Tamil Nadu breaking news today updates: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் 27ம் தேதி முதற்கட்ட தேர்தலும் 30ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற தேர்தலில் 77.73% வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பான முழுமையான தகவல்களை படிக்க இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.
2019ம் ஆண்டில் தமிழ் திரையுலகம் இழந்த முக்கிய நட்சத்திரங்கள் யார் யார்?
புத்தாண்டு கொண்டாட்டங்கள்
2020ம் ஆண்டு புத்தாண்டினை கொண்டாட மொத்த தலைநகரமே தயாராகிவருகிறது. மெரினா மற்றும் எலியாட்ஸ் கடற்கரை செல்லும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் சுமார் 15 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது மற்றும் பைக் ரேஸில் ஈடுபடுவது போன்ற குற்றங்களை தவிர்ப்பதற்காக மாநகரம் முழுவதும் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக முழுமையான அப்டேட்களை பெற்றுக் கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்
Live Blog
Tamil Nadu breaking news today updates : இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, இன்று நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏசி மற்றும் புறநகர் அல்லாத ரயில்களின் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1 பைசா அதிகரிப்பு. விரைவு ரயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி கோச்களில் கிலோ மீட்டருக்கு 4 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் குடும்பத்திற்கு திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் பரிசுகளை வழங்கி வருகின்றனர். திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரிக்க போதுமான இடமில்லாத காரணத்தால் அவற்றை தரம் பிரித்து தரும்படி அதிகாரிகள் மக்களிடம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் குடும்பங்களுக்கு நேரில் சென்று நகராட்சி அதிகாரிகள் பரிசுகள் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குப்பைகளை பொது இடத்தில் கொட்டாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு வயது வரம்பு சலுகை மறுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசும், உயர் நீதிமன்ற பதிவுத்துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக இருந்த 31 மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கு நேரடி தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம், சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை எடுக்காததால், எவரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேரடித் தேர்வு மூலம் நீதிபதிகள் பதவியிடத்தை நிரப்ப வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக ஜனவரி 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இப்படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
#MASTER coming soon💪 pic.twitter.com/KgOGaGUecL
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 31, 2019
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளை பெற்று புதிய சாதனைகளை படைப்போம் என வாழ்த்து தெரிவித்துள்ளார். வளமான தமிழகத்தை படைத்திடுவோம் என இந்த ஆங்கிலப் புத்தாண்டில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர், நெய்விளக்கு தோப்பு பகுதியில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் கோலங்கள் வரையப்பட்டிருந்தன. சென்னை, பெசண்ட் நகரில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த பெண்களை போலீசார் கைது செய்ததால், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் கோலம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனை யொட்டி திருவாருர் நெய்விளக்கு தோப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோலம் வரைந்தனர்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் வீடு மற்றும் திமுக அலுவலகம் ஆகியவை முன் கோலங்கள் போடப்பட்டன. கோலம் மூலம் எதிர்கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வீடுகளின் முன் கோலங்கள் போடப்பட்டன. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜனின் வீடு மற்றும் திமுக அலுவலகம் முன்பு எதிர்ப்பு கோலங்கள் போடப்பட்டன.
உள்கட்டமைப்பு துறையில் ரூ. 100 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த குழு 70 விதமான துறை சார் வல்லுநர்களுடன் பேசி பல்வேறு திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தியாவை 2025-ல் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாக்க ரூ.102 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய உட்கட்டமைப்பு திட்டம் உதவி புரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தனர் சையது அலி நவாஸ், அப்துல் சமீம் மற்றும் காஜா மொய்தீன். தற்போது அவர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் குறித்து 4981 00079, 044-23452377, 94981 81238 என்ற எண்களில் தகவல்கள் தெரிவிக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
பிபின் ராவத் தலைமை தளபதியாக நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில் பாஜவை உயர்த்தி பேசியதால் பிபினுக்கு தலைமை தளபதி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார்.
ஐ.ஐ.டி. சென்னை மாணவி ஃபாத்திமா லத்தீஃப் கடந்த நவம்பர் மாதம் தன்னுடைய கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐக்கு நேற்று மாற்றி அறிவிக்கப்பட்டது. சென்னை சி.பி.ஐ அலுவலகத்தின் ஃபாத்திமாவின் தந்தை செய்தியாளர்களை சந்தித்த போது குற்றவாளிகளை சி.பி.ஐ அதிகாரிகள் நிச்சயம் பிடிப்பார்கள் என்று கூறினார்.
ஜனவரி 6ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. அந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுகவினர் கவனமுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்று ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாவட்ட செயலாளர்கள் தனி கவனம் செலுத்தி பணிகள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
பிரதமர் மற்றும் உள்த்துறை அமைச்சர் குறித்து பேசிய நெல்லை கண்ணன் இல்லத்தை பாஜகவினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். பின்பு காவல்துறையினர் மேற்கொண்ட சமரச பேச்சுவார்த்தையின் கீழ் அவர்கள் கலைந்து சென்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை மேலும் நான்கு நாட்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு ரூ. 50 கோடி வரையில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் கட்டாயமாக மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு ரூபே டெபிட் கார்ட் மற்றும் யு.பி.ஐ பரிவர்த்தனை கட்டாயம் என்றும் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனவரி 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவினர் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் சட்ட விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று கவனித்து அத்துமீறல்களையும் முறைகேடுகளையும் தடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய ராணுவ தளபதியாக பதவி வகித்து வந்த பிபின் ராவத் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் புதிய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பதவியேற்றுள்ளார். தன்னுடைய பொறுப்புகள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தார் பிபின் ராவத்.
கோல வடிவில் தங்களின் எதிர்ப்புகளை பதிவு தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும் என்றும் கருத்து சுதந்திரம் மற்றும் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் கோலமிட்டு தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்தோம் என்றும் வி.சி.க கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
ராணுவப்படை தளபதியாக பதவி வகித்து வந்த பிபின் ராவத் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் அவர் டெல்லியிலுள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிபின் ராவத் மரியாதை செலுத்தினார். நாளை அதிகாரப்பூர்வமாக முப்படைகளின் தலைமை தளபதியாக பதவியேற்கிறார் பிபின் ராவத்.
Tamil Nadu breaking news today updates : 30/12/2019 அன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை
முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதியை நியமிப்பது குறித்து நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியான நிலையில் நேற்று பிபின் ராவத்தை நியமித்தது மத்திய அரசு. அவர் ராணுவ தளபதியாக வகிக்கும் பதவி இன்றுடன் முடிவுக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் 2ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்து அறிவிக்கப்பட்டது. மேலும் 2ம் தேதி நள்ளிரவு வரை வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும் என்பதால் பள்ளிகள் 4ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரி மலேசியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights