தமிழகத்தின் பெயரை மாற்றக் கோரி சர்ச்சையை கிளப்பிய சில வாரங்களுக்குப் பிறகு, ஆளுநர் ஆர்.என் ரவி செவ்வாயன்று புதிய உரையாடலில் இறங்கினார். "காலனித்துவ மனங்கள் இந்தியாவின் அறிவுசார் இடத்தைக் கட்டுப்படுத்தியது" என்று கூறிய ஆர்.என் ரவி, தீன்தயாள் உபாத்யாயா போன்ற இந்திய அறிஞர்கள் ஓரங்கட்டப்பட்டு கார்ல் மார்க்ஸ், ரூசோ மற்றும் ஆபிரகாம் லிங்கன் ஆகியோர் "வழிபடப்பட்டனர்" என்று கூறினார்.
சென்னை ராஜ்பவனில் நடந்த தீன்தயாள் உபாத்யாயின் சிந்தனை மற்றும் ஒருங்கிணைந்த மனிதநேயத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.என் ரவி, "காலனித்துவ மனங்கள் மற்றும் போலி அறிவுஜீவிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இந்தியாவின் அறிவுசார் இடத்தை விடுவிக்க வேண்டிய நேரம் இது" என்று கூறினார். “பல தசாப்தங்களாக நாட்டை ஆண்ட ஆங்கிலத்தில் படித்த உயரடுக்கினரை" விமர்சித்த ஆர்.என் ரவி, "தீன்தயாள் உபாத்யாயா போன்றவர்கள் இந்தியாவில் ஜனசங்கத்துடனான தொடர்பு காரணமாக புறக்கணிக்கப்பட்டனர், அதே நேரத்தில் கார்ல் மார்க்ஸ், ரூசோ மற்றும் ஆபிரகாம் லிங்கன் வழிபடப்பட்டனர்”, என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: ஆளுனரா ஆர்.எஸ்.எஸ் பிரச்சார பீரங்கியா? தேர்தலில் பணம் கொடுப்பது ஜனநாயக விரோதம்.. துரை வைகோ
"நீண்ட காலமாக, தீன்தயாள் உபாத்யாயாவின் கருத்துக்கள் ஒடுக்கப்பட்டன, ஏனெனில் அவர் இந்தியாவின் ஆளும் வர்க்கத்திற்கு தீண்டத்தகாத ஒரு அமைப்பான ஜனசங்கத்துடன் தொடர்புடையவர். அவரது ஒருங்கிணைந்த மனிதநேயம் தத்துவமாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் அதை ஒரு சாதாரண மனிதனுக்கு விளக்கினால், அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியும், ”என்று ஆர்.என் ரவி கூறினார்.
மேலும், ”இந்த நாட்டை எல்லா வகையிலும் அழித்து முடித்த பின்னர், ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகும் நாட்டை சிறந்த முறையில் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நடக்கவில்லை என்பதை தீன்தயாள் உபாத்யாயா உணர்ந்தார். நாம் தடம் புரண்டோம். சுதந்திரத்திற்குப் பிறகு, மேற்கத்திய சித்தாந்தங்களின் அடிப்படையில் இந்தியாவின் அடிப்படையை நாம் வடிவமைத்தோம், அதே சித்தாந்தங்கள் உண்மையில் உலகிற்கு மிகவும் வேதனையையும் துன்பத்தையும் அழிவையும் கொண்டு வந்தன,” ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
"சுதந்திரத்திற்குப் பிறகு ஏழு தசாப்தங்களாக எந்த நாடும் இந்தியாவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நம்மிடம் அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் மற்றும் நோயாளிகள் இருந்தனர் ... நாம் இனம், ஜாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பிளவுபட்டு, பிரிக்கப்பட்டு இருக்கிறோம். சாதிகளின் எண்ணிக்கை இப்போது இரட்டிப்பாகிவிட்டது. எல்லோரும் நாட்டைப் பிளவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள்... இது மேற்கத்திய சிந்தனைகள் மற்றும் சித்தாந்தங்களால் நடந்தது” என்று ஆர்.என்.ரவி கூறினார்.
பின்னர் ஆர்.என்.ரவி இறையியல், டார்வினியக் கோட்பாடு, கார்ல் மார்க்ஸின் வர்க்கக் கோட்பாடு மற்றும் ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகிய நான்கு மேற்கத்திய சிந்தனைப் பள்ளிகளைக் குறிப்பிட்டார், இவை "இந்திய ஆங்கிலம் படித்த ஆளும் வர்க்கத்தை" பாதித்ததாகவும் அவர் கூறினார்.
மேற்கத்திய சித்தாந்தங்கள் "மோதலுக்குரியவை" என்று வாதிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய தத்துவத்தைத் தவிர வேறு எந்த தத்துவத்தாலும் "உலகத்தை முழுமையாகப் பார்க்க முடியாது" என்று கூறினார். "இந்திய கலாச்சாரம் மட்டுமே ஒரு பெரிய கண்ணோட்டத்தையும் அணுகுமுறையையும் கோர முடியும்," என்று அவர் கூறினார்.
“ஒரு வேந்தராக, நான் இந்த மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் செல்கிறேன். ஒருமுறை பேராசிரியர் ஒருவர் தனது உரையில் சில ஐரோப்பிய அறிஞர்களைப் பற்றிப் பேசுவதைக் கேட்டேன். அத்தகைய பேராசிரியர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். நீங்கள் எதை பற்றி பேசுகிறிர்கள்?" என்று ஆர்.என்.ரவி கூறினார்.
இந்தியாவில் ஆங்கிலம் படித்தவர்கள் தர்மத்தை ஒரு மதம் என்று "தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது", அதை பொருத்தமான இடத்தில் பயன்படுத்துங்கள் என்று ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.
மேலும், ”ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறி 70 ஆண்டுகளுக்குப் பிறகும், நாம் நாட்டைப் பிரித்து, இனம், மதம், சாதி, மற்றும் மொழியின் அடிப்படையில் பிரிக்கிறோம். 1951ல் சாதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. மேற்கத்திய சிந்தனைகள் மற்றும் சித்தாந்தங்கள் காரணமாக இந்த பிளவுகள் அனைத்தும் நடந்தன” என்று ஆர்.என்.ரவி கூறினார்.
இந்த நிலைக்கு காரணமான நான்கு காரணிகளைப் பட்டியலிட்ட ஆர்.என்.ரவி, (மேற்கத்திய) இறையியல், கடவுள் மனிதர்களைப் படைத்ததாகவும், மற்ற படைப்புகளை மனிதர்களின் மகிழ்ச்சிக்காகவும் படைத்தார் என்ற இனவழிக் கண்ணோட்டத்தை நம்புகிறது என்று கூறினார். இது, மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை சுரண்டுவதன் மூலம் இரண்டிற்கும் இடையே மோதலுக்கு வழிவகுத்தது, இதன் விளைவாக இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது. இதற்கு நேர்மாறாக, நமது 'பாரதிய கண்ணோட்டம்' மனிதர்கள் "படைப்பின் மையம் அல்ல, ஆனால் முழு படைப்பின் ஒரு பகுதி" என்பதைக் காட்டுகிறது. "நாம் ஒரே பூமியின் குழந்தைகள்... 'அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்' என்று கூறுகிறோம்," என்று ஆர்.என்.ரவி கூறினார்.
பின்னர் சார்லஸ் டார்வினின் உயிர்வாழ்வதற்கான கோட்பாட்டைப் பற்றி ஆர்.என்.ரவி பேசினார், இது மற்றவர்களிடம், குறிப்பாக பலவீனமானவர்களிடம் இரக்கத்தை ஊக்குவிக்கவில்லை என்று கூறினார். "இது காட்டின் சட்டம், அங்கு இரக்கம் இல்லை, சரி அல்லது தவறு என்ற உணர்வு இல்லை. நமது அணுகுமுறையில், வலியது உயிர்வாழும் என்பது போன்ற கோட்பாடு இல்லை. அது எப்போதும் ‘அனைவரும் சேர்ந்து செழிக்கட்டும்’ என்பதுதான். இந்த தத்துவ அணுகுமுறை நமது உளவியலில் பொதிந்துள்ளது மற்றும் நமது அரசியலமைப்புச் சட்டம் சம உரிமைகள் மற்றும் சமத்துவத்தை வழங்குகிறது" என்று ஆர்.என்.ரவி கூறினார்.
அவர் அதை சுகாதார அமைப்புகளுடன் இணைத்தார். “கடந்த காலத்தைப் போலல்லாமல், இந்த நாட்களில் நமது கொள்கைகள் ஒவ்வொரு இந்தியருக்கும் பொருந்தும். முன்பு, ஆரோக்கியத்தில், இது டார்வினிய பாணியாக இருந்தது, அதாவது அரசாங்கத்திடம் குறிப்பிட்ட பணம் இருந்தது, மேலும் புத்திசாலி மாநிலங்கள் மற்றும் தலைவர்கள் அதிக பணம் பெறுகிறார்கள், மற்றவர்கள் செழிக்கவில்லை. புத்திசாலிகள் மற்றவர்களை விட தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒன்றாக நமது அமைப்பு இருந்தது. எனவே, நமக்கு பல ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. இது ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை அல்ல" என்று ஆர்.என்.ரவி கூறினார்.
இந்திய நவீன சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்திய மூன்றாவது காரணி, ஜெர்மானிய தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் கூறியது, சமூகம் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே நிரந்தர மோதலில் உள்ளது என்று கூறினார். “பசுக்களையும் குரங்குகளையும் வணங்கும் சமூகம் வாழ்வதற்கு எந்தத் தொழிலும் இல்லை என்பதால், இந்தியாவின் சமூக அமைப்பை ஆங்கிலேயர்கள் அழிக்க வேண்டும் என்று 1952 இல் மார்க்ஸ் கூறினார்” என்று ஆளுநர் கூறினார்.
ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ள நான்காவது காரணி ரூசோ, அவர் சமூக ஒப்பந்தத்தை ஆதரிக்கும் போது, "பாரத் முழு நாட்டையும் ஒரு குடும்பமாக பார்த்தார்" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.