குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் : 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்

Anti - CAA Protest Updates : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் நடத்தி வரும் போராட்டம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

By: Feb 16, 2020, 9:57:40 PM

Anti – CAA Protest live Updates : சென்னையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் என்ன நடந்தது?

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை – சென்னை போலிஸ்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை, வண்ணாரப்பேட்டையில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த இஸ்லாமியர் போராட்டத்தின்போது போலீஸ் மற்றும் போராட்டக்கார்கள் நடுவே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, தமிழகம் முழுக்க இஸ்லாமியர்கள் இரவோடு போராட்டத்தில் குதித்தனர். எனவே மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், முஸ்லீம் அமைப்பு தலைவர்களை சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்ய்பப்டடனர். போராட்டத்தை இஸ்லாமிய அமைப்புகள் முடித்துக் கொண்டன.

Live Blog
Anti - CAA Protest Updates : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் நடத்தி வரும் போராட்டம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
18:25 (IST)16 Feb 2020
தேர்தல் களத்தில் மீண்டும் போராட தயாரா? - சிவா சேனாவிற்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் கேள்வி

கோரேகான் பீமா வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றியமைத்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு நான் நன்றி கூறுகிறேன். புலனாய்வு  விசாரணையில் உண்மை வெளிவரும் என்று அஞ்சியதால் ஷரத் பவார் அதை எதிர்க்கின்றார் என்று மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.   நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தால் தேர்தல் களத்தில் மீண்டும் போராட நான் (சிவசேனா) சவால் விடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

14:51 (IST)16 Feb 2020
ஷாஹீன் பாக்தான் இன்ஸ்பிரேஷன்!’ - சென்னையில் பெண்கள் முன்னெடுத்த போராட்டம்

போலீஸாரைக் கண்டித்தும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பென்சில் பேக்டரி அருகில் பெண்கள் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஷாஹீன் பாக் போராட்டத்தைப் போலவே பெண்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டைப் பகுதியில் இஸ்லாமியர்கள் நடத்திவரும் போராட்டம் 3வது நாளை எட்டியிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பேசுகையில், ``டெல்லி ஷாஹீன் பாக் போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. அதேபோல் நாங்களும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம். மத்திய அரசு சி.ஏ.ஏவைத் திரும்பப் பெற வேண்டும்’’ என்றனர்.

12:33 (IST)16 Feb 2020
CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் - போராட்டக்காரர்கள் கோரிக்கை

தமிழக சட்டப் பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று தமிழத்தின் பலபகுதிகளில் போராட்டம் நடத்திவரும் முஸ்லீம்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

11:51 (IST)16 Feb 2020
6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மேற்பார்வையில் ஆறு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்க்குமார் சிங் மதுரை மாநகர் மற்றும் மதுரை சரகத்திற்கும், கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் திருநெல்வேலி மாநகர் மற்றும் நெல்லை சரகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. முருகன் நெல்லை சரகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

11:04 (IST)16 Feb 2020
நெல்லை : போலிஸ் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தைதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.10:23 (IST)16 Feb 2020
முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி சந்திப்பு

சிஏஏவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், முதல்வர் பழனிசாமியை, அவரது இல்லத்தில், டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

09:57 (IST)16 Feb 2020
வண்ணாரப்பேட்டையில் 3வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த 14ம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதைத்தொடர்ந்து இன்று மாநிலம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸாரின் தடியடியைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

08:58 (IST)16 Feb 2020
சென்னை மண்ணடி பகுதியில் தொடரும் போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, சென்னை மண்ணடியில், இஸ்லாமியர்கள் இரவும் தொடர்ச்சியாக தர்ணா நடத்தி வருகிறார்கள். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கணிசமாக பங்கேற்றுள்ளனர்.

08:54 (IST)16 Feb 2020
அரசியல் தலைவர்கள் நேரில் ஆதரவு

இஸ்லாமியர்களின் இந்த போராட்டத்துக்கு தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி, மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்கள் ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டியன், அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப், ஆம் ஆத்மி தமிழக நிர்வாகி வசீகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

Anti - CAA Protest Updates : சென்னை வண்ணாரப்பேட்டையில் அதே இடத்தில் முஸ்லிம்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். தாம்பரம், திருவொற்றியூர், பூந்தமல்லி அருகே உள்ள குமணன்சாவடி ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆவடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் போராட்டம் : மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Web Title:Caa anti caa protest chennai tamilnadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X