துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்த இன்ஜினியரிங் பட்டதாரிகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் அதிர்ச்சி

Tamil Nadu Assembly Sweeper Jobs : படித்த படிப்பிற்கு சரியான வேலை கிடைப்பதில்லை என்று ஒரு பக்கம், இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான, திறன் கொண்ட வேலையாட்கள்/பணியாளர்கள்/அலுவலர்கள்/ஊழியர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு மறுபக்கம்.

இன்ஜினியரிங் என்ற படிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தினால் அந்த படிப்பை படிப்பவர்கள் தான் மிகவும் அதிகமாக இருக்கின்றார்கள். அவர்களின் தகுதிகளுக்கு ஏற்றவாறான வேலை கிடைப்பதில்லை என்பது மிகப்பெரிய குறையாகவும், அரசிற்கு சவலாகவும் தான் இன்று வரையிலும் உள்ளது.

4600 பேர் விண்ணப்பம்

சென்னையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கான 14 பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்ற அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 4607 பேர் விண்ணபித்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் 26ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பில் உடல் தகுதி மற்றும் வயது வரம்பு ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 18 வயது நிரம்பியவர்களும், உடல் குறைப்பாடு இல்லாதவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 677 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சில விண்ணப்பங்கள் மறு பரிசீலனையில் உள்ளது. இந்த பணிகளுக்கு பட்டதாரிகள் பலரும் விண்ணப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெறப்பட்ட விண்ணப்பங்களில் கிட்டத்தட்ட 4000 விண்ணப்பங்கள் இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரிகள் விண்ணப்பித்தார்கள் என்று தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க :AIIMS Recruitment 2019: மத்திய அரசில் செவிலியர் வேலை வேண்டுமா?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close