Advertisment

அடுத்த பட்ஜெட்டிற்கு தயாராகுங்கள் மக்களே.. பிப்ரவரி 8 தமிழக பட்ஜெட் தாக்கல்!

காலை 10.00 மணிக்கு 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக பட்ஜெட் 2019

தமிழக பட்ஜெட் 2019

தமிழக சட்டப்பேரவையில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தற்போது நிதி இலாகாவை கவனித்து வரும் துணைமுதல்வர் ஓபிஎஸ் 8 ஆம் தேதி தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழக பட்ஜெட் 2019 :

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதையடுத்து 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்தார்.தனிநபர் வருமான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது உள்ளிட்ட அறிவிப்புகளை பியூஷ் கோயல் வெளியிட்டார்.

இன்றைய பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து வரும் 2019-20 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் பிப்ரவரி 8-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை துணை முதலமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார்.

புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்- பிரதமர் மோடி

அன்றைய தினம் காலை 10 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தலைமைச் செயலகத்தின் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தலைமைச் செயலக செயலாளர் சீனிவாசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத்தை 8.2.2019 ஆம் நாள், வெள்ளிக்கிழமை, காலை 10.00 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்.

மேலும், அன்று காலை 10.00 மணிக்கு 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 இடைக்கால பட்ஜெட் : விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி... பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்...

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment