Tamil Nadu health minister Dr C Vijayabaskar met his daughters after 40 days : கொரோனா வைரஸ் தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களால் ஆன அனைத்து பொதுப்பணிகளையும் தீவிரமாக செய்து வருகின்றனர். மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில் அதிக சிரத்தையுடன் பணியாற்றி வருவது சுகாதாரத்துறை அமைச்சகம் தான். அங்கு பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் படிக்க :வாழ்வைப் பற்றி நிறைய கற்றுக் கொடுத்த 6 நாட்கள் – மனுஷ்யபுத்திரனின் கொரோனா வார்ட் அனுபவம்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் கூட அவர் தொடர்ந்து தன்னுடைய பணியை செய்து வருகிறார். இந்நிலையில் 40 நாட்கள் கழித்து தன்னுடைய குழந்தைகளை சென்று சந்தித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்.
அமைச்சராக தன்னுடைய பொறுப்புகளை முன்னின்று செய்யும் அவர் தந்தையாக நேரத்தை செலவிட 40 ஆட்கள் ஆனது மனதை உருக்கும் விதமாக அமைந்துள்ளது. முன்களப் பணியாளர்கள் அனைவரும் இவ்வாறு தொடர்ந்து மக்கள் பணிக்காக தங்கள் குடும்ப உறுப்பினர்கள், தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றிற்கு இக்காலகட்டத்தில் சிறிது நேரம் தான் ஒதுக்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :மழை, குளிர் காலங்களில் கொரோனா வைரஸ் அதிகம் பரவுமா? புதிய ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil