Advertisment

பெங்களூருவில் கார்கேவை சந்தித்த கே.எஸ் அழகிரி: ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் அணிவகுப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றமா? பெங்களூருவில் மல்லிகார்ஜுன் கார்கேவை ஆதரவாளர்களுடன் சந்தித்த கே.எஸ்.அழகிரி

author-image
WebDesk
New Update
KS Alagiri

கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் பெங்களூருவில் மல்லிகார்ஜுன் கார்கேவை வெள்ளிக்கிழமை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருப்பவர் கே.எஸ்.அழகிரி. இந்தநிலையில், கே.எஸ்.அழகிரி தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக கே.எஸ்.அழகிரி தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தலைவர்களுடன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை பெங்களூருவில் சந்தித்து பேசினார்.

இதையும் படியுங்கள்: அ.தி.மு.க மாநாட்டில் சவுக்கு சங்கர்: நேரில் வந்தது பற்றி விளக்கம்

காங்கிரஸ் கட்சி மற்றும் தலைவர்கள் இதை மண்டல மாநாட்டிற்காக என்று கூறினாலும், லோக்சபா தேர்தல் வரை தலைவர் நாற்காலியை காப்பாற்றுவதற்காக கே.எஸ்.அழகிரியின் சந்திப்பு நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.

ஆனால், கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி பேசுகையில், "குறிப்பாக எங்கள் மண்டல மாநாட்டிற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொள்ளுமாறு எங்கள் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்" என்று கூறினார்.

மல்லிகார்ஜூன் கார்கேவை கே.எஸ்.அழகிரி சந்திக்கும்போது, வேளச்சேரி எம்.எல்.ஏ ஆசன் மௌலானா, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர், சோளிங்கர் எம்.எல்.ஏ முனிரத்தினம், கொளச்சல் எம்.எல்.ஏ ஜே.ஜி.பிரின்ஸ், விருத்தாசலம் எம்.எல்.ஏ எஸ் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, தமிழ்நாடு தலைவர் மாற்றம் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மல்லிகார்ஜூன் கார்கே எம்.எல்.ஏ.,க்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.,வுமான செல்வப்பெருந்தகை, கரூர் எம்.பி ஜோதிமணி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் தமிழகத் தலைவர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக ஊகங்கள் பரவி வருகின்றன.

அதற்கேற்றாற்போல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் தற்போது மூன்று முகாம்கள் உள்ளன, முதலாவது தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் உள்ளது, இரண்டாவது காங்கிரஸ் சட்டமன்ற கட்சி செல்வபெருந்தகை தலைமையிலும், மூன்றாவது சசிகாந்த் செந்தில் தலைமையிலும் உள்ளது. மேலும், கரூர் எம்.பி ஜோதிமணிக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்கும் இடையே வலுவான உறவு உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Congress K S Alagiri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment