Advertisment

இத்தனை சிறப்பம்சங்களை கொண்டதா தமிழகத்தின் முதல் மின்சாரப் பேருந்து?

இனிமேல் சென்னையில் இது போன்று அதிக அளவு பேருந்துகளை நம்மால் காண முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today in tamil,

Tamil Nadu news today in tamil,

Tamil Nadu first public electric bus specifications : சென்னையின் முதல் மின்சாரப் பேருந்து சேவையை நேற்று துவங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்நிகழ்வில் பல முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர். சோதனை ஓட்டமாக தற்போது சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவான்மியூர் வரை இந்த பேருந்து செயல்பட உள்ளது.

Advertisment

சிறப்பம்சங்கள்

முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட பேருந்து இதுவாகும்.

ஏ1 ரூட்ட்லில் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்து மயிலாப்பூர், அடையாறு வழியாக திருவான்மியூரை வந்தடையும்

இந்த பேருந்தின் கதவுகள், ஏர் பஸ்களில் பொருத்தப்பட்டிருக்கும் தானியங்கிக் கதவுகள் போல் செயல்படும்.

ஜி.பி.எஸ் கொண்டு பேருந்தின் இயக்கம் கவனிக்கப்படும்.

காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் மட்டுமே பயணிகளின் சேவைகளுக்காக சென்னை மெட்ரோ கார்பரேசன் இந்த பேருந்தினை இயக்க உள்ளது.

அசோக் லே-லாண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த கார் பேட்டரி ஸ்வாப் முறையில் இயக்கப்படும். ஒரு முறை பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 40 கி.மீ வரை இயங்கும் இந்த் பேருந்து.

ஒரு முழுமையான ட்ரிப் முடிந்தவுடன் பேட்டரி மாற்றப்படும்.

காற்று மாசுப்பாட்டை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பேருந்து தற்காலிகமாகவே இயக்கப்படும். மக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளை கொண்டு டெண்டர் முறையில் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வரும். இனிமேல் சென்னையில் இது போன்று அதிக அளவு பேருந்துகளை நம்மால் காண முடியும்.

Automotive Research Association of India -ன் தரச்சான்றிதழை பெற்றிருக்கும் இந்த பேருந்தில் ஒரே நேரத்தில் 32 பேர் அமர்ந்தும், 25 பேர் நின்றும் பயணிக்கலாம்.

பல்லவன் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் பணி மணையில் பேட்டரி ரீசார்ஜ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஃபையர் டிடெக்சன் மற்றும் சப்ரசன் சிஸ்டம் கொண்டுள்ளது இந்த பேருந்து. பேருந்து ஓட்டுநரை கண்காணிக்க, பேட்டரியின் நிலையை அறிந்து கொள்ளவும் இதில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த பேருந்தில் பயணிக்க அதிகபட்சமாக ரூ.25-ம் குறைந்த பட்சமாக ரூ.11ம் பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி கார் ஹூண்டாய் கோனா ஒரு பார்வை…

Automobile
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment