Advertisment

தமிழக அரசு முழுமையாக ஊழலில் ஈடுபட்டுள்ளது – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழைகளுக்கு சென்றடைவதைத் தடுக்க தமிழக அரசு முயற்சிக்கிறது; தி.மு.க அரசு முழுமையாக ஊழலில் ஈடுபட்டுள்ளது – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

author-image
WebDesk
New Update
தமிழக அரசு முழுமையாக ஊழலில் ஈடுபட்டுள்ளது – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தி.மு.க அரசு ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும், ஏழைகளின் வளர்ச்சியை புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தி.மு.க மீது தாக்குதல் தொடுத்தார்.

Advertisment

தமிழகத்தில் மக்கள் பார்வைக்காக மத்திய அரசின் திட்டங்களின் ஸ்டால்களை திறந்து வைத்து வணிகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார்.

இதையும் படியுங்கள்: தேவர் குருபூஜை: ‘தங்க கவசத்தை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரிடமும் ஒப்படைக்க மாட்டேன்’ – காந்தி மீனாள் நடராஜன்

அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை கூட ஒட்ட அனுமதிக்காத அளவுக்கு மத்திய அரசைக் கண்டு தி.மு.க.வினர் பயப்படுகிறார்கள் என்று பியூஷ் கோயல் கூறினார். .

டெல்லி செங்கோட்டையில் 75வது சுதந்திர தின விழாவில் பிரதமரின் உரையை குறிப்பிட்டு, “ஊழலற்ற இந்தியாவை மோடி குறிப்பிட்டார். ஊழலற்ற தமிழகத்தை தமிழக மக்களும் விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். ஊழலற்ற தமிழகம் என்று பேசும்போது, ​​ஊழலில் முழுமையாக ஈடுபடும் அரசை நம்ப முடியாது” என்று பியூஷ் கோயல் கூறினார்.

ஆளும் தி.மு.க.,வுக்கு எதிராக தனது தாக்குதல்களைத் தொடர்ந்த பியூஷ் கோயல், "அரசு முழுமையாக ஊழலில் ஈடுபட்டுள்ளது... ஏழைகளின் வளர்ச்சிப் பணிகளை முழுமையாக மேற்கொள்ளாமல், அவர்களது மகன் மற்றும் மருமகனின் வளர்ச்சிப் பணிகளைச் செய்கிறது" என்று கூறினார்.

"குடும்ப அரசியலுக்கு இடமில்லை, அதே நேரம், காரிய கர்த்தாக்களுக்கு (பா.ஜ.க.,வில்) இடமுண்டு."

“இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அரசை நடத்த முடியாது. தமிழகம் முழுவதும் உள்ள காரிய கர்த்தாக்கள் உயர்ந்து எழுந்து அரசை நடத்த வேண்டும். ஊழலை ஒழிப்போம், நல்லாட்சி தருவோம்” என்று பியூஷ் கோயல் உறுதியளித்தார்.

மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் ஏழைகளுக்கு சென்றடைவதை மாநில அரசு தடுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய பியூஷ் கோயல், அனைத்து முயற்சிகளும் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யுமாறு கட்சியினரிடம் வலியுறுத்தினார்.

மோடியை விமர்சிக்கும் போது மாநில அமைச்சர்கள் ‘கெட்ட வார்த்தைகளை’ பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய பியூஷ் கோயல், “அவர் ஒரு கட்சியின் பிரதமர் அல்ல, நாட்டின் பிரதமர்” என்று கூறினார்.

தி.மு.க தலைவர்கள் பற்றி பேசும் போது கூட நானோ அல்லது (பா.ஜ.க தமிழக தலைவர்) அண்ணாமலையோ அவதூறான வார்த்தைகளால் பேசுவதை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று கூட்டத்தினரிடம் பியூஷ் கோயல் கேட்டார்.

"எங்களுக்கு அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால், மக்களின் ஆணையையும் அரசியலமைப்பு நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்."

சென்னைக்கு ஒரு நாள் பயணமாக வந்த பியூஷ் கோயல், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) மாணவர்களைச் சந்தித்து, இந்தியாவின் வளர்ச்சி பாதையில் புதுமைகளை உருவாக்கி பங்களிக்குமாறு அவர்களிடம் வலியுறுத்தினார்.

“தைரியமான பார்வை, பெரிய லட்சியம். திறமை, அளவு மற்றும் திறன் ஆகியவற்றின் தோற்கடிக்க முடியாத கலவையை இந்தியா உலகிற்கு வழங்குகிறது, ”என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது அதிகாரப்பூர்வ மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் கூறினார்.

பின்னர், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஏற்பாடு செய்த ஏற்றுமதியாளர்கள் மாநாட்டில், நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றுமதியாளர்கள் கடமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்களிக்குமாறு பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டார்.

கடந்த 8.5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடு மற்றும் மனநிலையை மாற்றியுள்ளார். ‘ஈஸ் ஆஃப் டூயிங்’ (எளிதான வணிக தொடக்கம்) வணிகத்தையும், அரசாங்கத்திற்கும் மற்ற பங்குதாரர்களுக்கும் இடையே நட்புறவான அணுகுமுறையை அறிமுகப்படுத்துவதில் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார், என்று பியூஷ் கோயல் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Bjp Piyush Goyal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment