Tamil nadu news today updates : உலகையே உலுக்கி கொண்டிருக்கும் 'கொரோனா' வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் 28 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 'ஐரோப்பிய நாடான இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு வந்த 16 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணியரும் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...
இந்த ரணகளத்திலும் குதூகலம் தேவையா சார்மி?
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
குடியுரிமை திருத்த சட்டத்தை(சிஏஏ) எதிர்ப்பது தேசதுரோகம் என பா.ஜ., தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்தார் . திருப்பூரில் நடந்த விழாவில் அவர் மேலும் பேசியதாவது, 'நாட்டில் ஊடுருவல்காரர்களை கண்டெடுத்து களைவதற்காகவே சி.ஏ.ஏ., சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தை எதிர்ப்பது தேசதுரோகமாகும். சென்னை, தேனி, தாராபுரம் போன்ற இடங்களில் நடந்த சி.ஏ.ஏ., எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை நடந்துள்ளது. இது பெரிய கலவரத்தை ஏற்படுத்த போராட்டகாரர்கள் தங்களை 'வார்ம் அப்' செய்து கொள்கிறார்கள் என்றே கருதுகிறேன். தேசிய மக்கள் கணக்கெடுப்பின் போது மக்களின் சுய விபரங்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. இந்த விபரங்களை தருவதற்கு யாரும் தயங்க தேவையில்லை என அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது YES BANK
YES வங்கியை நிர்வகிக்க எஸ்பிஐ வங்கியின் முன்னாள் அதிகாரி பிரசாந்த் குமாரை நியமித்து ஆர்பிஐ உத்தரவு
YES வங்கியில் வைப்புத்தொகை வைத்துள்ளோர் ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க கட்டுப்பாடு விதிப்பு
மக்களவையில் 7 காங்கிரஸ் எம்பிக்களை இடைநீக்கம் செய்தது ஜனநாயக விரோதமானது என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வேளாண் மண்டலத்தால் விவசாய கூலித்தொழிலாளிகளுக்கு ஏதேனும் பலன் கிடைத்துள்ளதா...? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை: தமிழகத்தில் 54 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,243 பயணிகள் தங்களின் வீடுகளிலேயே மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
அத்துமீறி இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.
குப்வாரா எல்லைப் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தி பாகிஸ்தானின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.
இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையா உள்ளது ஆஸ்திரேலிய அணி
நடிகர் ஆனந்தராஜின் சகோதரர்களில் ஒருவரான கனகசபை (55), வீடு அண்ணா சாலையொட்டி திருமுடிநகரில் உள்ளது. வட்டிக்கு பணம் தருவது மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்த கனகசபை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், கனகசை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் பயப்பட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறிய நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகிறார். அவர் கூறுவது, டைட்டானிக் கப்பல் மூழ்காது; யாரும் பயப்பட வேண்டாம் என்று கேப்டன் தனது பயணிகளுக்குச் சொல்வது போல இருக்கிறது. கரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு ஒரு நிலையான, உறுதியான திட்டத்தை வழங்க வேண்டிய நேரம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஏற்கெனவே 3 முறை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் டெல்லி பாட்டியாலா உயர் நீதிமன்றம் குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகிற 20-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், “கட்சி தொடங்குவது பற்றி ஒரு ஆண்டுக்குப் பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்தேன். மாவட்ட செயலாளர்களிடம் நிறைய கேள்வி இருந்தது. அதற்கு எல்லாம் நான் பதில் கொடுத்தேன். நிறைய விஷயங்களை பரிமாறிக்கொண்டோம். அவர்களுக்கு எல்லாம் திருப்தி. ஆனால், ஒரு விஷயத்தில் எனக்கு அவ்வளவு திருப்தி கிடையாது. எனக்கு ஏமாற்றாம்தான். அது என்னவென்று இப்போது சொல்லமாட்டேன். நேரம் வரும்போது சொல்கிறேன்.” என்று கூறினார்.
தனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் உள்ளது. அதனை பின்னர் சொல்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தினேன். தனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் உள்ளது. அதை பின்னர் சொல்வதாக அவர் தெரிவித்தார்.
அதிமுக அரசு, மக்களின் நலனை உணர்ந்து எதிர்கால திட்டங்களை வகுப்பதில் சிறந்து விளங்குவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில், பன்னீர்செல்வம் இவ்வாறு பேசினார்.
மார்ச் 26ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,அதிமுகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தான் கேட்டதாக வந்த வதந்திக்கு பா.ஜ. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை அப்புறப்படுத்த தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டவிரோதமாக நடைபெறும் போராட்டங்களை தடுக்க கோரி வழக்கறிஞர் கோபிநாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை நீதிபதி சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு விசாரித்தது. அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் நடைபெறும் சட்ட விரோத போராட்டங்கள் தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனுமதியின்றி போராட்டம் நடத்தும் அனைவரையும் அப்புறப்படுத்துமாறு டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
பெண்கள் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது.
பெண்கள் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதி போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று ( 5ம் தேதி) மோதின. மழை குறுக்கிட்டதால், பால் எதுவும் வீசப்படாத நிலையில், போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. புள்ளிகள் கணக்கில் இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதிப்போட்டியில், தென் ஆப்பிரிக்க - ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன. இதில் ஜெயிக்கும் அணி, இறுதிப்போட்டியில், இந்தியாவை எதிர்கொள்ளும்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த சுனில் கர்மாகர் என்பவருக்கு நாய் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சுனில் கர்மாகர் கூறியதாவது: என்னை அழைத்த அதிகாரிகள், திருத்தம் செய்த வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்தனர். அதில், எனது புகைப்படத்திற்கு பதில் நாய் புகைப்படம் இருந்தது. அட்டையில், அதிகாரியும் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், அவரும் அதனை பார்க்கவில்லை. அதிகாரிகள் எனது கவுரவத்துடன் விளையாடுகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் , உயர்கல்வித்துறை சார்பில் ரூ.7.98 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, தமிழகத்தில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்தன. மாவட்டச் செயலாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஒற்றுமையில்லாத சூழல் நிலவுவதால், அவர்களை ஒற்றுமையாக செயல்படுமாறு அறிவுறுத்த ரஜினிகாந்த் விரும்பியதாக கூறப்படுகிறது.
இதற்காக மாவட்டச் செயலாளர்கள் 38 பேரும் சென்னைக்கு புறப்பட்டு வருமாறு தொலைபேசியில் அழைக்கப்பட்டுள்ளனர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, காணொலிக்காட்சி மூலம் ரஜினிகாந்த் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் புதிய நிர்வாகிகள், பூத் கமிட்டிகள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்றும், கிராமங்களில் ரஜினி மக்கள் மன்றம் இயங்கும் விதம் குறித்து பேசப்படும் என்றும் தெரிகிறது.
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி தினமும் ஆய்வு செய்து வருகிறார் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். அவர் கூறியதாவது: வைரஸ் பாதிப்பை சமாளிக்க, அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. நிலைமை குறித்து, பிரதமர் மோடி, தினமும் ஆய்வு செய்து வருகிறார். அண்டை நாடுகளான வங்கதேசம் உள்ளிட்ட எல்லைகளிலும், பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தற்போது, மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள மையத்தில் மட்டுமே, ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும், 19 இடங்களில், கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights