/tamil-ie/media/media_files/uploads/2020/02/template-2020-02-14T145802.663.jpg)
tamil nadu, Budget, tamilnadu budget 2020, budget 2020, tamil nadu state budget 2020, tamil nadu budget 2020, edappadi palanichami, o panneerselvam, dmk, m k stalin, ammk, ttv dhinkaran, kamalhassan, makkal needhi maiam
தமிழக அரசின் 2020 -21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட், யாருக்கும் பத்தாத பட்ஜெட் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, 2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று ( பிப்ரவரி 14ம் தேதி) தாக்கல் செய்தது. துணைமுதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது பத்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பட்ஜெட் 2020 : பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
பட்ஜெட் தொடர்பாக தலைவர்களின் கருத்துகள்
திமுக தலைவர் ஸ்டாலின் : தகுதிநீக்க வழக்கில் உள்ள 11 எம்எல்ஏ., க்களில் ஒருவராக இருக்கும் ஓபிஎஸ், 10வது முறையாக பட்ஜெட் வாசித்துள்ளார். இந்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது. மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 159 நிமிடங்கள் வாசித்தார். இந்த பட்ஜெட்டை ஓபிஎஸ் 196 நிமிடங்கள் வாசித்தார். இதில் கூட மத்திய பாஜ., அரசை அதிமுக பின்பற்றி வருகிறது.
பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை, கடன்சுமை தான் தொடர்ந்து இடம் பெறுகிறது. திமுக 2011ல் ஆட்சியில் இருந்து விலகிய போது ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை தற்போது 3 மடங்கு உயர்ந்து ரூ.4 லட்சம் கோடியாக உள்ளது. இதில் தொலைநோக்கு திட்டமோ, வளர்ச்சி திட்டமோ இடம் பெறவில்லை. குறிப்பிட்ட சில அமைச்சர்களின் இலாகாக்களில் மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மர்மம் என்ன என்பது தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மக்களின் மீது கடன் சுமையை அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் வரவேற்பு : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் மாநில நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த 2020-21 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாசனத் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது." என்று வரவேற்றுள்ளார்.
ஜி கே வாசன் : தமிழக அரசின் பட்ஜெட், விவசாயிகளுக்கு உகந்த பட்ஜெட் ஆக உள்ளதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் : காற்றில் வரைந்த ஓவியம் போன்று செயல்திட்டம் இல்லாத வெற்று அறிவிப்புகள் கொண்ட பட்ஜெட்டாக இது விளங்குவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் : தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள், நடைமுறைக்கு சாத்தியமானதா அல்லது சாத்தியம் இல்லாததா என்பது தொடர்பான மக்களின் கருத்துக்கணிப்பை தெரிந்துகொள்ளும் வகையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, வாக்கெடுப்பு ஒன்றை, தனது டுவிட்டர் பக்கத்தில் துவங்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.