Tamil Nadu Assembly Session : சட்டசபையில் உரை நிகழ்த்திய கவர்னர், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என்று கூறினார். அத்துடன், இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைவருக்குமான பொது வினியோக திட்டம், பிற மாநிலங்களும் தொடர்ந்து பின்பற்றுவதற்கான முன்மாதிரியாக அமைந்துள்ளது. முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட பொது வினியோக அமைப்பு நடைமுறைகளினால், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை தமிழ்நாடு அரசால் நடைமுறைப் படுத்த முடிகிறது.
தமிழகத்தில் பூமழை உள்ளிட்ட சுவாரசிய தகவல்களை படிக்க...
பல்வேறு தடைகள் வந்தபோதிலும், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் முறையாக நடத்தப்படுவதை இந்த அரசு உறுதி செய்தது. மீதமுள்ள 9 மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. இந்த செயல்பாடு, மக்களாட்சியைப் பரவலாக்குவதில் இந்த அரசுக்கு உள்ள முனைப்பினை எடுத்துக்காட்டுகிறது என்று கூறினார்.
Live Blog
Tamil nadu assembly live updates : தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று துவங்குகிறது. சட்டசபை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
சட்டப்பேரவையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், நெல்லை கண்ணனை கைது செய்தது ஏன்? அவர் என்ன தவறு செய்தார் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை; சட்டரீதியாகவே நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்த தலைவரையும் அப்படி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியை ஒருமையில் பேசியது தொடர்பாக, திமுக எம்எல்ஏ அன்பழகனை வெளியேற்றுவது தொடர்பாக அவை முன்னவர் ஒ.பன்னீர்செல்வம் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அன்பழகன் மன்னிப்பு கேட்டார்.
மறப்போம், மன்னிப்போம் என ஒ.பன்னீர்செல்வம் கூறியதால் வெளியேற்றத்தை கைவிட்டார் சபாநாயகர்
குடியுரிமை சட்டத்தை எதிர்க்கவில்லை, அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களையே எதிர்ப்பதாக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினருக்கு ஆதரவாக எங்கள் கட்சி உள்ளது என்று அதிமுக கூறிவரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு அளித்தது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டிலேயே சட்டம் ஒழுங்கில் தமிழகம் தான் முதன்மை மாநிலமாக உள்ளது என்று சட்டசபையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற குறறச்சாட்டுக்கு திமுக எம்எல்ஏ அன்பழகன் ஆதாரங்களை அளிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதன்மை இடம் என்பதை நாங்கள் கூறவில்லை, மத்திய அரசே கூறியிருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற்றதற்கு எடப்பாடி, கெங்கவல்லியில் அதிமுக தோற்றதே சாட்சி என்று சட்டசபையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். சென்னையில், 2006ம் ஆண்டில் உருட்டுக்கட்டை தேர்தல் நடைபெற்றதாக அவர் மேலும் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாதத்திற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததால், சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது. பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது, இதுதொடர்பாக, ஜனவரி 2ம் தேதியே நாங்கள் சபாநாயகரிடம் மனு வழங்கியுள்ளோம். இதுவரை அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.
திமுக உடன் காங்கிரஸ், அதிமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் : தமிழக சட்டப்பேரவையின் 2020-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்; தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவாதங்களையும், உறுதி மொழிகளையும் அளித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கதாகும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ : தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவர்னர் உரையின் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசு தன்னைத்தானே பாராட்டிக்கொண்டு இருக்கிறது. ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்னும் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவோம் என்று அறிவித்திருப்பது, பொது வினியோக முறையைச் சீர்குலைத்துவிடும். நடப்பு ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 115 மெட்ரிக் டன் என்ற அளவை எட்டும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், உணவு தானிய உற்பத்திக்கு அடித்தளமாக இருக்கும் விவசாயிகளின் பிரச்சினைகளை இந்த அரசு அலட்சியப்படுத்தி வருகிறது என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights