Tamil News : 2ம் தலைநகர் குறித்த அமைச்கர்களின் கருத்து, அரசின் கருத்தல்ல என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். வருவாய்த் துறை அமைச்சார் உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக, மதுரையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்த ஆலோசனையை பல்துறை நிபுணர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என, பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
எப்போது ஓயும் இந்த போஸ்டர் யுத்தம் – தலைமை உத்தரவுக்கு பிறகும் அடங்காத வேட்கை
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகும் பணியிடங்களை நிரப்புவதற்கு, நாடு முழுதும், ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக, என்.ஆர்.ஏ., எனப்படும் தேசிய பணியாளர் தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
2ம் தலைநகர் குறித்த அமைச்கர்களின் கருத்து, அரசின் கருத்தல்ல என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்
முன்னதாக, வருவாய்த் துறை அமைச்சார் உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தமிழகத்திற்கு ஒன்றல்ல இரண்டல்ல மூன்று தலைநகரம் உருவாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
முதல் முறையாக, ஒரே நாளில் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,18,470 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்ட உள்ளது. இந்த சாதனையால், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை மொத்தம் 3.25 கோடிக்கும் அதிகமாகும் (3,26,61,252) என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் சில நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா திகழ்கிறது என்று தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவ துறையினர் ஆற்றி வரும் பணியை கண்டு நாடு பெருமிதம் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா பேரிடர் காலத்தில், ஊழியர்களின் ஊதியத்தையும், ஊக்கத்தொகையும் ஸ்விக்கி( swiggy) நிறுவனம் குறைத்துள்ளதால் , ஊழியர்களின் குடும்பங்கள் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டுள்ளது. ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என ஸ்விக்கி( swiggy) நிறுவனத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதயநோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில் தாயையும் சேயையும் மதுரை அரசு மருத்துமனை காப்பாற்றியுள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. கர்ப்பிணிக்கு இறுதி தருவாயிலும் நம்பிக்கையூட்டி மறுவாழ்வு அளித்த மருத்துவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! என்று துணை முதல்வர் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.
காங்கிரஸ் முன்னாள் எம்.எல். ஏ வேலுசாமி மறைவிற்கு திருநாவுக்கரசு இரங்கல் தெரிவித்தார்.
இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு வேலுசாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தியை அறிந்து மனம் மிக வருந்துகிறேன். அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
தன்னுடைய கடின உழைப்பையும், தியாகத்தையும் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும் என்று தான் கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் விரும்புவது. உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி என மோடியின் கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ளார் தோனி.
An Artist,Soldier and Sportsperson what they crave for is appreciation, that their hard work and sacrifice is getting noticed and appreciated by everyone.thanks PM @narendramodi for your appreciation and good wishes. pic.twitter.com/T0naCT7mO7
— Mahendra Singh Dhoni (@msdhoni) August 20, 2020
பின்னணி பாடகர் எஸ்.பி.பி. கொரோனா நோய் தொற்றில் இருந்து குணம் அடைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ட்வீட் வெளியிட்டுள்ளார்.
I pray for the quick recovery & good health of our most admired playback singer Sh SP Balasubramaniam ji. He created a heart-rendering video to boost the morale of lakhs of #CoronaWarriors in the country at a time when they were facing acute stigma in society#GetWellSoonSPBSIR https://t.co/czrSWqjeH2
— Dr Harsh Vardhan (@drharshvardhan) August 20, 2020
காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாயு தாக்கி லட்சுமணன் மற்றும் சுனில் ஆகியோர் மரணம். அவர்களின் பிரேதம் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது வாலாஜாபாத் காவல்துறை
விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் சிலைகள் வைக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது. விநாயகர் சிலை வைப்பது தொடர்பான அரசின் கொள்கை முடியில் தலையிட இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவிப்பு
சித்தமருத்துவ துறைக்கு ரூ. 437 கோடி மட்டும் நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு மீது சென்னை நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆயுஷ் என்ற வார்த்தையில் சித்தாவை குறிப்பிடும் ”எஸ்”- ஐ நீக்கிவிடலாமே என்று கேள்வி எழுப்பிய மத்திய அரசு, குறைந்த நிதி ஏன் ஒதுக்கப்பட்டது என்ற கேள்விக்கு விளக்கமளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 15ம் தேதி அறிவித்தார் கிரிக்கெட் வீரர் தோனி. அவர் கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத சக்தி என்று மோடி கடிதம் எழுதியுள்ளார். மேலும் தோனியின் அறிவிப்பால் 130 கோடி இந்தியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும் மோடி கருத்து
உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. பாப்டே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் இருந்தது குறித்து பிரசாந்த் பூஷன் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று அறிவித்தது. இது கூறித்து பேசிய பூஷன் தன்னால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது தண்டனைக்கு தயார் என்று கூறியுள்ளார்.
நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் வேண்டிகோளுக்கு இணங்க புதிய மார்க்கெட் கட்டித்தரப்படும் என்றும், தென்பண்ணை, பாலாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ. 648 கோடி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகங்கள் கட்டப்படும் என்று முதல்வர் அறிவிப்பு.
விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க அனுமதி கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இல.கணபதி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மக்களின் உணர்வை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் தளர்வு அறிவிக்க வாய்ப்புள்ளதா? என நாளை காலை விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 76வது பிறந்த நாளான இன்று, அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
On his birth anniversary, tributes to former Prime Minister Shri Rajiv Gandhi Ji.
— Narendra Modi (@narendramodi) August 20, 2020
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் ‌சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஊராட்சிமன்ற தலைவரான அமிர்தம், பட்டியலினத்தவர் என்பதால், அவரை தேசிய கொடியேற்ற விடாமல் ஊராட்சிமன்ற செயலாளர் சசிகுமாரும், துணைத் தலைவரின் கணவர் விஜயகுமார் உள்ளிட்டோர் தடுத்துள்ளனர். சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி தலைவர் அமிர்தம் இன்று தேசியக் கொடியேற்றினார் . ஆட்சியர் மகேஸ்வரி, எஸ்.பி.அரவிந்தன் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றினார் அமிர்தம்.
விநாயகர் சதுர்த்தியை பொதுமக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரசை முழுமையாக ஒழிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். கொரோனா தொற்றை குறைப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கவனமுடன் தளர்வுகளை அறிவித்து வருவதாக வேலூரில் பத்திரிகையாளர்கள சந்தித்த முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
'சந்தையில் விற்பனை செய்யப்படும், 35 மருந்துகள் தரமற்றவை' என, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights