/tamil-ie/media/media_files/uploads/2018/01/mk-stalin-eps....jpg)
Vellore By Election, dmk kathir anand, A.C.Shanmugam, வேலூர் நாடாளுமன்றத் தொகுதி, வேலூர் லோக்சபா இடைத் தேர்தல்
Tamil nadu updates today: இன்றைய தினத்தின் டாப் செய்திகள் சுருக்கமாக..
இன்று காலை கிண்டியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “ தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வதாக மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை” என்பதை பலமுறை நிரூப்பித்து விட்டோம் என்றார்.
பின்னர், சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், நடைபெற்ற நகரத்தார்களின் சர்வதேச வணிகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசிய அவர், கல்வி, தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர் என்றார். அடுத்த தலைமுறையின் போது இந்தியர்கள்தான் மற்ற நாட்டினருக்கு குருவாக இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் நீட் தேர்வு ரத்து செய்ய முகாந்திரம் இல்லாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates : இன்று தமிழகத்தில் நடைபெறும் அரசியல் சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் லைவ் செய்தியாக உங்கள் பார்வைக்கு!
அண்ணாவும், கருணாநிதியும் போராடிய மாநில சுயாட்சிக்கு எதிராக, ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே கல்விமுறை, ஒரே மொழி என்று உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு கூட்டாட்சிக்கு எதிரான நிலை உண்டாகும் போது ஆர்ப்பரித்து நிற்க வேண்டாமா? - திமுக தலைவர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில், பொதுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்றும், மேகதாதுவில் கர்நாடகா தடுப்பணை கட்டுவதை தடுத்த நிறுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்'' எனவும் வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்த திமுக நினைத்திருந்தால் காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம் என கூறினார். அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், சுதந்திர நாளன்று தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தது திமுக என்றும், சேதுசமுத்திர திடடம், மண்டல் கமிசன் திமுக முயற்சியால் தான் வந்தது என்றும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி, அதிகாரத்தில் இருந்த திமுக, தமிழகத்திற்கு தேவையான நன்மைகளை செய்ய தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
நிதித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீது பதிலுரை வழங்கிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.5000லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.2000 லிருந்து ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும், மும்பையில் தமிழ்நாடு இல்லம் அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், “தமிழக வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்னையில் வீடு கட்டித் தரப்படும். இதற்கான பணத்தை அவர்கள் தவணை முறையில் செலுத்திக்கொள்ளலாம். சென்னை நந்தனம் மற்றும் கே.கே. நகரில் 318 அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படும்” என்றும் தெரிவித்தார்
தேர்தல் முடிந்த நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. 28-ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ மஸ்தான் அதிக கேள்விகளை எழுப்பியதாக சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். மானியக் கோரிக்கை மீதான விவாதங்களில் 129 உறுப்பினர்கள் பேசினர். உறுப்பினர்கள் கேள்விகளுக்கு நினைவாற்றலுடன் அவ்வப்போது முதல் அமைச்சர் அளித்தார்.
அதிகமாக பதில் அளித்ததில் முதல் இடம் வேலுமணி, 2-ம் இடம் தங்கமணி, 3-வது இடம் செங்கோட்டையன் பிடித்தனர் என்றார். மக்கள் நலம் சார்ந்த அறிவிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடமால் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக, ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அத்திவரதர், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு, கோவிலில் மாவட்ட நிர்வாகம் போதுமான வசதிகளை செய்யவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்களை உடனடியாக அனுப்பி வைத்து போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பி.இ ஆன்லைன் கலந்தாய்வில் 3 ஆவது சுற்று மாணவர்கள் தங்கள் விருப்பக் கல்லூரியை உறுதி செய்ய இரவு 10 மணி வரை அவகாசம் நீட்டித்தது அண்ணா பல்கலைக் கழகம். மாலை 5 மணியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் இணையதள கோளாறு காரணமாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சந்தித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்; எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஏற்கனவே முதல்வரை சந்தித்த நிலையில் தற்போது பிரபுவும் சந்தித்து இருக்கிறார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்ஷித் காலமானார் 1998 - 2013 வரை டெல்லி முதல்வராக 15 ஆண்டுகளாக பதவி வகித்தவர். இவரின் இழப்பு காங்கிரசை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரயில் சேவை அடுத்த 6 ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே தண்டவாளப் பராமரிப்பு பணி நாளை (ஞாயிறு) முதல் அடுத்தடுத்த 6 ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கவுள்ளதால் அன்றைய தினங்களில் இந்த தடத்தில் 29 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
8 வழிச்சாலை, 'அதிவேக சாலை' என மாற்றப்பட்டுள்ளது. இனிமேல் 8 வழிச்சாலைகள் அதிவே சாலைகள் என அழைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி பேரவையில் அறிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா கிராமத்தில் நேற்று முன் தினம் நிலம் பிரச்சனைக் காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் காயமடைந்தனர். 10 பேர் உயிரிழந்தனர். இவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, நேற்று சோன்பத்ரா வந்தார். ஆனால், அவர்களை சந்திக்க பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் பிரியங்கா தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டார். அவரை காவல் துறையினர் அருகில் இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை சந்திக்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன் என பிரியங்கா உறுதிப்பட தெரிவித்தார். பின்னர், அவர் இருக்கும் இடத்திற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வருகை வந்தனர். விருந்தினர் மாளிகையில் வைத்து குடும்பத்தினரை சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், ஜாப்ரா பேட்டை பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.மக்கள் மத்தியில் பேசிய அவர், திமுக வெற்றி பெற்றால் நடைமுறை படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், அப்பகுதியில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியவில்லை என்றும் கதிர் ஆனந்த் குறம்சாட்டினார்.
எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.50 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக அதிகரிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி பேர்வையில் அறிவித்தார். சட்டப்பேரவை விதிகளின் படி எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.50 மட்டுமே இதுவரை இருந்து வந்த நிலையில், கூடுதலாக 50 லட்சம் சேர்த்து ரூ. 3 கோடியாக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையத்தின் இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் கோலோச்சிய தியாகராஜ பாகவதருக்கு ரூ.50 லட்சம் செலவில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் - என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். திருச்சியில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 110எண் விதிகளின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால் முதியோர்கள், உடல் நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் ஆகியோரை அழைத்து வருவோர் கோவிலுக்கு வருவதை கூடுமானவரை தவிர்க்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர் *. சென்னையில் கொத்தவால் சாவடியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை மேலப்பாளையத்தில் முகமது இப்ராஹிம் என்பவரது வீட்டில் சோதனை நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகளின் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வானிலை குறித்து முழு செய்தியை வாசிக்க.
ஒட்டு மொத்த அரசியல் தலைவர்களும் உற்று நோக்கி காத்துக் கொண்டிருக்கும் கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பை வரும் திங்களன்று ஒத்தி வைத்தார் கர்நாடகா சபாநாயகர் .
தேசிய கல்வி கொள்கை குறித்த எனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி நடிகர் சூர்யா இன்று அறிக்கை மூலம் நன்றி தெரிவிவித்துள்ளார். மேலும், தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் new-education-policy-2019 என்ற இணையதளத்தில் இம்மாத இறுதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் விழுந்த மின்கம்பங்கள் முழுவதும் ஒரு மாத காலத்தில் அகற்றப்பட்டு, விவசாயிகள் பயிர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார். நியாயவிலை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடும்ப நல நிதி ரூ 2 லட்சத்தில் இருந்து ரூ 3 லட்சமாக உயர்வு என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் - முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights