Tamil Nadu Budget 2020 Live: தமிழக அரசின் 2020-2021ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், மக்களை கவரும் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
நாம் ஏன் காதலர் தினம் கொண்டாடுகின்றோம்? சுவரசியமான வரலாற்று பின்னணி!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று, நாளையுடன் (பிப்ரவரி 15ம் தேதி) 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4வது ஆண்டு தொடங்குகிறது. எனவே, அதன் அடிப்படையிலும், புதிய சலுகைகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வேளாண் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அதனால், வேளாண் கடன்கள் தள்ளுபடி ஆகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Live Blog
Tamil nadu budget updates : பட்ஜெட் நிகழ்வுகள், முக்கிய அம்சங்கள், சபை நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பட்ஜெட் அறிவிப்பு தமிழகத்தின் வளங்களை வாரிச்சுருட்டி செல்வது போல் உள்ளது. திமுக மற்றும் அதிமுக அரசுகள் கடைபிடித்த தவறான பொருளாதார கொள்கைகளால்தான் ஒவ்வொரு தமிழரும் கடனாளியாக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் தேவையான எல்லா வளங்களும் இந்த பட்ஜெட் மூலம் நேரடியாக சென்றடைய வெண்டும் என்று பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், சபாநாயகர் தனபால் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 20 வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் மாநில நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த 2020-21 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாசனத் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது." என்று வரவேற்றுள்ளார்.
துணை முதல்வரின் 10வது பட்ஜெட் எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட சில அமைச்சர்களின் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கடன் தொகை 3 மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
தொல்லியல் துறைக்காக 31.93 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக உலகத்தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ்வைப்பகம் அமைத்திட 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி நிதி ஒதுக்கீடு.
திருநெல்வேலி, கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் உணவு பூங்கா அமைக்கப்படும்.
நெடுஞ்சாலைத் துறையில் புதிதாக சாலைப் பாதுகாப்பு பிரிவு அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு
11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. கடலூர் மருத்துவக்கல்லூரி குறித்த அறிவிப்பில், ஏற்கெனவே அறிவித்தபடி கடலூர் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக்கல்லூரியை அரசே ஏற்று நடத்தும். கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரியாக அது செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் தெரிவித்தார். பணிபுரியும் பெண்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்தார்.
தமிழக அரசின், 2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட், இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், இன்று காலை, 10:00 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு, சட்டசபை தேர்தல் வர உள்ளதால், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் உட்பட, பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சட்டசபையில் பேச திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளன. மேலும், குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும், காவல் துறைக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் நடந்த முறைகேடு குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பும் என்பதால், இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights