weather updates : தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடமாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யும். செவ்வாய்க்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம், புவனகிரியில் 80 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Karnataka News latest updates : பாகஜ ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகத்தில் முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி விலகிய நிலையில், நேற்று புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் ஆர்.எஸ்.பொம்மையின் மகனான இவர், கடந்த 2008-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து இருமுறை மேலவை உறுப்பினராக இருந்த இவர், 3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். இது தொடர்பான கூடுதல் செய்திகளைப் படிக்க
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:50 (IST) 28 Jul 20212-வது டி20 போட்டி: இந்திய அணி 132 ரன்கள் குவிப்பு
கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது. கேப்டன் தவான் 42 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.
- 21:24 (IST) 28 Jul 2021தமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் 2-வது அலை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 1,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 29 பேர் பலியாகியுள்ளனர்.
- 20:02 (IST) 28 Jul 2021உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இணையமைச்சர் எல்.முருகன் சந்திப்பு
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர் இன்று பாராளுமன்ற இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
- 18:55 (IST) 28 Jul 2021மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்
டெல்லியில் சினிமா திருத்த சட்டம் குறித்து தந்த மனு பற்றி வெளியே சொல்ல அனுமதி இல்லை என்று கூறியுள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமானகமல்ஹாசன், என்னுடைய கருத்து என்னவாக இருக்கும் என தெரிந்தும், கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்த மத்திய அரசுக்கு நன்றி என கூறியுள்ளார்.
- 18:53 (IST) 28 Jul 2021சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை
தேனி சின்னமனூர் அருகே 2017ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தர்மர் என்பவருக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தேனி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- 18:51 (IST) 28 Jul 2021விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று பதக்கங்கள் வெல்லும் வகையில் உலக தரத்திலான பயிற்சி வழங்கிட வேண்டும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆய்வு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
- 17:59 (IST) 28 Jul 2021நடிகர் ஆர்யா மீது மோசடி வழக்கு
மனைவி சாயிஷாவை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நடிகர் ஆர்யா ரூ.70 லட்சம் பண மோசடி செய்ததாக ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 17:07 (IST) 28 Jul 2021பாஜகவிற்கான எதிர்ப்பு வலுவாக இருக்கும் - மம்தா பானர்ஜி
பாஜக வலுவான கட்சி, எதிர்ப்பும் வலுவாக இருக்கும்; எதிர்ப்பு வரலாறு படைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- 16:39 (IST) 28 Jul 2021காவிரி வழக்கு; முதல்வர் ஸ்டாலின் உட்பட 7 பேர் விடுவிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உட்பட 7 தலைவர்களை விடுவித்தது சிறப்பு நீதிமன்றம்.
- 16:28 (IST) 28 Jul 2021அபராதமாக ரூ.1 லட்சம் செலுத்த விரும்பவில்லை- நடிகர் விஜய்
கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு ரூ.25 லட்சம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. அபராதமாக ரூ.1 லட்சம் செலுத்த விரும்பவில்லை. நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல். சொகுசு காருக்கு நுழைவுவரி செலுத்த தடைக்கோரி விஜய் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தார் தனி நீதிபதி
- 16:17 (IST) 28 Jul 2021கொரோனா எச்சரிக்கை; மாநிலங்களுக்கு உள்துறை செயலாளர் கடிதம்
பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் உரிய கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்
- 16:16 (IST) 28 Jul 2021உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது என்றும் கொரோனாவின் ஆரம்ப காலத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவியது என்றும் தற்போது இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா பெருமைக்கொள்கிறது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்
- 16:15 (IST) 28 Jul 2021உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது- அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது என்றும் கொரோனாவின் ஆரம்ப காலத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவியது என்றும் தற்போது இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா பெருமைக்கொள்கிறது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்
- 16:14 (IST) 28 Jul 2021உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது என்றும் கொரோனாவின் ஆரம்ப காலத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவியது என்றும் தற்போது இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா பெருமைக்கொள்கிறது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்
- 16:13 (IST) 28 Jul 2021காங். எம்.பி. மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி உட்பட 10 எம்.பி.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க தடை
மக்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகமாக செயல்பட்டதால் காங். எம்.பி. மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி உட்பட 10 எம்.பி.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது
- 15:34 (IST) 28 Jul 2021மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் - பசவராஜ் பொம்மை
மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்குதான் அதிகப்பலன் எனவும் கூறியுள்ளார்.
- 15:21 (IST) 28 Jul 2021வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு ஒத்திவைப்பு
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அரசாணைக்கு எதிரான வழக்கை ஆகஸ்ட் 2வது வாரத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மனுதாரர் தரப்பில் 10.5% இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தினால் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் சிறப்பு இடஒதுக்கீட்டால் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அரசாணைக்கு தடை விதிக்கவேண்டிய அவசியமில்லை என விளக்கமளித்தது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
- 14:47 (IST) 28 Jul 2021ரூ.10 லட்சத்தை முதல்வர் நிதிக்கு வழங்கும் என்.சங்கரய்யா
தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.10லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா அறிவித்துள்ளார். தனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்ட தகைசால் தமிழர் விருதுதை ஏற்பதோடு முதல்வருக்கு நன்றி கூறுவதாக தெரிவித்துள்ளார்.
- 14:05 (IST) 28 Jul 2021இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் வெற்றி
ஒலிம்பிக் வில்வித்தை போட்டி, ஆடவர் ஒற்றையர் பிரிவில், வெளியேற்றுதல் சுற்றில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் வெற்றி பெற்றுள்ளார்.
- 14:00 (IST) 28 Jul 2021இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்
தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
- 13:43 (IST) 28 Jul 2021எதிர்கட்சிகளின் குரல்கள் நெறிக்கப்படுகின்றன
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்கள் நெறிக்கப்படுகின்றன என்றும் அங்கு இடையூறு ஏற்படுத்தவில்லை தங்கள் கடமையை மட்டுமே செய்வதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
- 12:44 (IST) 28 Jul 2021சங்கரய்யாவுக்கு ’தகைசால் தமிழர்’ விருது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
- 12:44 (IST) 28 Jul 2021கொரோனா நிலை பொறுத்து கல்லூரிகள் திறப்பு
கொரோனா தொற்றின் நிலையைப் பொறுத்து கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
- 11:14 (IST) 28 Jul 2021தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆச்சு? - ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். போராட்டம்
தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் தேனியில் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடியில் பழனிசாமியும் பதாகைகள் ஏந்தி போராட்டம்
- 10:53 (IST) 28 Jul 2021உள்துறை அமைச்சருடன் மோடி ஆலோசனைக் கூட்டம்
பிரதமர் அலுவலகத்தில் தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ப்ரல்ஹாத்துடன் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.
- 10:30 (IST) 28 Jul 2021கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 640
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43, 654 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 640 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,99,436 ஆகவும், இதுவரை 3,06,63,147 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- 10:28 (IST) 28 Jul 2021தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசிகள் வழங்கும் பணி ஆரம்பம்
தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். பங்களிப்புகளுடன் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக இன்று முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் இந்த திட்டத்தை துவங்கி வைத்தார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின். முதல் கட்டமாக 36 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
- 09:49 (IST) 28 Jul 2021ஆகஸ்ட் 2 முதல் 6 வரை தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் குடியரசு தலைவர்
தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்க உள்ள குடியரசுத் தலைவர் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
- 09:46 (IST) 28 Jul 2021தங்கத்தின் விலை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 144 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 36,160 ஆகும்.
- 09:13 (IST) 28 Jul 2021இந்திய மகளிர் அணி தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் பிரிட்டன் மகளிர் அணி 4-1 என்ற கோல்கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
- 08:51 (IST) 28 Jul 2021பி.வி. சிந்து வெற்றி
டோக்கியோவில் நடைபெற்று ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்று முன்னேறியுள்ளார். ஹாங்காங் வீராங்கனையை 21-9, 21 - 16 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளார் பி.வி. சிந்து.
- 08:31 (IST) 28 Jul 2021ஒலிம்பிக் 2020 வில்வித்தைப் போட்டி
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் தருண் தீப் ராய் உக்ரைன் நாட்டு வீரரை 6க்கு 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
- 08:19 (IST) 28 Jul 2021பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் தொடர்ந்து 11வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.49க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.39க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- 08:13 (IST) 28 Jul 2021பொறியியல் வகுப்புகள்
பொறியியல் படிப்பிற்கான வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி அன்று துவங்கும் என்றும் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13ல் துவங்கும் என்றூம் அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
- 08:04 (IST) 28 Jul 2021பெகாசஸ் விவகாரம் - நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை
பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலியுறுத்துவது என முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்.பிகள் பங்கேற்பு.
- 08:04 (IST) 28 Jul 2021கர்நாடகாவின் 23வது முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் பசவராஜ் பொம்மை
கர்நாடகாவின் 23வது முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று காலை 11 மணி அளவில் பதவி ஏற்கிறார். முதல்வர் பொறுப்பில் இருந்து எடியூரப்பா விலகிய நிலையில் இன்று பதவி ஏற்கிறார் அவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.