Tamil Nadu Budget 2021 Petrol price will be reduced : நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து வரும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போது பெட்ரோல் விலை குறித்து தன்னுடைய உரையில் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 2.63 கோடி இரு சக்கர வாகனங்கள் உள்ளன. பெட்ரோல் விலை உயர்வால் இது போன்ற ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு ஏன்?
நடுத்தர, உழைக்கும் வர்க்கத்தினரின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் மீது மாநில அரசு விதிக்கும் வரியில் ரூ. 3 குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். 1160 கோடி வரை தமிழக அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் என்றாலும் பெட்ரோலின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ. 4 வரை குறைக்கப்படும் என்று திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
சுவரொட்டிகள் இல்லாத மாநகரம்: சிங்கார சென்னை 2.0 குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன?
தேர்தலுக்கு பிறகு அது குறித்து கேள்வி எழுப்பிய போது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே தற்போது நிலவி வரும் சூழலில் விலையை குறைக்க முடியாது என்று கூறினார். இந்நிலையில் திமுக அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.49க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.39க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சரின் அறிவிப்பால், பெட்ரோல் விலை ரூ. 100க்குள் கொண்டு வரப்படும்.
Tamil Nadu Budget 2021 : பருவ நிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு உருவாகும் தமிழ்நாடு பசுமை இயக்கம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil