ஜப்பானை சேர்ந்த மிட்சுபா சிக்கல், தென் கொரியாவை தளமாகக் கொண்ட ஹனான் ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜோகோ ஹெல்த் ஆகியவற்றுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது. இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் 1,254 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கவுள்ளன.
‘சிஏஏ, என்பிஆர் பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை’ – பிரதமர் மோடியை சந்தித்த பின் உத்தவ் தாக்கரே
அதன்படி, மிட்சுபா சிக்கல் ரூ .504 கோடியும், ஹனான் ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ் 500 கோடியும், ஜோகோ ஹெல்த் ரூ .250 கோடியும் தமிழகத்தில் முதலீடு செய்யவிருக்கின்றன.வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளின் சங்கமம் மற்றும் தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வா் பழனிசாமி முக்கிய திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன், அவரது முன்னிலையில் திட்டங்களுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன.
வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதர்களும், மூத்த அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி தமிழகத்தில் பொருளாதார மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழில் வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்த மிட்சுபா சிகால் நிறுவனம் ரூ.504 கோடி முதலீடுகளைச் செய்து புதிய ஆலையைத் தொடங்கியுள்ளது. இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டம், மல்ரோசாபுரத்தில் கொரிய நாட்டைச் சோ்ந்த ஹானான் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ரூ.500 கோடி வரை முதலீடுகளைச் செய்யவுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் ஆட்டோமொபைல் உற்பத்திப் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொள்கிறது.
திருவள்ளூா் மாவட்டத்தில் பாலிமா் தொழில் பூங்கா தொடங்கப்பட உள்ளது. ரூ.217 கோடி முதலீட்டிலான இந்தத் திட்டமானது டிட்கோ மற்றும் சிப்காட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இதன் மூலம் 7000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிகிறது.
முதல்வர் பழனிசாமி மொத்தம் ரூ. 1,254 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அது 10,330-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடும். கொரியாவைச் சேர்ந்த ஹனான் தானியங்கி காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மல்ரோசாபுரத்தில் ரூ. 500 கோடி முதலீடு செய்ய உள்ளது. அமெரிக்காவின் ஜோகோ ஹெல்த், ஆரம்பத்தில் ரூ. 15 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, பின்னர் அதன் முதலீட்டை 250 கோடி ரூபாயாக உயர்த்தியது. இதனால் சுமார் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடற்பயிற்சி செய்தால் இலவச ரயில் டிக்கெட் – மத்திய அரசின் திட்டத்துக்கு பெரும் வரவேற்பு (வீடியோ)
இந்நிகழ்ச்சியில் டென்மார்க், பிரான்ஸ், ஜப்பான், கொரியா, மலேசியா, ரஷ்யா, சிங்கப்பூர், தாய்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 36 நாடுகளின் தூதர்கள் பங்கேற்றனர்.