Tamil Nadu latest news today live updates Anti CAA protests : கடந்த வெள்ளிக் கிழமையன்று வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய சமூகத்தினர் ஒன்றிணைந்து மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 2018ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது அம்மாநில டி.ஐ.ஜியாக இருந்த கபில் குமார் தலைமையிலான காவல்துறையினர் இந்த போராட்டத்தினை கலைக்க போராடிய மக்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு கலவரமான சூழல் நிலவியது. இந்நிலையில் மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினரை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அது தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் இங்கே காணவும்.
மாஸ்டர் பட பாடல்
பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மாஸ்டர் பட சிங்கிள் ட்ராக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகும் இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைப்பில் வெளியாக உள்ளது. தன்னுடைய சொந்த குரலில் இந்த பாடலை பாடியுள்ளார் விஜய். இந்த பாடல் குறித்த வீடியோ தொகுப்பு கீழே
முதல்வராக பதவி ஏற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த நிகழ்வில் பங்கேற்க அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய கட்சி தலைவர்களை அழைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Live Blog
இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த மூன்று நாட்களாக சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமிய தலைவர்களை இன்று இரவு 9.30 மணியளவில் முதல்வர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றார். மாநில அரசு CAA மற்றும் NPR க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும், CAA ஐ திரும்பப் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்து போராட்டம் நடைபெற்று வந்தது.
புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேரை பிப்.28 வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த 11 பேர் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
2020-21 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது இந்தியா ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்யும் இந்தியா நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. மேலும், 2021 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இந்தியா- இங்கிலாந்து விளையாடும் ஐந்து டெஸ்ட் போட்டி தொடர்களில் ஒன்று பகலிரவு போட்டியாக இருக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத 14 கிலோ எடை கொண்ட இன்டேன் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வை மத்திய அரசு ஏற்றியது. எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மன்னார்குடியில் கும்மியடிக்கும் போராட்டத்தில் மாதர் சங்கத்தினர் ஈடுபட்டனர். எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
देखिए कैसे दिल्ली पुलिस पढ़ने वाले छात्रों को अंधाधुंध पीट रही है। एक लड़का किताब दिखा रहा है लेकिन पुलिस वाला लाठियां चलाए जा रहा है।
गृह मंत्री और दिल्ली पुलिस के अधिकारियों ने झूठ बोला कि उन्होंने लाइब्रेरी में घुस कर किसी को नहीं पीटा।..1/2 pic.twitter.com/vusHAGyWLh
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 16, 2020
தில்லி காவல்துறை கண்மூடித்தனமாக படிக்கும் மாணவர்களை தாக்கியதை பிரியங்கா காந்தி கண்டித்துள்ளார். மேலும், உள்துறை அமைச்சகமும் டெல்லி காவல்துறை அதிகாரிகளும் நூலகத்திற்குள் நுழைந்து யாரையும் தாக்கவில்லை ஏன் பொய் சொன்னார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இனியும் , ஜாமியாவில் நடந்த வன்முறைகள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசாங்கத்தின் நோக்கம் முற்றிலும் வெளியே வரும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு மகாராஷ்டிராவில் போலி பாஸ்போர்ட்டுடன் கைதாகி தலைமறைவாக இருந்தவர் நைஜீரிய கால்பந்து வீரர் இமானுவேல் யூக்கோச்சியா. அவரை பல ஆண்டுகளாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில் கோழிக்கோட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 7 நபர்களில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பல்வேறு கோரிக்கைகளை வைத்த நிலையில் ஆளுநரே தன்னுடைய முடிவினை சுதந்திரமாக எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் பேரறிவாளன் விடுதலைக்கு முதல்வர் உதவ வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.
கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குமுளியின் அருகே உள்ள ஹெவி என்ற பகுதியில் வசித்து வருகின்றனர் மலைவாழ் தம்பதிகளான ரஞ்சித் மற்றும் அம்பிளி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அம்பிளிக்கு பிரசவ வலி ஏற்பட முதலில் அவர் வண்டிப்பெரியாறு சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு பிரசவம் பார்க்க முடியாத சூழல் ஏற்பட அங்கிருந்து காஞ்சிரப் பள்ளி கொண்டும் செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமாக ஆம்புலன்ஸில் வந்த ஆண் செவிலியர் மற்றும் ஓட்டுநர் பிரசவம் பார்த்துள்ளனர்.
