Tamil Nadu local body election results 2020 : ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று, கடந்த 2-ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது நிறைய இடங்களில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. அப்படி முறைக்கேடு நடைபெற்ற மாவட்டங்களில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக்கோரி திமுக வேட்பாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
Advertisment
தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?
இந்நிலையில், சேலம், திருவண்ணாமலை, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுகவினர் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக திமுக சார்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. முறைகேடு செய்து வெற்றி பெற்ற அதிமுகவினர் பதவி ஏற்க தடை கேட்டு தாக்கல் செய்யவுள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க அனுமதிக்கக்கோரி நேற்று தலைமை நீதிபதியை சந்திக்க திமுக வேட்பாளர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் முயன்றனர்.
Advertisment
Advertisements
தலைமை நீதிபதியை நேற்று சந்திக்க முடியாததையடுத்து இன்று காலை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்பு திமுக வேட்பாளர்கள் தரப்பில் அவசர வழக்காக விசாரிக்கக்கோரி முறையிடப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒருவரின் பதவி ஏற்பை தடுக்க முடியாது என தெரிவித்த தலைமை நீதிபதி திமுகவின் முறையீட்டை ஏற்க மறுத்தார். மேலும், இது தொடர்பாக தேர்தல் வழக்கு தொடர திமுக வேட்பாளர்கள் தரப்புக்கு அறிவுறுத்திய தலைமை நீதிபதி, மறுவாக்கு எண்ணிககைக்கு உத்தரவிடக்கோரிய திமுகவின் கோரிக்கையையும் நிராகரித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தனி நீதிபதியை வேண்டுமானால் அணுகலாம் என தலைமை நீதிபதி தெரிவித்ததை தொடர்ந்து திமுக வழக்கறிஞர்கள் நீதிபதி ஆதிகேசவலு முன்பு முறையிட்டனர். இது தொடர்பாக மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் அந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 225 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 17 மாவட்ட பஞ்சாயத்துகளில் பாமக வெற்றி பெற்றதை மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடக்கோரி பாமக வழக்கறிஞர் கே.பாலு நீதிபதி ஆதிகேசவலு முன்பு முறையிட்டார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.