Advertisment

Tamil Nadu news today updates : சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உட்பட 6 ஆட்சியர்கள் இட மாற்றம்!

Tamil Nadu news today updates : உலகெங்கும் நடைபெற்று வரும் முக்கியமான நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பினை நீங்கள் இங்கே படித்து அறிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today updates : வறட்சி பாதித்த 255 மாவட்டங்களில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவும் 255 அதிகாரிகள் தலைமையில் வல்லுனர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அதிகாரிகளின் கீழ் நீர் வள வல்லுனர்கள் அந்தந்த பகுதி மத்திய மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் உட்பட பலர் செயல்படுவர்.இப்போது நியமிக்கப்பட்டுள்ள 255 அதிகாரிகள் மத்திய அமைச்சகங்களின் கூடுதல் செயலர் அல்லது இணை செயலர்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள்.

Advertisment

சென்னையை குளிர்வித்த மழை! மகிழ்ச்சியில் மக்கள்!

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கை இடம்பெற்றிருந்தது. அதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மறைமுகமாக ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயல்கிறது என கட்சிகள் போர்க்கொடி துாக்கின. அதையடுத்து அந்த வரைவு திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.யு.ஜி.சி. செயலர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி பெற்ற அமைப்புகள். குறிப்பிட்ட பாடத்தை தான் கற்றுக் கொடுக்க வேண்டும் என எந்த கட்டாயமும் பல்கலைகள் மீது விதிக்கப்படவில்லை. 2018ல் யு.ஜி.சி. அனுப்பிய கடிதத்தில் உள்ள அம்சங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதில்லை; விருப்பமிருந்தால் பின்பற்றலாம் என்றார்.

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் போட்டியில் பாபர் ஆஸமின் சதம் கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, fuel price, political events : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழும் முக்கிய செய்திகள் தொகுப்பினை நீங்கள் இங்கு படித்துக் கொள்ளலாம்.














Highlights

    21:49 (IST)27 Jun 2019

    6 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்

    சென்னை, சேலம் உட்பட 6 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு. சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம். வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக மாற்றம். சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சென்னை இசைப் பல்கலைக் கழக பதிவாளராக மாற்றம். அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக மாற்றம். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் அரியலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம். தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர் மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றம்.

    20:41 (IST)27 Jun 2019

    சீன நிறுவனத்தின் சதி - வேதாந்தா

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில், சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியிலும், மக்கள் போராட்டத்தின் பின்னணியிலும் சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக வாதிட்டார். தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் முறைப்படி அனுமதி பெற்று ஆலை இயக்கப்பட்டதாகவும், துப்பாக்கி சூடு சம்பவம், அதை தொடர்ந்த விசாரணைகளில் ஆலையை சேர்க்கவில்லை எனக் குறிப்பிட்ட மூத்த வழக்கறிஞர், தங்கள் ஆலை தண்டிக்கப்பட்டதாக வாதிட்ட நிலையில், வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    19:10 (IST)27 Jun 2019

    'தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது'- கர்நாடக அமைச்சர்

    கர்நாடக விவசாயிகளுக்கே, தண்ணீர் இல்லை என்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது என்று, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவின் நிலை குறித்து, காவிரி ஆணையத்திடம் தெரிவித்து விட்டதாகவும், மழை பொழியவில்லை என்றால் கர்நாடகாவின் நிலை மேலும் மோசமடையும் என்றும் குறிப்பிட்டார்.

    16:48 (IST)27 Jun 2019

    Tamil Nadu News Live Updates - ஏன் நீக்கினார்கள் என்றே தெரியவில்லை!

    காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை. ப.சிதம்பரம் உள்ளிட்ட காங். மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளேன் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    15:49 (IST)27 Jun 2019

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் : டி.ராஜா

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால், தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படும் என்று மாநிலங்களவையில் எம்.பி. டி.ராஜா கூறினார். தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை ஏற்கனவே பூதாகரமாக உள்ளநிலையில், இந்த திட்டம் மேலும் மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என அவர் கூறினார்.

    15:22 (IST)27 Jun 2019

    முகிலன் விவகாரம் : சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் அவகாசம்

    முகிலனை எட்டு வார காலத்துக்குள் மீட்க வேண்டும் என்று சிபிசிஐடிக்கு  சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    15:03 (IST)27 Jun 2019

    சஸ்பெண்ட் ஏன்? : கராத்தே தியாகராஜன் கேள்வி

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து ஒருபோதும் நான் பேசியதில்லை. பலமுறை என்னை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். ஆனால், எதற்காக நீக்கினார்கள் என்று தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

    தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு கட்சிக்குள் இருந்த அழுத்தமா, வெளியில் இருந்த அழுத்தமா என தெரியவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

    14:35 (IST)27 Jun 2019

    கவர்னர் புரோகித் உடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு

    தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம், வரும் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய தலைமைச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் பொருட்டு, அமைச்சர் ஜெயக்குமார், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

    13:51 (IST)27 Jun 2019

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - நிலை அறிக்கையை சி.பி.ஐ தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    15ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

    13:20 (IST)27 Jun 2019

    காங்கிரசிலிருந்து கராத்தே தியாகராஜன் நீக்கம் : கட்சி தலைமை அறிவிப்பு

    கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜனை, காங்கிரஸ் கட்சி தலைமை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

    publive-image

    இந்த நீக்கம், உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    12:42 (IST)27 Jun 2019

    நிரவ் மோடியின் ரூ.283 கோடி சொத்து முடக்கம்

    இந்திய வங்கியில் கடன் பெற்று மோசடி செய்து வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரிக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் உள்ள ரூ.283 கோடி சொத்தை, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று சுவிட்சர்லாந்து அரசு முடக்கியுள்ளது.

    12:09 (IST)27 Jun 2019

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கற்கோவில் பகுதியில் விவசாயிகள் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு முன் மண்சட்டியை வைத்து மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    11:45 (IST)27 Jun 2019

    சென்னை அருகே பிரிட்ஜ் வெடித்து 3 பேர் பலி

    சென்னை தாம்பரம் அடுத்த திருமங்கை மன்னன் தெருவை சேர்ந்த பிரசன்னா (32) பிரபல தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்  தனது மனைவி அர்ச்சனா தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் (28) மற்றும் தாய் ரேவதி (59) மூவரும் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவுநேரத்தில்  குளிர் சாதன பெட்டி வெடித்து தீப்பற்றி அறை முழுவதும் புகை மூட்டமானதால் மூச்சு திணறல் ஏற்பட்டு வெளியேர முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரழப்பு. காலையில் வீட்டு வேலை செய்யும் பெண் வெகு நேரமாகியும் கதவை திறக்காத்தால் வீட்டினுள் இருந்து புகை வருவதை கண்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து இறந்த நிலையில் இருந்த உடல்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் தீயணைப்பு துறையினர் மற்றும் சேலையூர் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க்கு வந்த போலிசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    11:19 (IST)27 Jun 2019

    ஒருநாள் கிரிக்கெட் ரேங்கிங் : முதலிடத்தில் இந்தியா

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC), ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.  இந்தியா 123 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.  122 புள்ளிளுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 116 புள்ளிகளுடன் நியூசிலாந்து 3வது இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் முறையே 4வது, 5வது மற்றும் 6வது இடங்களில் உள்ளன.

    10:56 (IST)27 Jun 2019

    கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலை - முதல்வர் பழனிசாமி அடிக்கல்

    சென்னை நெம்மேலியில் கட்லநீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு முதல்வர் பழனிசாமி, இன்று (ஜூன் 27ம் தேதி) அடிக்கல் நாட்டினார். ரூ.1,260 கோடி மதிப்பீட்டில் இந்த 2வது ஆலை அமைக்கப்பட உள்ளது. தினமும் 150 மில்லியன் லிட்டர் கடல்நீர், இந்த ஆலை மூலம் சுத்திகரிக்கப்பட உள்ளது. தென்சென்னை பகுதி மக்கள், இந்த 2வது ஆலை மூலம் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு முதல் முதல் ஆலை இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    10:38 (IST)27 Jun 2019

    சென்னை பல்கலைகழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு

    சென்னை பல்கலைகழக ஏப்ரல் 2019 செமஸ்டர் தேர்வு முடிவுகள் பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியாகியுள்ளன. அதிகளவிலான மாணவர்கள் தேர்வுமுடிவுகளை பார்த்துக்கொண்டிருப்பதால், அந்த இணையதளங்கள் முடங்கியுள்ளன. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    10:13 (IST)27 Jun 2019

    தினகரனின் பண்பாடு மோசமாக உள்ளது - தங்கதமிழ்செல்வன்

    தினகரனின் பண்பாடு மோசமாக உள்ளதாக தங்கதமிழ் செல்வன் கூறியுள்ளார்.  தங்களை சந்திப்பவர்கள் யார் என்பதை வெளியே சொல்வது நல்ல தலைமைக்கு அழகு அல்ல என்று தினகரனின் தலைமை குறித்து தங்கதமிழ்செல்வன் விமர்சனம் செய்துள்ளார்.

    09:58 (IST)27 Jun 2019

    நேர் கொண்ட பார்வை படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு : அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி

    09:56 (IST)27 Jun 2019

    டிரெண்டாகும் நேர் கொண்ட பார்வை படத்தின் 'வானின் இருள்’ பாடல்!

    09:33 (IST)27 Jun 2019

    தமிழக சுகாதாரத்துறை பின்தங்கியதற்கு திமுகவும் பொறுப்பு : பொன்.ராதாகிருஷ்ணன்

    நிடி ஆயோக் சார்பில் சுகாதாரத்துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு 3ம் இடத்தில் இருந்த தமிழகம், இந்தாண்டில், 9வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. முதலிடத்தில் கேரளா உள்ளது.

    தமிழக சுகாதாரத்துறை பின்தங்கியதற்கு ஆளும் அதிமுக அரசை மட்டும் குறை சொல்லாமல், இதற்கு திமுகவும் பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, மழைக்காக அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை செய்கின்றர்; நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    09:03 (IST)27 Jun 2019

    கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குநர் விஜயநிர்மலா காலமானார்

    அதிக படங்களை இயக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த தெலுங்குபட பெண் இயக்குநர் விஜயநிர்மலா(73) உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் காலமானார் .

    publive-image

    பழம்பெரும் நடிகையான விஜயநிர்மலா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில்  150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்

    08:59 (IST)27 Jun 2019

    Latest Tamil News : தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு : துவங்கிய சில நிமிடங்களில் முடிந்தது

    தீபாவளி பண்டிகைக்காக, வெளியூர் செல்லும் மக்களுக்கான தீபாவளி ரயில் முன்பதிவு ரயில்வே கவுண்டர்களில் தொடங்கியது . சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். குமரி, நாகர்கோவில், நெல்லை, மதுரை விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சிலநிமிடத்தில் முடிந்தது . பல முக்கிய ரயில்களில் காத்திருப்புப் பட்டியலில் கூட முன்பதிவு செய்ய இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    08:39 (IST)27 Jun 2019

    ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி

    ஜப்பானின் ஒசாகா நகரத்தில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, இந்தியா, ஜப்பான், ரஷியா, சவுதி அரேபியா, அமெரிக்கா உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து  விமானம் மூலம் ஜப்பானின் ஒசாகா நகருக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். இந்திய நேரப்படி, இன்று (ஜூன் 27ம் தேதி)  அதிகாலை 5 மணி அளவில் ஒசாகா நகருக்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை தொடங்கும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் அவர், ஜப்பான், சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

    08:33 (IST)27 Jun 2019

    ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை

    சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 7 காசுகள் அதிகரித்து ரூ.72.84 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து 5 காசுகள் அதிகரித்து ரூ.67.64 காசுகளாகவும் உள்ளது.

    Tamil Nadu news today live updates : உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் போட்டியில் பாபர் ஆஸமின் சதம் கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. 'நாடு முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட, 38.02 லட்சம் மத்திய அரசு பணியிடங்களில், கடந்தாண்டு, மார்ச், 1 நிலவரப்படி, 6.84 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, பணியாளர் நலத்துறை இணையமைச்சர், ஜிதேந்திர சிங் லோக்சபாவில் கூறியுள்ளார்.
    Tamil Nadu Rain In Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment