Tamil Nadu breaking news today live updates Tamil Nadu weather : தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. சென்னையில் நேற்று மாலை முதல் ஆங்காங்கே சாரல் மழை பெய்து கொண்டிந்தது. ஆனால் இன்று காலை முதல் சென்னையில் பலத்த கனமழை பெய்ய துவங்கியது. இடைவிடாது பெய்த மூன்று மணி நேர மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கத்திற்கு இயல்பாக இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைவான மழைப்பொழிவை பெற்றிருந்தது சென்னை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் தமிழ் திரையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
மோடி வாழ்த்து
புத்தாண்டு தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Have a wonderful 2020!
May this year be filled with joy and prosperity. May everyone be healthy and may everyone’s aspirations be fulfilled.
आप सभी को साल 2020 की हार्दिक शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) January 1, 2020
Live Blog
Tamil Nadu breaking news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, நெல்லை கண்ணன் உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், நெல்லை கண்ணன் பெரம்பலூரில் ஒரு தனியார் ஓட்டலில் இருந்தபோது பெரம்பலூர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின்னர் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மத்திய நிதி அமைச்சகம், கடந்த டிசம்பரில் ஜி.எஸ்.டி., வரி வசூல், ரூ.1,03,184 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி.,(CGST) ரூ.19,962 கோடி, மாநில ஜி.எஸ்.டி.,(SGST) ரூ.26,792 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.,(IGST) (இறக்குமதி வரி ரூ.21,295 கோடி உள்பட) ரூ.48,099 கோடி, 'செஸ்' வரி(cess) ரூ.8,331 கோடி வசூலாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 டிசம்பருடன் ஒப்பிடும் போது, 2019 டிசம்பரில் ஜி.எஸ்டி. வருவாய் 16% அதிகரித்துள்ளது. 2019-20 நிதியாண்டில், நவம்பர்30ம் தேதி நிலவரப்படி, ஜி.எஸ்.டி., வரி, அதிகமாக வசூலான மாநிலங்களில் தமிழகம் 4வது இடம்.
கடந்த நவம்பரில் ரூ.1,03,492 கோடியும் டிசம்பரில் ரூ.1,03,184 கோடியும் வசூலானதையடுத்து அடுத்தடுத்த இரு மாதங்களில், ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை மெரினாவில் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெ.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 308 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது. இந்த விளைவுகளை பாஜக நினைக்கவில்லை. நெல்லை கண்ணன் பேசிய வார்த்தை தவறானது. அதை பயன்படுத்தி இருக்க கூடாது. ஆனால், அந்த நோக்கத்தில் பேசியிருக்க மாட்டார் என்று கூறினார்.
சென்னை போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன்: கோலம் போட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை; ஏற்கனவே போட்ட கோலத்தில் ‘NO CAA' என எழுதியுள்ளனர். வீட்டின் உரிமையாளர் ஏன் இப்படி எழுதுகிறீர்கள் எனக்கேட்ட போது முழக்கம் எழுப்பியதால் கைது செய்யப்பட்டனர்.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக்கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்தாமல் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தேர்தலில், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜா என்பவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மயிலாப்பூரில் உள்ள சமூக நல கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: 5 ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படாதது மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரிப்பு காரணங்களால் ரயில் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மை என்பது பெரும் பற்றாக்குறையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) ஆளுநர் சக்தி காந்த தாஸ், ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அடையாளம் காண பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக MANI என்ற மொபைல் ஆப்பை இன்று அறிமுகப்படுத்தினார். இந்த ஆப்பை Android Play Store & iOS App Store-ல் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
இந்திய வங்கிகளில் கடன் வாங்கி, அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை ஏலம் விட வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் எம்.எம். நரவணே செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
டெல்லியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய எம்.எம்.நரவணே: "சீன எல்லையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எந்த விதமான சூழலிலும் நாட்டை காக்கும் பணியில் ராணுவத்தை தயார் நிலையில் வைப்பதே தமது திட்டம். தமது பதவிக்காலத்தில் ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மனித உரிமைகள் மீறப்படாமல் இருக்க ராணுவம் அறிவுறுத்தப்படும். பாகிஸ்தான் எல்லைப்புற பதற்றம் ஒரு புறம் இருந்தாலும் இனிமேல், இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்தும்” என்று கூறினார்.
நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் உடனே போராட்டம் வெடிக்கும் என்று பாஜக தலைவர் ஹெச்.ராஜா பேச்சு
பாரத பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்ய தூண்டிய கண்ணன் என்பவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்...
Watch : https://t.co/6m9v1Artgh pic.twitter.com/h7g89WTIq0
— H Raja (@HRajaBJP) January 1, 2020
முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். ராணுவத்தில் செய்யப்பட்ட மிக முக்கியமான சீர் திருத்தம் தான் முப்படை தளபதி என்றும் எதிர்காலத்தில் வரும் சவால்களை சமாளிக்க இந்த சீர் திருத்தம் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்ப 4 வீரர்கல் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு வரும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் இருந்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் சிவன் அறிவித்துள்ளார். சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் அதற்கான திட்டப்பணிகள் துவங்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளார் அவர்.
டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு குளறுபடி காரணமாக தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் மீண்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேனியின் உப்புக்கோட்டை ஊராட்சியின் 8வது வார்டிலும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வுக்கு நேற்று வரை மட்டும் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், நேற்று இணையத்தில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்வது பெரும் சவாலாக அமைந்தது. அதனை தொடர்ந்து நீட் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 6ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் அரசியல் தலையீடு இல்லை என்றும் அரசின் உத்தரவின் பேரில் தான் செயல்படுகின்றோம் என்றும் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பேச்சு. இனிமேல் ராணுவ நடவடிக்கைகளில் மூன்று படைகளும் இணைந்து செயல்படும் என்றும் அந்த ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பிபின் ராவத் அறிவித்துள்ளார். தேசிய போர் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் 8 தொழிற்சாலைகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தரமற்ற , கலப்பட தேயிலைகளை தயாரித்தது காரணமாக இரண்டு தொழிற்சாலைகளுக்கு நிரந்திரமாக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றொன்றுக்கு தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏவுக்கு எதிராக கேரளா மாநில சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். இதனை ஆதரிப்பதாக அறிவித்திருந்த தமிழக எதிர்கட்சித் தலைவர் மற்றும் திமுக தலைவருமான முக ஸ்டாலின், இதே போன்று வருகின்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights