்போராட்டம் மூலமாக வெற்றியை அடைவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட இறப்புகள் குறித்து திமுக உறுப்பினர் கிருஷ்ண்சாமி கேள்வி எழுப்பியதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆண்டு சுகாதாரத்துறையில் தமிழக அரசு மேற்கொண்ட மாற்றங்கள் குறித்து கூறினார். மேலும் பாராட்ட மனமில்லாத எதிர்கட்சி என்றும் கூறினார். அதற்கு துரைமுருகன், எதிர்கட்சியினரிடம் பாராட்டை எல்லாம் எதிர்பார்க்க கூடாது என்றார். விஜயபாஸ்கர் அதற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றார். துரைமுருகனோ மலர் என்றால் மணக்கும். காகிதபூவாக இருந்தால் என்ன செய்வது என்று பதில் கூற அவை சிரிப்பலையில் மூழ்கியது.
இளைஞர்கள் படித்து முடித்ததும் அரசு பணிகளுக்கு ஆசைப்படாமல், தொழில்களில் நாட்டம் கொண்டு தொழில் முனைவோர்களாக தங்களை மாற்றிக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை வழங்கினார்.
சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது குறித்து உள்துறை அமைச்சர் வேலுமணியுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு துணை முதல்வர் 2014 முதல் 2019 வரை 2,96,266 நபர்களுக்கு, 909 கோடி ரூபாய் வரையில் சிகிச்சைக்கு கொடுக்கப்பட்டது என்றும், ஓய்வூதியதாரர்களின் பெற்றோருக்கும் சிகிச்சை அளிக்க அரசு பரிசீலிக்கவுள்ளதாகவும் அறிவித்தார்.
தமிழகத்தில் மேலும் கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க அனுமதி கேட்டுள்ளோம் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.