Tamil Nadu Chennai weather latest updates Nilgiri Coimbatore heavy rain : வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மழை பெய்யக் கூடும் என சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கோவை, தேனி மற்றும் நீலகிரி உள்ளிட்ட இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகமாக மழைப் பொழிவை பெற்ற இடங்கள்
நீலகிரியின் தேவாலா, சின்னக்கல்லாறு பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வால்பாறை தபால் அலுவலகம் - 4 செ.மீ
வால்பாறை தாலுக அலுவலகம், குமரியின் பேச்சிப்பாறை - 3 செ.மீ
மயிலாடி, ஏரனியல், நாகர்கோவில் - 2 செ.மீ
பாண்டிச்சேரி, பூதப்பாண்டி, குழித்துறை, பொன்னேரி, பாப்பநாசம் ஆகிய பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி திடீர் ராஜினாமா!
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும்.