கடலூர் குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலக்கடலை அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நிலக்கடலை அறுவடையின் போது அதிக அளவு மகசூல் கிடைத்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இது எனக்கான வெற்றி அல்ல, டெல்லி மக்களுக்கான வெற்றி என முதல்வராக பதவியேற்ற பின் அரவிந்த் கெஜ்ரிவால் ராம்லீலா மைதானத்தில் பேசியுள்ளார். மாநில மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசோடு இணைந்து பணியாற்றுவோம் என்றும் பேச்சு.
சமீபத்தில் இந்தியாவின் குடியுரிமை சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை எதிர்த்து பலரும் தங்களின் கருத்துகலை பதிவு செய்தனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக கட்சி பெற்ற கையெழுத்து படிவங்கள் அனைத்தும் டெல்லிக்கு அனுப்பப்பட்டன. கையெழுத்து பெற்ற படிவங்கள் வரும் 19ம் தேதி குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கப்படும்
உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் தன்னுடைய வாரணாசி தொகுதிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள ஜங்கம்வாடி மாத்த்ஹில் பிரார்த்தனை மேற்கொண்டார். அந்த நிகழ்வின் போது அவருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனிருந்தனர்.
சரியாக 12:30 மணிக்கு டெல்லி முதல்வராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால். பதவி பிரமாணாம் மற்றும் ரகசியகாப்பு பிரமாணம் செய்து வைத்தார் டெல்லி ஆளுநர் பைஜால். டெல்லி துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார் மணீஷ் சிசோடியா. கோபால் ராய், கைலாஷ் கலோட், இம்ரான் ஹூசைன் ஆகியோரும் தற்போது பதவி ஏற்றுக் கொண்டனர்.
சேலம் ஆத்தூர் பகுதியில் சிசிடிவி கேமராவை திருடியவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு இருப்பவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. சிசிடிவி கேமராவை திருடச் சென்றவரை அந்த கடை உரிமையாளர் தன் நண்பர்களுடன் சேர்ந்து அடித்ததால் அவர் பலத்த காயம் அடைந்தார். 7ஆம் தேதி வசிஷ்ட நதி பாலம் அருகே உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த திருடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலையில் இருந்து தொடங்கிய ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சமூக நலத்துறை செயலர், ஆலிஸ் வாஸ் கொடியசைத்து இந்நிகழ்வை துவக்கி வைத்தார்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. 10ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் இன்று தேனி, அரியலூர், தருமபுரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டு மூன்று ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பாமக நிறுவர் டாக்டர். ராமதாஸ்
முதலமைச்சர் பதவியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள். ஏழைகள், உழவர்கள், மாணவர்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி சாதனை தொடரவும் வாழ்த்துகிறேன்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 16, 2020
நடுக்கடலில் 14 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து பைபர் படகு மூலமாக தனுஷ்கோடிக்கு கடத்த முயன்ற ரூ.5.40 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்கம், திருட்டு நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி தனுஷ்கோடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.
தாமிரபரணி நதியில் மாசினை உண்டாக்கும் கழிவுகள் கலக்கப்பட்டு வருவதை தடுக்க கோரிய வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயம் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளுமாறு உத்திரவிட்டிருந்தது. தாமிரபரணி நதி தொடங்கும் பாபநாசம், திருப்படைமருதூர், சேரன்மகாதேவி உள்ளிட்ட10 இடங்களில் ஆற்று நீரின் மாதிரிகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சேகரித்தனர். இந்த ஆற்று நீரின் மாதிரிகளின் ஆய்வுகளின் முடிவுகள் மார்ச் 17ம் தேதி சமர்ப்பிக்கப்படும்.
Tamil Nadu news today live updates : Rajini news நேற்று ரஜினிக்கு நிகர் தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என்றும், அவருக்கு நிகராக இருக்கும் ஒரே நடிகர் அஜித் தான். அது விஜய் கிடையாது. அஜித் தலை என்றால் ரஜினி மலை என்று அமைச்சர் ராஜேந்த்ர பாலாஜி பேசினார். இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் முதல் வெளியே வந்து குரல் கொடுப்பது நானாகதான் இருப்பேன் என்று ரஜினி குறியிருந்தார். ஆனால் வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டது குறித்து அவர் கருத்து ஏதும் கூறாமல் இருந்ததால் ரஜினி நேற்று ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியோ ரஜினி ஒரு போதும் அரசியல் கட்சி துவங்கவே மாட்டார் என்று கூறியிருந்தார். அது தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் இங்கே அறிந்து கொள்ளுங்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights